Wednesday, July 6, 2011

திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...!

  •    லைவர் கருணாநிதி அவர்கள் ராமர் பதினான்கு வருட வனவாச காலத்தில் தான் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று சொல்லி உள்ளாரே இந்த வாசகத்தின் படி அவர் தன்னை ராமனாக நினைத்து கொள்கிறாரா?

  ப்போது நாட்டில் நடமாடுகிற தலைவர்கள் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை போடும் போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கும்

   எவ்வளவு நல்ல தலைவர்கள் இவர்கள்! செத்து போய்விட்டார்கள் என்ற தைரியத்தில் சிறிதளவும் தகுதியே இல்லாத மனிதர்கள் இவர்களை தொட்டு மாலை அணிவிக்கிரார்களே

  இந்த தலைவர்களும் எதாவது பாவம் செய்திருப்பார்கள் அதனால் தான் இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும்

  இதே எண்ணம் இப்போது ராமன் பெயரில் எனக்கு வருகிறது

  சீதா தேவியை தீ குளிக்க வைத்த பாவத்திற்காகத்தான் கலைஞரோடு ஒப்பிட வேண்டிய துர்பாக்கியம் ராமனுக்கு ஏற்பட்டிருப்பதாக தோன்றுகிறது

  இந்த ராமன் பேசாமல் கிரேக்கத்திலோ அமெரிக்காவிலோ பிறந்திருக்கலாம் தெரியாத்தனமாக இந்தியாவில் பிறந்து யார் யார் வாயிலோ பட்டு படாத பாடு படுகிறான்

  ராமன் இருக்கட்டு காய்த்த மரம் கல்லடி படுவது போல் அவனுக்கு என்றும் கஷ்டம் தான்

  நமது தானை தலைவர் உளறினால் காவியம் கிறுக்கினால் இலக்கியம் என்று கழக கண்மணிகள் துதிப் பாடுவார்களே அப்படிப் பட்ட இல்லக்கிய சூரியனின் இலக்கிய ஞானத்தை கண்டு சிரிப்பாக வருகிறது

  ராமன் வனவாசம் போகும் போது தாடகை எங்கே வந்தாள்? அவன் சிறுவனாக இருந்த போது யாகத்தை காக்க விசுவாமித்திரரோடு சென்ற போது தான் தாடகையை வதம் செய்தான்

  இத்தனை பெரிய இலக்கிய அறிஞருக்கு இது கூட தெரியாமல் எப்படி போனது?

   பொறாமையும் காழ்புணர்ச்சியும் வந்துவிட்டால் எப்பேர் பட்ட வீரனும் மண்ணை கவ்வுவான் என்பது இதன் மூலம் தெரிகிறது

  எது எப்படியோ ராமாயணத்தையும் ராமனையும் கலைஞர் அவர்கள் மறக்காமல் இருக்கிறாரே! கனிமொழியின் பிரிவு துயரத்தில் கூட ராமனை நினைக்கிறாரே! அது வரை அவர் பக்தி வாழ்க !


  •     மத்திய அரசுக்கும் ஜெயலலிதா அம்மையாரின் மாநில அரசுக்கும் நல்ல உறவு இருக்கிறதா?

  முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதைய மத்திய அரசு எல்லா விசயத்திலும் அதாவது தன்னை காப்பாற்றி கொள்ளும் விசயங்களில் சர்வ ஜாக்கிரதையாக செயல் படுகிறது என்றே சொல்ல வேண்டும்

  காமன் வெல்த் அலைக்கற்றை ஊழல்களை கையாள்வதில் துவங்கி அன்ன ஹசாரே ராம்தேவ் போன்றோர்களை அலைக்கழிப்பது வரையிலும் அதன் ஜாக்கிரதை தன்மை தெளிவாகவே தெரிகிறது

  தமிழ் நாட்டை பொறுத்தவரை திராவிட பரிவாரங்களை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பது மத்திய காங்கிரஸ் அறியாதது அல்ல

  முஸ்லிம் லீக் பாஜக பார்வாட் ப்ளாக் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு கூட கொடி பிடிக்க தொண்டர்கள் உண்டு அவைகளுக்கென்று  தனி ஒட்டு வங்கி கூட இருப்பதாக சொல்லலாம்

  ஆனால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தொண்டர்களே இல்லாமல் தலைவர்களை மட்டும் கொண்ட கட்சி

  இதற்கென்று ஊருக்கு ஒருவர் கூட ஓட்டு போட ஆள் கிடையாது

  அந்த சூழலில் இதுவரை சவாரி செய்த திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது

  இனி அதை நம்பினால் எந்த பலனும் இல்லை என்பது காங்கிரஸ் காரர்கள்  அறியாதது அல்ல

  வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தயவு கங்கிரஷுக்கு கண்டிப்பாக தேவை என மேல் மட்டம் கருதுகிறது

  இதனால் அம்மையார் அவர்கள் சிதம்பரத்தை திட்டினாலும் சோனியாவையே வசைமாரி பொழிந்தாலும் அவைகளை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள மத்திய காங்கிரஸ் தயாராக இல்லை

  எனவே தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு கனிவோடு பரிசிலிக்கும் என்பது எனது எண்ணம் 

  •  தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்றதற்கு ஈழ பிரச்சனை தான் காரணம் என்று சிலர் சொல்வது சரியா?

  நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர்கள் நான் மக்களோடு மக்களாக இருந்து மக்களை பார்ப்பவன் என்று

 அதை இங்கு வேறு மாதிரி சொல்ல விரும்புகிறேன் நான் தினசரி கோடிஸ்வரன் முதல் கோவணாண்டி வரையிலும் பலதரப்பட்ட மக்களை சந்திப்பவன்

  தினசரி மூன்று கிராமத்திற்காவது சென்று அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை மனோ நிலைகளை நேரடியாக பார்ப்பவன்

  முன்பை போல் இப்போதெல்லாம் தமிழக தமிழன் ஈழ தமிழனை பற்றி கவலைப் படுவது இல்லை

  தமிழகமே கொதித்து எழுவது போல் சில தலைவர்கள் மேடையில் பேசுவது அரசியலுக்காகவும் ஈழ மக்களை ஏமாற்றவும் தான்

  இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்து கொண்டியிருந்த போது பல்லாயிரம் தமிழ் உயிர்கள் ரத்த சேற்றில் மூழ்கி கொண்டியிருந்த போது தமிழக தமிழனின் பலரின் மனதில் ஒரு சிறிய சலனம் கூட ஏற்பட வில்லை என்பது யதார்த்தமாகும்

  அதனால் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போட்டார்கள்

  இப்போது கூட இலங்கை இன பிரச்சனையை மக்கள் கவனிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்

  இலங்கை தமிழருக்காக காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போட வில்லை என்றால் ஈழத்திற்காக பல மேடைகளில் கரடியாய் கத்திய திருமாவளவனையும் ராமதாசையும் மக்கள் கை விட்டது ஏன்?

   திரு வைக்கோ அவர்களை ஜெயலலிதா அநியாயமாக புறக்கணித்தும் கூட அம்மையாருக்கு கணிசமான வெற்றியை கொடுத்தது ஏன்?

   உள் நாட்டில் நடந்த ஊழல் அரசியலும் குடும்ப கூத்தடிப்பும் தான் காரணமே தவிர இலங்கை பிரச்சனை காரணம் அல்ல

  எனவே தான் மீண்டும் மீண்டும் நான் ஈழ போராளிகள் மக்கள் செல்வாக்கில்லாத தமிழ் தீவிரவாதிகளை ஓரம் கட்டி விட்டு தமிழகம் மக்களிடம் மீண்டும் செல்வாக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலிவுருத்துகிறேன்

 இது தான் ஈழ மக்களுக்கு நன்மை செய்வதாக அமையும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...