ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியை அடிக்கடி தி.மு.க.வினர் சந்தித்து பேசி வருகிறார்கள். சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் கனிமொழியை சந்தித்து பேசினார்கள்.
இந்த நிலையில் நேற்று தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். சுமார் 30 நிமிடம் அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.
மத்திய மந்திரி சபையில் இருந்து விலகுமாறு தயாநிதி மாறனுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து கனிமொழியிடம் தி.மு.க. எம்.பி.க்கள் பேசியதாக கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, பன்னீர்செல்வம், மற்றும் கே.என்.நேருவும் நேற்று கனிமொழியை சந்தித்து பேசினார்கள். நடிகர் வாகை சந்திரசேகரும் நேற்று டெல்லி சென்று கனிமொழியை சந்தித்தார். கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் நேற்று மகன் ஆதித்யாவை டெல்லி அழைத்து சென்றிருந்தார். ஆதித்யாவுடன் கனிமொழி சிறிது நேரம் தனிமையில் பேசினார்.
இதற்கிடையே கனிமொழி மற்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை (4-ந் தேதி) டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் தொடங்கி நடக்க உள்ளது.
No comments:
Post a Comment