Monday, March 14, 2016

ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர்.



ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர். அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு... இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கனவன்.
தினமும் காலையில் எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பான். இரவு 7Pm... வீடு வந்துவிடுவான். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவாளி தான். அப்படிதான் கொஞ்சிக்கொண்டு விளையாடுவார்கள். அவளுடன் சேர்ந்து Cupl. Dacs... ஆடுவது வீட்டில் இருவரும் ரோமியோ ஜீலியட் நாடகம் நடிப்பது... இப்படி ஒரு குழந்தை பிறக்கும் வரை அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர்.
ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு கனவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. அன்று முதல் அவர்களுக்குள் இடைவெளி வந்தது. அடிக்கடி சண்டையிட்டு கொண்டனர். அவன் மனைவியுடன் சரியாக பேசியே 2 மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் இரவு அவன் மனைவி "இப்போது என் மேல் உனக்கு காதல் இல்லைடா!. உனக்கு பணம் தான் பெரிது! நான் வீட்டை விட்டு போறேன்! என்னை தேடாதே!" என்று ஒரு கடிதம் எழுதி கட்டிலில் போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கு அடியில் ஒழிந்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்த கனவன் "கதவு ஏன் திறந்திருக்கிறது!" என்று சத்தமிட்டுக்கொண்டே மனைவியை தேடுகிறான். அப்போது கட்டிலில் இருந்த கடிததை எடுத்து படித்து அதில் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு Call செய்கிறான். "மச்சீ பிசாசு" பொய்டாடா!" இனிமே எனக்கு"... என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.
இதை கேட்டவள் வாயை பொத்திக்கொண்டு குழுங்கி குழுங்கி அழுகிறாள். "அய்யோ எவளையோ வச்சிருக்கான் போல" நான் நினைத்தது சரியாகிவிட்டதே" என்று புளம்பிக்கொண்டே கட்டிலில் கனவன் எழுதியதை எடுத்து படிக்கிறாள். "அடி லூசு பொண்டாட்டி! கட்டிலுக்கு கீழே உன் காலு தெறிகிறதடி!" என் உயிர் நீதான் என்றேன்! நீ சென்றுவிட்டால் நான் செத்துப்பொய்ருவேன்டி!"
இதை படித்தவள்
"ஹான்" டேய் பொறுக்கி நா எங்கும் போகலடா" எங்கடா இருக்க புருசா"! என்று அலறிக்கொண்டே கனவனை தேட தன் மனைவியை பார்த்து கை நீட்டி சட்டையை விலக்கி தனது மார்பை காட்டி ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறான் கனவன். "ஹான்" என்று வேகமாக ஓடிவந்தவள் அவன் மார்பில் முகம் பதித்து கட்டியனைத்து அழுகிறாள்.
((காதலில் சிறந்த காதலே கனவனும் மனைவியும் காதலிப்பதுதான். பெண் என்பவள் வலைந்த எலும்பினால் படைக்கப்பட்டவள் அதை வலைக்க நினைத்தால் வலையமாட்டாள் இரண்டாக உடைந்துவிடுவாள். ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே.
அதனால்தான் ஆண்கள் கடன் வாங்கினால் தன்னுடைய பெயரிலும். சொத்து வாங்கினாள் தன் மனைவியின் பெயரில்தான் வாங்குகின்றனர். அதற்கு காரணம் கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் சொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே என்று அர்த்தம்.))

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...