நட்டம் இல்லாத தொழில் செய்ய வேண்டுமா ?
கல்வி நிறுவனம் தொடங்குங்கள் என்று ஆலோசனை கூறும் அளவிற்கு இன்று கல்வி வியாபாரம் ஆகியுள்ளது.
எப்படி பார்த்தாலும் வருடத்திற்கு 20,000 வரை கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் LKG சேர்க்க.நான் சொன்ன இந்த கட்டணம் கடைநிலையில் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டுமே. வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் கல்வி கட்டணம் பெறும் பள்ளிகளும் உண்டு.
கல்வி வியாபாரம் ஆனதிற்கு காரணம் அரசு மட்டுமே காரணமா என்றால் இல்லை. இந்த பெற்றோர்களே முதல் காரணம். என் மகன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கிறான் அல்லது CBSE
பள்ளியில் படிக்கிறான் என பெருமைக்காகவே பலரும் தனியார் பள்ளிகளைத் தேடி போகிறார்கள். தரமான கல்வி வேண்டும் அதனால் தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் என்கிறார்கள்
பள்ளியில் படிக்கிறான் என பெருமைக்காகவே பலரும் தனியார் பள்ளிகளைத் தேடி போகிறார்கள். தரமான கல்வி வேண்டும் அதனால் தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம் என்கிறார்கள்
எனக்கு ஒரு சந்தேகம்..
தரமான கல்வி என்றால் என்ன என்று எந்த பெற்றோர்களுக்காவது தெரியுமா ? நிச்சயமாக இல்லை. முதல் மதிப்பெண் பெற்றால் சிறந்த பள்ளி சிறந்த கல்வி முறையா?
இந்திய கல்வி முறை தரமான கல்வி முறையா என்றால் அதுவே ஒரு மிகப்பெரிய கேள்வி.. !!
இதிலும் தனியார் பள்ளிகள் தேர்ச்சி பெறும் மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்போம் என்கிறது. காரணம் 100% தேர்ச்சி காட்ட வேண்டுமாம்! நன்றாக படிக்கும் (மனப்பாடம்) செய்யும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொண்டு அவர்களை தேர்வில் வெற்றி பெற வைப்பது தான் இந்த தனியார் கல்வி நிறுவங்களின் வேலையென்றால் அப்போது உங்கள் பார்வையில் படிக்காத அல்லது மனப்பாடம் செய்து தேர்வு எழுத தெரியாத குழந்தைகளை என்ன செய்வது ?
இந்த கேள்விக்கு எந்த தனியார் கல்வி நிறுவனத்திடமும் பதில் இருக்காது. காரணம் அவர்களுக்கு 100% தேர்ச்சி, அதை விளம்பரம் செய்து பள்ளியை வளர்த்து பணம் பண்ண வேண்டும் என்பதே நோக்கம்.
கல்வியை சேவையாக வழங்கினால் மட்டுமே இந்த நாடும் நம் மாணவர் சமுதாயமும் முன்னேற்றம் அடையும்.
நிச்சயமாக 99% தனியார் நிறுவனங்கள் கல்வியை சேவையாக செய்ய மாட்டார்கள்..
அரசே அனைத்து மாணவர்களுக்கும் ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லாத ஒரு கல்வி தர வேண்டும்.
No comments:
Post a Comment