Wednesday, July 6, 2011

தமிழகத்துக்கு ரூ.23 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கப்பட்டது!

 

மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடாக இந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு, ரூ.23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "நான் ஏற்கனவே எதிர்பார்த்தபடியே இந்த நிதி ஒதுக்கீடு இருப்பதால் எனக்கு திருப்திதான்.

இருந்தாலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கும்படி பிரதமரிடம், திட்டக்கமிஷன் எடுத்துக் கூறி அந்த நிதியை பெற்றுதரும் என்று நம்புகிறேன்' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

நடப்பு (2011-12) ஆண்டிற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து இறுதி செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நேற்று டில்லி வந்திருந்தார். மாலை 3.30 மணிக்கு திட்டக்கமிஷன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த முதல்வர், அங்கு திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விரிவான விளக்கங்களை முதல்வர் எடுத்துக் கூறினார். அவரது, "2025 தொலைநோக்கு திட்டம்' குறித்தும் விளக்கினார். நாங்கள் இப்போது 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்த ஆலோசனையில் உள்ளோம். 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கடைசி ஆண்டாக இது உள்ளது. இதில் 2011-12ம் நிதியாண்டிற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.23 ஆயிரத்து 535 கோடி என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அலுவாலியா கூறினார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: நாங்கள் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதே, தமிழகத்தில் உள்ள நதிககளை இணைக்கும் திட்டம் குறித்து கோரிக்கை வைத்திருந்தோம். அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.4,000 கோடி வரை அளிக்க வேண்டுமென்றும் கேட்டிருந்தோம்.

மாநில அரசின் கடன் சுமை என்பது தற்போது ரூ. ஒரு லட்சத்து ஆயிரத்து 541 கோடி என இருக்கிறது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனாக ரூ.45 ஆயிரம் கோடி உள்ளது. இந்த நிதிச்சுமையில் இருந்தெல்லாம் தமிழகத்தை மீட்டெடுக்க புனர்வாழ்வு நிதி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது மின்சார தட்டுப்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. அதற்கு ரூ.4,500 கோடி வரை அளிக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து, 2011 ஜூலை மாதத்திலிருந்து, 2012 மே வரை அளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தேன்.

மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குவதற்கும் நிதியுதவி கேட்டிருந்தேன். ரூ.10 ஆயிரம் கோடி வரை சூரியஒளி மின்சார தயாரிப்பு திட்டத்திற்கும் கேட்டிருந்தேன். இந்த கோரிக்கைகள் பற்றிய பதில் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...