மதுரை மேயர் தேன்மொழி மதிச்சியத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய உடந்தையாக இருந்ததாக வக்கீல் ஜெயராம் என்பவர் மாவட்ட கோர்ட்டில் புகார் செய்தார். இடம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மேயர் தேன்மொழி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரை மேயர் தேன்மொழிக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் சரண் அடைந்தார்.
No comments:
Post a Comment