ரச(ம்)த்திற்காக திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!- திடீர் மாப்பிள்ளைக்கு மனைவியான மணப்பெண்! -சுவாரஸ்யத் தகவல்

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம்குனிக்கல் பகுதியைச்சேர்ந்த தம்பதி பிரகாசம்–சவுபாக்கியம்மா. இவர்களது
மகள் சவுமியா. இவருக்கும், ஸ்ரீ ராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக் கு குனிக்கல் கிராமத்தில் நேற்று திருமணம் நடத்த, இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்காக, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் வினியோகம் செய்திருந்தனர்.
திருமண கனவுகளோடு மணப்பெண்ணும், மணகமனும் தங்களது குடும்ப த்தினருடன் திருமண மண்டபத்தில் நேற்று முன் தினம் கூடி மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். திருமணத்துக்கு முதல் நாள் இரவு, திருமண வரவேற்பு விருந்து மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், மணமக ன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிகதாமதமாக விருந்து மண்டபத்துக்கு வந்தனர்.
அங்கு, அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது, மணமகன் வீட் டார் ரசம் கேட்டனர். ஆனால் ரசம் காலியாகி விட்டது என்று பதில் வந்தி ருக்கிறது. இதை கேட்டதும், மணமகன் குடும்பத்தினர் ஆவேசம் அடைந் து, பெண் வீட்டாரிடம் தகராறு செய்திருக்கின்றனர்.
அப்போது, ”உங்களுக்காக தனியாக உணவு எடுத்து வைத்திருந்தோம். ஆ னால், அதை யாரோ தவறுதலாக எடுத்து வந்தவர்களுக்கு பரிமாறி விட் டதால் ரசம் இல்லாமல்போய்விட்டது” என்று பெண்வீட்டார் எவ்வளவோ எடுத்து கூறி சமரசம் செய்திருக்கின்றனர். ஆனால் இதில் சமாதானம் அடையாமல், மண்டபத்தில் அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு மணமகன் வீட்டார் கோபத்துடன் சென்று இருக்கின்றனர்.
மறுநாள் அதிகாலை, திருமணத்திற்காக நலுங்குவைக்கும் நிகழ்ச்சிக்கா க மணமகன் குடும்பத்தினரை அழைக்க, அவர்களது அறைக்கு பெண் வீட் டார் சென்று பார்த்திருக்கின்றனர். ஆனால், அங்கு மணமகனும், அவரது பெற்றோரும் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோரை மண்டபம் முழுவதும் தேடி இருக்கின்றனர்.
அப்போது, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் இரவோடு இரவாக மண்டபத்தை காலி செய்துவிட்டு மணமகன் சென்ற விஷயம் பெண் வீட் டாருக்கு தெரிய வந்திருக்கிறது. ரசத்திற்காக திருமணம் நின்று தங்கள் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே என்று மணப்பெண் பெற் றோர் கண் கலங்கினர். இதை அறிந்த மணப்பெண் சவுமியா, தனக்கு இனி திருமணம் நடக்காது என்று கதறி அழ ஆரம்பித்துள்ளார்.
அந்த நேரத்தில், திருமண விழாவுக்கு வந்திருந்த கோவிந்த ராஜ் என்ற வாலிபர், இதை கண்டு பெண் வீட்டாரை சமாதானம் செய்ததுடன் நீங்கள் சம்மதித்தால் சவுமியாவை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆறுதல்கூறி இருக்கிறார். உடனே இதற்கு சவுமியா வீட்டை சார்ந்த பெரியவர்கள் பலர் ஆதரவு தெரிவிக்க, சவுமியாவின் சம்மதத்துடன் அதே முகூர்த்தத்தில் சவுமியா கழுத்தில் கோவிந்தராஜ் தாலி கட்ட, திருமணத் துக்கு வந்தவர்கள் மணமக்களை நீடூழி வாழ வாழ்த்தினார்கள்.
இந்த திருமணம் இனிதே நடந்த பிறகு, ரசம் பரிமாறாததால் திருமணத் தை நிறுத்திய மணமகன் ராஜு குடும்பத்தினர்மீது சவுமியா குடும்பத்தின ர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படித்த செய்தி
No comments:
Post a Comment