Wednesday, July 6, 2011

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது வீடு அபகரிப்பு புகார்; போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு

சென்னை பட்டாளம் தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 67). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- 
 
சென்னை மாநகராட்சி
 
தி.மு.க. கவுன்சிலர் மீது
 
வீடு அபகரிப்பு புகார்;
 
போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு
மேற்கண்ட முகவரியில் உள்ள எனது வீடு உள்ளது. இது என் கணவரின் பூர்வீக சொத்தாகும். எனது மகன் திருமலை கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கும், ஓட்டேரியைச் சேர்ந்த கமல் என்பவருக்கும் தொழில் தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.
 
இந்நிலையில் 98-வது வட்ட செயலாளரும் கவுன்சிலருமான வெங்கடேசன் என் மகனை மிரட்டி தொழில் தொடர்பாக ரூ.25 லட்சம், கமலுக்கு கொடுக்க வேண்டும் என்றார். அவருடைய உதவியாளர் ரகுவும் அடியாட்களுடன் வந்து மிரட்டினார். இவர்களது தொல்லை தாங்க முடியாமல் கடந்த 2005-ம் வருடம் கமலின் உறவினர் ஜெயந்தி குமாரி பெயரில் அடமானம் பத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்தோம்.
 
பின்னர் 2008-ம் ஆண்டு பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று கேட்டபோது வெங்கடேசன் ரூ.15 லட்சம் கட்சிக்கு நன்கொடையாக கேட்டார். பின்னர் தனது கணவரையும் மகனையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மிரட்டி அழைத்துச் சென்று கமலின் பெயரில் வீட்டை கிரயம் செய்து கொண்டார்கள்.
 
இதனால் மனஉளைச்சல் அடைந்த எனது கணவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறந்து விட்டார். தொல்லை தாங்க முடியாமல் எனது மகனும் வெளியூருக்கு சென்று விட்டான். தற்போது கமலிடம் சென்று நான் விசாரித்தபோது 20 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு எங்களிடம் மிரட்டி வாங்கிய வீட்டை கவுன்சிலர் வெங்கடேசன் ரூ.15 லட்சத்திற்கு வாங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
 
இப்போது நான் இருக்கும் வீட்டைகாலி செய்ய சொல்லி நேற்று இரவு கவுன்சிலர் வெங்கடேசன், ரகு ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளி விட்டனர். நான் மயங்கி விழுந்து விட்டேன். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...