துண்டு போட்டு மறைக்கப் பார்த்த காமராஜர்! – பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!
துண்டு போட்டு மறைக்கப் பார்த்த காமராஜர்! – பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!
துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்…தமிழகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம், மூன்று பிரதமர் களை உருவாக்கிய கிங் மேக்கர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம்

பொதுவாக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒருநாள் தனது வலது தோளில் துண்டு போடுவதற்கு பதில் இடது தோளில் போட்டு கூட்டத்திற்கு வந்திருந்தார்.
உடனே இதனை கண்ட அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் காமராஜரிடம் துண்டு வலதுதோளில் போடாமல் இடது தோளில் மாற்றி போட்டு வந்துள்ளீர்களே. எதாவது விசேஷ காரணமா? என்று தன் கேள்வியை எழுப்பினார்.
அதற்கு காமராஜர் ஒன்றும் இல்லை. சும்மாதான் போட்டுள்ளேன் என்று
சொன்னார்.
இருந்தாலும் அந்த பத்திரிகையாளர்கள் காமராஜரை விடவில்லை. அந்த பத்திரிகையாளரை தொடர்ந்து பிற பத்திரிகையாளர்களும் உடன் சேர்ந்து துண்டு
மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டு துளைக்க ஆரம்பித்து விட் டனர் .

உடனே காமராஜர் ஒண்ணும் இல்லைய்யா.,இடது பக் கம் சட்டை லேசா கிழிந்துள்ளது.அதை மறைக்கத் தான் இடப்பக்கம் துண்டை மாற்றிப்போட்டுள்ளேன். வேணும் ன்னா பாருங்கள் என்று துண்டைவிட்டு, எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.
இவரல்லவோ உண்மையான தேச பக்தன், தேச தலை வன், வழிகாட்டி, உண்மைத்தலைவன், தேசப் பங்காளன், உண்மையான மக்கள் தொண் டர்…
No comments:
Post a Comment