ஹெல்மெட்-இல் இவ்வளவு விஷயம் இருக்கா?, இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
ஹெல்மெட்-இல் இவ்வளவு விஷயம் இருக்கா?, இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் – இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த
ஹெல்மெட்டை தலையில் மாட்டிய பிறகே, பைக்கை ஸ்டார்ட் செய்யுங்
கள். டேங்க்கில் தொடையிடுக்கில் வைத்துக் கொண்டோ, ரியர்வியூ மிரரில் சொருகிய படி யோ ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு பயணி ப்பது – சட்டத்தை மட்டுமல்ல; உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஏமாற்றுவதற்குச் சமம்!

‘ஹெல்மெட் இல்லையென்றால் லைசென்ஸ் பறிக்கப்படும்; வாகனம் சீஸ் செய்யப்படும்’ போன்ற கடுமையான சட்ட திட்டத்தையெல்லாம்
விட்டுத்தள்ளுங்கள்; ‘ஹெல்மெட் போட்டா காது கேட்கவில்லை… வேர்த் துக் கொட்டுது பாஸ்… முடி போச்சுன்னா மொத்தமும் போச்சு’ என்று ஃபீலிங் டேக்கா விடுபவர்கள் அனைவருக்கும், ஹெல்மெட் விஷயத்தில் ஆப்ஷன் இருக்கிறது.
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
எல்லோருக்கும் பொதுவான பயம் இதுதான். தலைவலி, நீர் கோர்த்தல்,
காது கேட்கவில்லை போன்ற உடல் உபாதைகள் வருவ தாகச் சொல்லித் தான் பலர் ஹெல்மெட்டைத் தவிர்க்கி ன்றனர். ஆனால், இவை எல்லாமே பொய் இல்லை. பல நாள் துவைக்காத அழுக்குச் சட்டை போட்டால், எப்படி நம் உடம்பில் அரிப்பு ஏற்படுமோ, அதுபோலத்தான் ஹெல்மெட்டும். தினசரி துவைத்த காட்டன் கேப் அல்ல து கர்ச்சீஃப்பைத் தலையில் கட்டிக்கொண்டு ஹெல்மெ ட் அணிந்தால், எந்தப் பிரச்னையும் வராது. சேவியர், ஆக்ஸர், வேகா போன்ற பிராண்டுகளில் ஹெல்மெட்டின் உள் பக்கத்தை அகற்றி, துவை
த்துப் பயன்படுத்தலாம். துவைத்த இன்டீரியரை வெயிலில் அரை நாள் காயவைத்து அணிந்தா ல், தலையில் அரிப்பு ஏற்படுவது நிற்பதுடன், முடி உதிர்தலும் தடைப்படும். அகற்ற முடியாத உள்பக்கம் கொண்ட ஹெல்மெட் வாங்குபவர்க ள், தினசரி கர்ச் சீப் அல்லது கேப் மாற்ற வேண்டு ம். மேலும், வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பக்கம் வெயிலில்படுவதுபோல அரை மணிநேரம் வைக்க வேண்டும்.

ஹெல்மெட்டுகளில் எத்தனை வகை உள்ளன?

1. ஓப்பன் ஃபேஸ் –
2. ஃபுல் ஃபேஸ் –

பொதுவாக, நாம் அனைவரும் பயன்படுத்தும் ஹெல் மெட் இது. தாடை முதல் தலை முழுவதையும் பாது காக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. பழைய ஃபுல் ஃபேஸ் மாடலில், ஏர் வென்ட்டுகள் இல் லாமல் இருந்தன. இப்போது வரும் அனைத்து மாடல் களிலும் ஏர் வென்ட்டுகள் இருப்பதால், வியர்க்குமோ என்று பயப்படத் தேவை இல்லை.
3. ஃப்ளிப் அப் –

4. மோட்டோ கிராஸ் –
இதுவும் ஒரு வகையில் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்தான். இதில் தாடைப்
பகுதிக்கென்று சிறப்புப் பாதுகாப்பு இருக்கும். இதை ‘ஸ்கெலிட்டன் ஹெல்மெட்’ என்றும் சொல்கிறார்கள். பைக் ஓட்டும்போது கீழே விழநேர்ந்தால், முகம் தரையில்அடிபட வாய்ப் பு இருக்கிறது. அந்த மாதிரி நேரங்களில், இந்த மோட்டோ கிராஸ் ஹெல்மெட் உங்களுக்கு
உற்ற நண்பனாக இருக்கும். முன்பு டர்ட் பைக் ரேஸ்களில்தான் இதைப் பெரிதும் பயன்படுத்தினார்கள். இது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால், இப்போதைய இளைஞர்களை இது மிகவும் கவரும். இதில், தலைக்கு மேலே சன் ஷேடு இருப்பதால், வெயில் & மழை உங்களை நேரடியாகத் தாக்காது!.
ஹெல்மெட்டுகள் எப்படித் தயாராகின்றன?
இந்தியாவில், முழுக்க முழுக்க பாலி கார்பனேட் கலவையால் ஹெல்
மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பிளாஸ்டிக் மற்றும் தெர் மோகோல் சேர்ந்த கலவைதான் பாலிமர். தரமான ஹெல்மெட்டு களில் இந்தத் தடிமனான பகுதிக்குக் கீழே 7 அடுக்குகளால் ஆன ஃபைபர் லேயர்கள் இருக்கு ம். இவை தரையில் மோதும்போது கிடைக்கும் அழுத்தத்தை ஈஸியாக்கும். லைட் வெயிட்டுக் கும், ஃப்ளெக்ஸிபிளிட்டிக்கும் பாலிமர்தான் பெஸ்ட். இதற்கு அடுத்த தரம், ஃபைபர் கிளாஸ் மெட்டீரியல். MT, AGV போன்ற இத்தாலியன் ஹெல்மெ
ட்டுகளில் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்படுகின்ற ன. இது, மோதும்போது ஏற்படும் வேகத்தைக் குறை க்கும் தன்மைகொண்டவை. உச்சபட்சமாக, கார்பன் ஃபைபர் மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டு கள்தான் உலகத் தரம் வாய்ந்தவை. மோட்டோ ஜீபி, ஃபார்முலா-1 போன்ற ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் அனைத்தும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டவை. சில கார்பன் ஃபைபர் ஹெல்மெட்டுகளின் எடை 1.3 கிலோ அளவுதான் இரு க்கும். ஆனால், பாதுகாப்பில் இவைதான் பெஸ்ட். நம் நாட்டில் நெக்ஸ்,
AGV போன்ற கார்பன் ஃபைபர் ஹெல்மெட் டுகள் ரூ.28,000 முதல் கிடைக்கின்றன .

எப்படி வாங்க வேண்டும்?
ஹெல்மெட், நம்தலையோடு மிகஇறுக்க மாகவும் இருக்கக் கூடாது; மிகத் தளர்வாக வும் இருக்கக்கூடாது. ஹெல்மெட் போட்டு க்கொண்ட பிறகு, தலையை இடவலமாக அசைத்துப்பாருங்கள். லேசாக நகர்ந்தால், அது உங்களுக்குச் சரியான ஹெல்மெட். அதிகமாக நகர்ந்தா ல், மிகவும் தளர்வாக இருக்
கிறது என்று பொருள். காது கேட்க வேண்டும்; காற்று வர வேண்டும் என நீங்கள் தளர்வாக ஹெல்மெட் அணிந்தால், ஸ்பீடு பிரேக்க ர்களில் ஹெல்மெட் திரும்ப வாய்ப்பு உண்டு. அதேபோல், இறுக்கமாகவும் இரு க்கக்கூடாது. ஹெல்மெட் அணியும்போ து, இரு பக்கமும் உள்ள ஸ்ட்ராப்புகளை நன்கு இழுத்து லாக் செய்ய வேண்டும். இதுதான் ஹெல்மெட் அணிய வேண்டிய சரியான முறை.
ஹெல்மெட் ஏன் அணிய வேண்டும்?
இ
ந்தியாவில் 45% விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் விபத்துகளே! தலையில் மட்டும் அடிபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு வாழ்வை இழப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். ஹெல்மெட் அணிந்து பைக்கில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒருவர், தலைக்கு மேலே சாய்ந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்து உயிர் தப்பிய கதை யும் உண்டு. எனவே, சாலை விபத்துகளில் மட்டுமின்றி, பொதுவாகவும் நம் அழகான முகம் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அவசியம்! ஹெல்மெட்டை சுமையாக நினைக்காதீர்கள்; சுகமாக அனுபவியுங்கள்!
தரமான ஹெல்மெட்டை கண்டுபிடிப்பது எப்படி?
ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். காஸ்ட்லியாக வாங்க விரும் புபவர்கள் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடு களைச் சேர்ந்த இம்போர்ட்டட் ஹெல்மெட்டுகள் வாங்கலாம். ஐரோப்பா பிராண்டுகளில் ECE குறியீடு இருக்கும். Economic Commissions for Europe என்பதுதான் இதன் சுருக்கம். இதை கவர்ன்மென்ட் ஆஃப் யுகே வெப்சைட்டில் செக் செய்து

இதுக்கு ஹெல்மெட் போடாமலேயே இருக்கலாம்
கொள்ளலாம். வட, தென் அமெரிக்கா மற்றும் கனடாபோன்ற நாடுகளைச்சேர்ந்த ஹெல்மெ ட்டுகளில் DOT (Department of Transportation ) எனும் கோட் நம்பரும் சர்ட்டிஃபிகேட்டும் இ ருக்கிறதா என்று செக்செய்துகொள்ளுங்கள்.
நம் ஊர்களில் DOT ஸ்டிக்கர்கள் டூப்ளிகேட் டா கக் கிடைக்கின்றன. ஆனால் ஒரிஜினல் ஹெல்மெட்களில் DOTகோடு, மோல்டுசெய்ய ப்பட்டிருப்பதை வைத்துக்கண்டுபிடிக்
கலாம். ஜெர்மன்தயாரிப்பில் SCHNELL என்ற குறியீட்டை வைத்துக் கண்டுபிடிக்கலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ISI முத்திரை. இதிலும் நிறைய போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால், கவனம்தேவை.
ISIமுத்திரை உண்மை தானா என்பதைக் கண்டறிய, 044-22541442, 2254 1216 ஆகிய எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அல்லதுwww.bis.org.in என்ற இணையதளத்தில், ISI மற்றும் CM/L நம்பரை வைத்துச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment