Wednesday, March 16, 2016

கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து ட்டு மாற்விறவா முடியும்.



ஒரு மனிதர், தான் காலமெல்லாம்
சம்பாதித்த பணத்தை, தம்
குடும்பத்திற்கே கூட
கருமித்தனமாக செலவு செய்து,
சேமித்து வைத்திருந்தார்.
அவர்
இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்
தன் மனைவியை அழைத்து “நான்
இறந்து விட்டாலும் என் பணத்தை என்
கூடவே கொண்டு செல்ல
விரும்புகிறேன். எனவே என்
பணத்தை என்னுடன் சவப்பெட்டியில்
வைத்து அடக்கம் செய்து விடு”
என்று கடவுளின் பேரால்
உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.
மனிதரின் கடைசி ஆசை என்று அவர்
மனைவியும் கடவுளின் பேரால்
உறுதி மொழி செய்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின்
எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.
சவப்பெட்டியை மூடும்போது, அந்த
நேர்மையான மனைவி, “கொஞ்சம்
பொருங்கள்”
என்று கூறி சவப்பெட்டியினுள்
ஒரு பேழையையும்
வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும்
அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும்
அறிந்திருந்த அவள் தோழி “நீயும்
முட்டாள்தனமாக அவர் சொன்னது போல்
செய்து விட்டாயா” என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி,
”அவர் சவப்பெட்டியினுள்
பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால்
உறுதி மொழி கொடுத்து ட்டு மாற்
விறவா முடியும்.
அவர் சேமிப்புகள் மொத்தத்தையும்
பணமாக்கி என் கணக்கில் பேங்கில்
போட்டு விட்டு, முழுத்தொகைக்கும்
காசோலை வைத்து விட்டேன். அவர் போன
இடத்தில் மாற்ற முடிந்தால் அவர்
செலவழித்துக் கொள்வதில்
எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”
என்றாள்........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...