Wednesday, July 6, 2011

கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்

தி.மு.க ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது மு.க குடும்பம் மட்டுமல்ல.அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும் ,குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான்.அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதும் பயம் தென்பட ஆரம்பித்துவிட்டது.சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யபட,அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன..



சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.


சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.



தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)

வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)

‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.



சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.

மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.

மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.

விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.

இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.

தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.



 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...