Saturday, July 16, 2011

ஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கிளம்பிய கருணாநிதி!

திமுகவின் அடுத்த தலைவராக தம்மை அறிவிக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கருணாநிதி கோபித்துக் கொண்டு மகாபலிபுரத்திற்கு சென்றதாக வெளியாகி உள்ள உடன்பிறப்புகளிடம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
2ஜி ஊழல் வெடித்து திமுகவை சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இதனை சரிவர கட்சி கையாளவில்லை என்ற் அதிருப்தி ஸ்டாலினுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, 2ஜி விவகாரத்தினால் பதவியிழந்த ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த வேறு இரண்டு பேரது பெயர்களை பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் கட்சி, திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜியே, சென்னைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஆனால் 2ஜி விவகாரத்தில் தங்களுக்கு உதவவில்லையே என்று காங்கிரஸ் மீது தற்போது அதிருப்தியில் உள்ள கருணாநிதிக்கு, அமைச்சரவையில் சேர விருப்பமில்லை என்பதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் அமைச்சரவையில் இரண்டு பேரை சேர்க்கலாம் என்று ஸ்டாலின் விரும்பியதாகவும், இதற்காக திமுக எம்.பி. ஏ.கே. விஜயன் உள்ளிட்ட இரண்டு பேரை அவர் கருணாநிதியிடம் பரிந்துரைத்ததாகவும், ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டதால் ஸ்டாலின் அப்போது கோபமுற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சோதனையிலிருந்து மீள, கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்புகிறார்.

குறிப்பாக திமுகவின் மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் தங்களது பகுதிகளில் குறுநில மன்னர்கள் போன்றே செயல்படுவதாகவும்,கடந்த திமுக ஆட்சியில் இவர்கள் போட்ட அளவுக்கு அதிகமான ஆட்டமும் தேர்தல் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் ஸ்டாலின் கருதுகிறார்.
இதனால் அவர்களது அதிகாரத்தை பறித்து,அவர்களை தட்டிவைக்கும் நோக்கத்துடன் மாவட்ட செயலாளர் பதவியையே நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் ஆலோசனையை ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

தாம் கட்சி தலைமைக்கு வரும் பட்சத்தில், இப்போது மாவட்ட செயலாளர்களாக உள்ள வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, கருப்பசாமி பாண்டியன் போன்றவர்கள் தமக்கு கீழ்படிந்து நடக்கமாட்டார்கள்; அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் இவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கருதுகிறார்.

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த யோசனையை தொடர்ந்தே,மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறும்,

அதனடிப்படையில் வருகிற ஜூலை 23 ஆம் தேதியன்று கோவையில் கூட உள்ள கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவெடிக்கப்படும் என்றும் கடந்த மாதம் திமுக தலைமை அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதுமே வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்கள் கட்சித் தலைவர் கருணாநிதியிடம்,"எங்களை டம்மியாக்க நினைக்கிறீர்களா? " என்று ஆவேசம் பொங்க கேட்டு, எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி விலகி உள்ளனர்.

இதனையடுத்து ஸ்டாலினுடன் இது குறித்து விவாதித்த கருணாநிதி,மாவட்ட செயலாளர் பதவியை நீக்கினால் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களால் பிரச்சனை ஏற்படும்; எனவே அத்திட்டத்தை கைவிடலாம் என்று கூறியதாகவும்,ஆனால் அதனை ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...