மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் மனிதர்க்குள் , இது அதிசயமல்ல. எதையுமே யோசிக்காமல் எப்படி ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக மனி தர்கள் செய்கிறார்கள்/பேசுகிறார்கள்/நடந்துக்கொள்கிறார்கள்.
அப்படி நங்கள் இருக்க வேண்டாம் என்றாலுமே ஏன்? என்ற கேள்வி எழுந்துவிடாமல் இருப்பது இல்லை நமக்கு. அழுத்தமாக உள்ளம் சொல்லுவதை கொண்டு நடந்துக்கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள்.
அப்படி நங்கள் இருக்க வேண்டாம் என்றாலுமே ஏன்? என்ற கேள்வி எழுந்துவிடாமல் இருப்பது இல்லை நமக்கு. அழுத்தமாக உள்ளம் சொல்லுவதை கொண்டு நடந்துக்கொள்ளுங்கள் என்று பல அறிஞர்கள் கூறி இருக்கிறார்கள்.
அறிவு சரியாக செய்கிறதா? இல்லை உள்ளம் சரியாக செய்கிறதா? உள்ளம் கேட்பதை மட்டும் கேட்டு நடந்துகொண்டால் பல விஷயங்களில் நான் சந்தோஷமாக இருப்பேன் அல்லது இருந்து இருப்பேன் என்று தோன்றும். ஆனால் எல்லாவற்றிற்கும் அறிவுடன் உட்கார்ந்து பேசும் போது, மிஞ்சுவது சந்தோஷம் இல்லை, ஒரு மயான அமைதி அல்லது எல்லாமே பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற தள்ளிவைப்பு அல்லது என்னை விட பிறரின் செய்கைகளுக்கு முதலிடம் என்று அறிவால் நான் படும் பிரச்சனை அதிகம். உள்ளம் பல நேரங்களில், பல இடங்களில் என்னை ஆட்டிப்படைத்தாலும், அறிவு என்னை ஆக்கரமிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. காரணம் இன்று இன்டெர் நெட் மூலமாக பல கேள்விகளுக்கு விடை எளிமையாக கிடைகிறது.
அறிவின் அடங்காத குழந்தைதான் மனசு!!! அப்படி என்று வைத்துக் கொள்ளலாமா? மனது அலை பாயும் என்பது நமக்கு தெரியும் ! ஆனால் அறிவு அலைபாயுமா என்ன ? அறிவும் மனதும் ஒத்துப் போகும் போது நமக்கு கிடைப்பது தெளிவு! அவ்வாறு ஒத்துப் போகாத தன்மையினாலேயே இன்றைய உலகின் பெரும்பான்மை அழிவுக்கு காரணமாகிறது . அவன் சிந்தனையை நிறுத்துத மறுதலிக்கிறது . என் செய்வது இதில் வெல்ப
மனதுவர் யார் ...?அறிவின் அடங்காத குழந்தைதான் மனசு!!! அப்படி என்று வைத்துக் கொள்ளலாமா? மனது அலை பாயும் என்பது நமக்கு தெரியும் ! ஆனால் அறிவு அலைபாயுமா என்ன ? அறிவும் மனதும் ஒத்துப் போகும் போது நமக்கு கிடைப்பது தெளிவு! அவ்வாறு ஒத்துப் போகாத தன்மையினாலேயே இன்றைய உலகின் பெரும்பான்மை அழிவுக்கு காரணமாகிறது . அவன் சிந்தனையை நிறுத்துத மறுதலிக்கிறது . என் செய்வது இதில் வெல்ப
இறுதியில் மனது அறிவை வென்றுவிடுகிறது. அறிவும் மனதும் சண்டை போட்டுக்கொள்ளும்போதுதான் ஒருவன் சிந்தனையாளன் என்பதை அவனுக்கு அது உணர்த்துகிறது . அறிவு அவன் உறக்கத்தை நினைவுகூறுகிறது. எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள். இத்தனை திறமையுடனும், அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும், அறிவும் ஒருவருக்கு தேவை.
நமக்குப் புதிதாக ஒரு துன்பம் வந்து விட்டால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என நம் மனதும், அறிவும் தேட ஆரம்பித்துவிடுகின்றன. அக்கணத்தில், நம் மனதில் இருப்பதெல்லாம் எப்படியாவது அத்துன்பத்திலிருந்து வெளிவந்து விடவேண்டும் என்பது மட்டும் தான். அதை மட்டுமே சிந்திக்கும் நம் மனதும், அறிவும் உளைச்சலுக்கும், சோர்வுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகின்றன. பல சமயங்களில் படபடப்பின் உச்சக்கட்டத்துக்குப் போய் கைகால்களெல்லாம் உதற ஆரம்பித்து விடுகின்றன . இன்னும் சில சமயம் இரண்டடி தள்ளி நிற்பவருக்குக் கேட்கும் அளவுக்கு நம் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில், துன்பத்திலிருந்து வெளிவர நாம் எடுக்கின்ற அவசர முடிவுகள் இன்னும் பல துன்பங்களைக் கொண்டு வருவதைக் கேள்விப்பட்டிருப்போம். அல்லது நாமே அனுபவத்தால் உணர்ந்திருப்போம. எனவே துன்பங்களைக் களைவதை விடவும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அவற்றில் நான் சொல்ல விரும்புவது துன்பங்களைப் பற்றிய நமது கண்ணோட்டம், மனப்பாங்கு மாற வேண்டும். மனதையும் சிந்தனையையும் தெளிவாக வைத்திருக்க நாம் தயாராக இருக்கவேண்டும். நல்ல நூல்களை கற்றும் , நல்ல சொற்பொழிவுகளை கேட்டும் , அறிவை பெருக்குவோம்.

No comments:
Post a Comment