Wednesday, February 3, 2016

நான்கு (4) வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?- அறிந்து கொள்ளுங்கள்

4 வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?-  அறிந்து கொள்ளுங்கள்

நான்கு வேதங்களில் ஈறேழு (14) அங்கங்கள் இருப்ப‍து உங்களுக்கு தெரியுமா?-  அறிந்து கொள்ளுங்கள்
ந‌மது இந்து மதம் நான்கு வேதங்களை கொண்டிருக்கிறது. அந்த நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகியவை ஆகும். இந்த நான்கு வேதங்களின்
பெயர்கள் உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், இந் நான்கு வேதங்களில் இருக்கும் ஈறேழு அதாவது 14 அங்கங்கள் என்னென்ன‍ என்பதை நீங்கள் அறிவீர்களா?
வேதங்கள் நான்கின் அங்கங்களின் பட்டியல்
1. சிக்ஷை (ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது)
2. சந்தஸ் (சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது)
3. வியாகரணம் (மேம்பட்ட, தெளிவான ‘ஒலி’ வடிவை உணர உதவி புரிகிறது)
4. நிருக்தம் (சொற்களை அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களையும் பொருளையும் விளக்கி சொல்கிறது)
5. ஜோதிடம் (நட்சத்திரங்களையும் மற்றும் கோள்களையும் வைத்து நிலையைக் கணிப்பது)
6. கல்பம் (சமூக அமைப்பில் மனிதன் மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும்,  வழிகாட்டுகிறது)
ஆகிய ஆறு- இவை போக 

1. மீமாம்ஸை
2. நியாயம்
3. தர்ம சாஸ்திரம்
4. புராணம்
போன்ற நான்குடன் 

1. ஆயுர் வேதம் (வாழ்வு குறித்த அறிவியல்)
2.தனுர்வேதம் (போர்க்கலைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்)
3. கந்தர் வவேதம் (நுண்கலைகள்)
4.அர்த்தசாஸ்திரம் (அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...