Monday, March 28, 2016

பின்னணி பாடகி ஜானகி அம்மா

இன்று  ஒரு தகவல் - பின்னணி பாடகி ஜானகி அம்மா
நாற்பதுவருடங்களுக்கும் மேலாக பாடிவரும் எஸ்.ஜானகி பதினைந்து மொழிகளில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பாடல்களைப் பாடிய சாதனையாளர். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்கம், ஒரியா, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, படுக மொழிகளிலும் ஜெர்மன் மொழியிலும் ஜானகி பாடியிருக்கிறார். ஐந்துதலைமுறை நாயகிகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதில் ஸ்ரீதேவிக்கு மட்டும் ஐந்துமொழிகளில் பின்னணிபாடியிருக்கிரார்.
ஜானகியின் பாடலின் சிறப்பம்சம் என்ன?
ஜானகி பாடுகையில் அந்தக் கதாநாயகியே அப்படத்து உணர்ச்சிகளுக்கு ஏற்ப இயல்பாகப் பாடுவதுபோல ஒலிக்கிறது அப்பாடல். அப்பாடலின் வரிகலிலும் இசையிலும் உள்ல உணர்ச்சிகள் எந்தவிதமான செயற்கையான நாடகத்தன்மையும் இல்லாமல் மிக இயல்பான அழுத்ததுடன் வெளிப்படுகின்றன. ஜானகி பாடி நம் நெஞ்சில் நிலைக்கும் ஏதாவது பாடலை  எடுத்து இந்தக் கோணத்தில் சிந்தனை செய்து பார்த்தால் இது புரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...