பழனி முருகன் மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டுஉள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது.
பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.
உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது. மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது.
அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது.
அந்த சிலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம்.
அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான ‘பேர்க்கின் எல்மார் எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம்.
பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே.
இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ”மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதே.
முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment