புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்த மா
கப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும்.
காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த் து,’என்னடீ ஈனு பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே, வழிவிடு’ என்று எரிந்து விழும் கணவர் சாதார ண(சதா ரண)ரகம். இதே,”உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ்தான், உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு வேலைக்கு நேரமாகும்” என்றுகூறும் கணவர் அசாதாரண(அசத்தல்) ரகம்.இவர் புகழ்ச்சி என்ற மந்திரத்தின் தந்திரம் தெரிந்தவர். இவர் தொட்டது துலங்கும். இப்படிப்பட்ட கணவருக்குத் தேவையான விஷயங்களைப் பார்த்து பார்த்து மனைவி செய்திட மாட்டாரா? புகழ்ந்த கணவருக்கு இனிமை.புகழப்பட்ட மனைவிக்குப் பெருமை. CLICK H
ERE


“எங்க சந்தோஷ் ரொனைப் புகழ்கிறாள். “சந்தோஷ், மாமா, மாமி வந்திருக்கா, பக்கத்துக் கடையில் போய் கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வா” என்ற வார்த்தையை முடிக்கும்முன் சந்தோஷ் சந்தோஷமாகக் கூல்டிரிங்க்ஸுடன் நிற்கிறான்.
பாராட்டு என்பது பாராட்டுபவருக்கும் மகிழ்ச்சி பாராட்டப்படு பவருக்கும் மகிழ்ச்சி. புகழ்வதில் தயக்கமே இரு
க்கக் கூடாது. பாராட்டுபவர் இனிமையான சொற்களையே செல வழிக்க வேண்டும். குறைகளாகத் தோன்றும் கசப்புகளைக் கூட பாரா ட்டு என்ற தேனில் குழைத்துத் தர வேண்டும்.
திருமண விழாவில் சந்திக்கும் தன் அண்ணன் மகளிடம்,”ஏய் சுகுணா, என்னடி இப்படி குண்டாயிட்டே, நீ இப்படி மாறுவே னு எதிர்பார்க்கலை, உங்கம்மா மாதிரி குண்டாயிடாதே, இது க்கு மேலே வெயிட் போடாதே, டயட்லே கண்ணு இருக்கட்டு ம். எனக்கு என்னவோ பழைய சுகுணாவைத்தான் பிடிச்சிருக் கு” என்று கூறும் சுகுணாவில் அத்தை ராஜம்தான் முன்பு, “என்ன சுகுணா இப்படி ஒல்லியா அசிங்கமா இருக்கியே,
கொஞ்சம் சாப்பிட்டு வெயிட்போடேன், அப்போதான் பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளைக்கும் உன்னைப் பிடிக்கும்” என்றவள். ராஜம் அவர்க ளின் கருத்தில் தவறில்லை, ஆனால் அவர் பயன் படுத்திய வார்த்தைகள் தான் தவறு.

“சுகுணா, நீ ஒல்லியா திரிஷா,அசின் மாதிரி அழகா இருக்கி யே, என்ன ஏதாச்சும் டயட், எக்ஸர்ஸைஸ் பண்ணறியா, கொஞ்சம் வெயிட் போட் டால் இன்னும் அழகாக இருப்பாய்” இவை ஒல்லியான சுகுணா விடம் கூறப்பட்டிருக்க வேண்டிய வார்த்தைகள். “வாவ் சுகுணாவா இது? போன தரம் பார்த்தது க்கும் இப்போ பார்க்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்? சூப் பரா புசுபுசுனு குஷ்பூ மாதிரி இருக்கியே, நீ இருக்கிறது சரியா ன அளவு, இதுக்கும் மேலே கூடவோ குறையவோ செய்யா தே” என்று
ராஜம் அத்தை குண்டான சுகுணாவிடம் கூறியிரு ந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
பாராட்டுபவருக்குப் புத்திசாலித்தனமும் சமயோஜித சிந்த னையும் நகைச்சுவை உணர்வும் இருக்க வேண்டும். புகழ்பவர் காரியம் சாதிக்கிறார். புகழப்படுபவர் பெருமை கொள்கி றார்.
“எங்க அத்தை வைக்கும் வத்தக்குழம்போட மணமே தனி, மணம் எட்டூருக்கு இழுக் கும், என்ன கைப்பக்குவம், நான் வச்சா அந்தளவுக்கு வர மாட்டேங்குது” என்று தோழி யிடம் தொலைபேசியில் தன் மாமியாரைப் புகழ்கிறார் ஒரு மரு மகள். இப்படிப்பட்ட மருமகளை எந்த மாமியாருக்குத் தான் பிடிக்காது?
“வேலைக்கும் போயிட்டு வீட்டுலேயும் வேலை பார்க்கிறா, இன்னைக்கு சன்டே தானே, மனைவியையும் குழந்தையையும் வெ
ளியிலே சினிமாவுக்கோ, பீச்சிற்கோ கூட்டி க்கிட்டுப் போயிட்டு வாயேன்டா” என்று பையனிடம் மருமகளுக் காகப் புகழ்ந்து பேசும் மாமியாரை எந்த மருமகளுக்குத் தான் பிடிக்காது?
குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல காரியங்களைக் கூடப் புகழ்ந்து பாருங்கள். அவர்கள் நடவடிக் கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகப் பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
“வேலைக்குப் போயிட்டு உச்சி வெயில்ல வீட்டுக்குச் சாப்பி டலாம்னு ஆசையா வந்தா, சாம்பார்லே உப்பு, சப்பே இல்லை” எத்தனைபேர் தன் தாயிடம்,மனைவியிடம்,சகோதரியிடம் காட்டும் அன்றாடக் கோபங் கள். இதற்குப் பதில் “சாம்பார் சூப்பர், ஆனா ஏன் காரத்தைக் குறைச்சுட்டே” எ
ன்று சொன் னால் அடுத்த முறை அந்தத் தவறுகள் இல்லாமல் அந்தப் பெண் திறம்பட சமைப்பாளே. இதே சாம்பாரை உணவகங்க ளிலோ கல்யாண வீடுகளிலோ விருந்தினர் வீடுகளிலோ சகித்துக் கொள்ள மாட்டோமா?

நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்க ளுக்கும் நன்றி கூறுகிறோம். அவ்வாறு அவர்க ளுக்கு நன்றி கூறி அவர்கள் திறமைகளைப் பாராட்டும் போது களைப்பின்றி இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர் கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியுமே.
தினந்தோறும் பூ வாங்கும் பூக்காரியிடம்,”அது என்னமோ தெரியலை ஈஸ்வரி, உன்னிடம் பூ வாங்கி சாமிக்குப் போட்டால் தான் மங்களகரமா இருக்கு, உனக்கு அப்படி ஒரு முக ராசி” என்று சொல்லி பூக்காரியின் பூ முகம் மலர்வதை ரசித் துப் பாருங்கள்.
‘முன்வந்து நின்றால்தான் முகம் காட்டும் கண்ணாடி’ மனம் நிறைய நேசத்தையும் பாசத்தையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்திலே எரிந்து விழுந்து கெட்ட பெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்? மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாரட்டு என்ற
அஸ்திரத்தைப் பயன்படுத்தி வெளி க்கொணருங்கள். வெற்றி நிச்சயம். ’மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல் தான். ஆனால் அது தரும் பலனோ அபரிமிதமானது. பாராட்டு விழுபவனை எழ வைக்கும்.
பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக் கான படிக்கட்டு. பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்.
No comments:
Post a Comment