Sunday, March 20, 2016

செல்போனில் குறுந்தகவல் தெரிவிக்கப்படுகிறது

முன்பதிவு செய்பவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பி விவரங்கள் தெரியப்படுத்தப்படுவதால் இனிமேல் ரயில் பெட்டிகளில் பெயர் விவர அட்டவணை ஒட்டப்பட மாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு பெட்டி எண், இருக்கை எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு டிக்கெட் வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் பயணத்தை ரத்து செய்வதை பொறுத்து இருக்கை வசதி, படுக்கை வசதி ஒதுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பெட்டிகளிலும் பயணம் செய்வோர் பெயர் பட்டியல் இறுதி நிலவரம் ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக ஒட்டப்படும்.
தற்போது முன்பதிவு படிவத்தில் செல்போன் எண்ணை குறிப்பிட்டால் இருக்கை ஒதுக்கீடு குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டால் செல்போனில் குறுந்தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், ரயில் பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டுவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராச்சாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில்களில் முன்பதிவு நிலவரம் குறித்து பயணிகளுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதால் கோச்களில் ஒட்டப்படும் பயணிகள் முன்பதிவு அட்டவணையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் - பெங்களூரு சதாப்தி விரைவு ரயிலில் (எண்.12027) இன்று முதல், திருவனந்தபுரம் - நிஜாமுதின் இடையே இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயிலில் (எண்.12431) வருகிற 22ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோச்களில் முன்பதிவு நிலவரம் ஒட்டப்படாது. அதே நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் குறித்த நிலவரம் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி ரயில் நிலையங்களின் பிரதான நுழைவாயில்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...