Sunday, March 20, 2016

நகைக்கடை அடைப்பு ஏன் ? ஓர் அலசல்

2 லட்சத்துக்கு மேல் வாங்கினால் பான் கார்டு அவசியம்.
இந்த அரசு போட்ட கலால் வரி கடைக்காரர்களை கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாத்திலும் தான் வரி இருக்கு என்று நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போகிறார்கள் என்று நினைக்கலாம்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்க தானே செய்தார்கள்
இந்த 1% விதத்தால் மக்கள் நகை வாங்குவதை விட்டா விடுவார்கள்
கண்டிப்பாக கிடையாது
உண்மையான நோக்கம் வேற
இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்படி என்றால் ஓரு கடை காரார் எவ்வாறு இறக்குமதி செய்கிறாரோ அதற்கு மட்டும் வரி .
அந்த நகை கடை காரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று மத்திய அரசுக்கு தெரியாது .
அது மாநில அரசுக்கு தான் விற்பனை வரி (vat) அவர் எவ்வளவு விற்கிறார் என்று, அந்த விற்பனைக்கு மட்டும் வரி கட்டிருவார்.
ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சார் என்று மாநில அரசுக்கு தெரியாது
ஓரு நகை கடை காரர் 10 கிலோ நகை வாங்கினால் விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ 15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு தெரிந்து விடும்.
எப்பிடி இறக்குமதி செய்தது
10 கிலோ விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று ஆராய்ந்தால் இவர்களோட உள்ளடி வெளி வந்திரும்கிற பதற்றம் தான்
அது முதலாவதாக தரத்தின் பின்னனி அடிப்படும்.
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவர் உங்கள் நகைக்கு உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டார்
உங்கள் நகையின் கிராமோடு கூட்டி தான் பில்போடுவார்
எ.டு
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து 10+1=11 கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு vat போட்டு வாங்கிருவார்.
மாநில அரசின் தேவையோ என்ன விற்பனை ஆகுதோ அதற்கு தான் வரி
அவர்களுக்கு அதனால் இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
ஆனா கலால் வரியால் என்னாகும்

Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
Anantha Narayanan's photo.
11கிராம் விற்பனை என்று பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவர் நமக்கு கொடுத்தது 10 கிராம் மீதி 1 கிராம் அவரிடம் தான் இருக்கு.
இப்பிடியே சேதாரத்தின் தங்கம் அவரிடம் சேர சேர அவர் வாங்கியதிற்க்கும் விற்றதிற்க்கும்
கடையில் இருக்கும் இருப்பையும் சேர்த்தா, அவர் வாங்கியதை விட அதிகமாக இருக்கும்.
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
அடுத்து தங்க கடத்தல் இது தான் இப்ப இவர்களுக்கு பேரிடி
கருப்புபணம் உருவாகுவதே இவங்களால் தான்.
அதுக்கு உடந்தையாக போவதும் இவங்கதான் தான் .
அதான் இப்ப இவங்களுக்கு புளியை கரைக்கிறது
தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது.
அப்ப கடத்தி வர பட்ட தங்கம் பிடிபட்டது போக பிடிபாடமல் வருவது யார் கைக்கு வரும்.
இந்த நகைக்காரரிடம் தான் வரும்
இவர் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை கொள்ளை லாபத்திற்க்கு விற்பார்
இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான்
இந்த கலால் வரியால் ஓரு நகை கடைகாரர்
வாங்கியது எவ்வளவு
விற்றது எவ்வளவுன்னு
இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு வந்துவிடும் போது இவர்களால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது ,
சேதாரத்தில் மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது
சேதார தங்கத்தை கூட அவர் வாடிக்கையாளர்களுக்கு தரும் நிலை வந்துவிடும்
இப்போது நகை கடை காரர்களுக்கு சேதார நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே மிகப்பெரிய அடி
இப்ப தெரியுதா ஏன் இவ்ளோ பெரிய போராட்டம் என்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...