தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், தன்னார்வலர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் படித்த பட்டதாரிகள் ஒன்றிணைந்து ‘TAMILNADU GRADUATION FEDERATION’ என்னும் கட்சியை துவக்கி உள்ளனர். இந்தக் கட்சியின் முக்கிய நோக்கமே, தமிழ்நாட்டின் கல்வி முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது இருக்கும் மனப்பாடக் கல்வியை மாற்றி, சிந்தனையாளர்களாக மாணவர்களை மாற்றும் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே.
சென்னையிலுள்ள தமிழ்நாடு பட்டதாரிகள் அமைப்பினர், TGF என்ற கட்சியை துவக்கி உள்ளனர். அக்கட்சியின் துவக்க விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் அறிமுக விழா 05.03.2016 அன்று மாலை 5 மணி அளவில், சென்னை நந்தனத்திலுள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, அ.அனந்தன் தலைமையேற்று, நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். டாக்டர். பாலகுமாரி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
A.P.J.M ஹாஜா செய்யது இப்ராஹீம், Dr.நாகராஜன், இயற்கை விவசாய விஞ்ஞானி சத்தியமூர்த்தி, மு.ஹிம்மத் அஹ்மத் ஹுசைன், குமரன் தாமோதரன், ராஜு, மேஜர் கணேசன் ஆகியோர் சட்சியின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
A.P.J.M ஹாஜா செய்யது இப்ராஹீம், Dr.நாகராஜன், இயற்கை விவசாய விஞ்ஞானி சத்தியமூர்த்தி, மு.ஹிம்மத் அஹ்மத் ஹுசைன், குமரன் தாமோதரன், ராஜு, மேஜர் கணேசன் ஆகியோர் சட்சியின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.
இளைஞர்கள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கு.பாலகிருஷ்ணன், 108 இயக்கத்தைச் சார்ந்த ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சூரிய பிரகாஷ், பிரேம்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். TGF கட்சியின் தலைவர் தங்க கணேசன், கட்சி கொடியை அறிமுகப்படுத்தி விழா பேருரையாற்றினார். விழாவிற்கு தமிழகம் முழுவதிலிருந்தும், கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
TGF கட்சியின் முதன்மைக் கொள்கைகள்:
- உலகத்தரம் வாய்ந்த பன்முக கல்விக்கொள்கை மற்றும் உயர்தர கட்டமைப்பு உருவாக்கி மும்மொழி கல்வியை செயல்படுத்துதல்.
- சட்டமன்ற தொகுதி வாரியாக 10 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை மற்றும் தொழில் முனைவு ஏற்படுத்துதல்.
- லஞ்சம், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி, தமிழகத்தின் கடன் சுமார் 4½ லட்சம் கோடியை, ஊழல் செய்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசின் அனைத்து கடங்களும் தீர்க்கப்படும்; ஊழல்வாதிகள் அனைவரும் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவர்.
- டாஸ்மாக் ஒழிப்பு, உடனடி மதுகுறைப்பு மற்றும் படிப்படியாக பூரண மதுவிலக்கு, மதுவினால் பாதிக்கப்பட்ட இலவச மறுவாழ்வு மையங்கள் மூலம் கட்டணமற்ற சிகிச்சையளிக்கப்படும்.
- இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர், மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதி, தரமான சாலைகள் மற்றும் சுகாதாரமான முறையில் சாக்கடை வசதி.
- தமிழக நதிநீர் இணைத்தல், நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் ஆக்கிரமைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றுதல்.
- மும்முனை வர்த்தக இயற்கை விவசாயக் கொள்கையை (கால்நடை, மீன்வளர்ப்பு, விவசாயம்) விரிவாக்கம் செய்தல்.
- சுதேசி தொழிற்புரட்சி. தொகுதி தோறும் 100 புதிய தொழிற்சாலைகளிய உருவாக்குதல் (அரசே கொள்முதல் மற்றும் விற்பனை)
- மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல், தமிழ் அகதிகளை மீள் குடியேற்றம் செய்தல்.
- நியாயமான மின்கட்டணத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க வரையறை செய்தல்.
- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை மற்றும் தனியார் துறை நலன் பாதுகாத்தல், மூத்தோர் ஓய்வூதிய திட்டம் செயலாக்கம் செய்தல்.
- விற்பனை வரியை முறைபடுத்தியும், குறைத்தும், தேவையற்ற வரிகளை நீக்கியும், வரி ஏய்ப்பை முற்றிலும் தடுத்தும், மணல், கிராவல், ஜல்லி, சுண்ணாம்புக்கல், கிரானைட் மற்றும் தாதுமணல் விற்பனையில் இடைத்தரகர் என்ற ஒப்பந்த முறையை தவிர்த்து அரசே நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் வருவாய் பன்மடங்காக்கப்படும்.
No comments:
Post a Comment