ஒருவர் தன் மூதாதையர்களு க்கு தர்ப்பணம் செய்வதற்காக ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந் திருக்கிறார்.
கடலில் சென்று முழுக்குப் போ ட்டுவிட்டு வரலாம் என்று பார்த் தால் கையிலோ பணம் அட ங்கிய அவரது கைப்பை இருந் தது.
கடலுக்கு அதைக் கொண்டும்போக முடியாது. நனைந்துவிடும். அப்படியே அதை கரையிலும் வைத்து விட் டுப் போகமுடியாது. யாரா வது எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். என்ன செ ய்வது என்று யோசித்துவிட்டு கடற்கரை மணல் பரப்பில் ஓரிடத்தில் பர்ஸை வை த்து மணலால் மூடிவிட்டு திரும்பி வரும் தனக்கு அது அடையாளம் தெரி யவேண்டும் என்பதற்காக மணல் மேலே ஒரு குச்சியை நட்டு வைத்துவிட்டு தலை முழுகப் போனார்.
கடலுக்குப் போய் நன்கு தலை முழுகி வி ட்டு கரையேறிய அவர் ஒரு நொடி அதிர்ச்சியுடன் நின்றுவிட்டார். காரணம், கடற்கரை மணற்பரப்பு முழுக்கவே இப்போது குச்சிகள் நட்டு வைக்கப் பட்டிருந்தன.
ஒரு மணி நேரம் முன்பு இவர் குச்சியை நட்டு வைத்துவிட்டு கட லுக்குப் போவதைப் பார்த்த ஒருவர் ‘அடடா… இப்படியொரு குச்சி யை மணலில் நட்டு வை த்துவிட்டுதான் தலைமுழுகப் போகணும் போலிருக்கு!’ என்று எங்கிருந்தோ ஒரு குச்சியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து நட்டுவைத்துவிட்டு கடலில் இறங்க, அவரது உறவு க்காரர்களும் அவர் செய்ததையே அப்படி யே பிசகாமல் பின்பற்றி இருக்கிறார்கள்.
ஒரு மணி நேரம் முன்பு இவர் குச்சியை நட்டு வைத்துவிட்டு கட லுக்குப் போவதைப் பார்த்த ஒருவர் ‘அடடா… இப்படியொரு குச்சி யை மணலில் நட்டு வை த்துவிட்டுதான் தலைமுழுகப் போகணும் போலிருக்கு!’ என்று எங்கிருந்தோ ஒரு குச்சியைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து நட்டுவைத்துவிட்டு கடலில் இறங்க, அவரது உறவு க்காரர்களும் அவர் செய்ததையே அப்படி யே பிசகாமல் பின்பற்றி இருக்கிறார்கள்.
இந்தக் குடும்பம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் ‘‘இது எத ற்கு?’’ என்று கேட்க,‘‘ஐயையோ! தெரியா தா உங்களுக்கு? கடலுக்கு தலை முழுகப் போகும்போது இப்படித்தான் குச்சி நட்டு வச்சுட்டுப் போகணுமாம்… அதுதான் சம் பிரதாயம்!’’ என்று இவர் கள் ஏதோ காலம் காலமாக அதை கடைப்பிடிப்பவர்கள் போலச் சொல்ல, பயபக்தியுடன் அவர்க ளும் ஒரு குச்சியை நட்டு வைத்து விட்டு தலைமுழுகினார்கள்.
இப்படியே இந்த ஒரு மணி நேர இடை வெளியில் அங்கிருந்த அனைவருக்கும் இந்த ‘குச்சி நடுகிற’ தகவல் பரவி கடற்க ரை முழுக்க குச்சிகள் முளைத்துவிட்டன!
இப்படித்தான் சம்பிரதாயங்கள் என்று சொல்லப்படுவதை அல்லதுகாதில் கேட்பதை எல்லாம் பலர் ‘கண்ணை மூடிக்கொண்டு’ ஃபாலோ செய்து கொண்டிருக் கிறார்கள்.
இப்படி காரண காரியம் அறி யாமல் ஏன்? எதற்கு? என்று யோசிக்கா மல் எதையும் ஃபா லோ செய்வதால்தான் இன்று ஏமாற்று சாமி யார்கள் உட்பட பலர் ஆன்மிகத்தை வைத்து பண ம் பண்ணுகி றார்கள். இதன் இன்னொரு பக்கமாக மோசமான விளைவும் ஆரம்பிக்கிறது. ‘இதெல்லாம் மூடத்தனம்.. அதெல்லா ம் செய்ய முடியாது!’ என்று பலர் சடங்கு சம்பிரதாயங்களையேமுற்றிலும் ஒதுக்கி விடும் அலட்சியம் நடக்கிறது!
தீபாவளி போன்ற பண்டிகைகள் ஏன் கொண்டாடுகிறோம்? விரதம் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? ஆடி மாசம் ஏன் அம்மனுக்கு இத்தனை விசேஷம்? ஆரத்தி அக்னிஹோத்ரம் செய்வது ஏன் நல்லது? என்று ஆரம்பித்து பெண்கள் வெள்ளிக் கிழ மை ஏன் கட்டாயம் தலைகுளிக்க வேண்டு ம் என்கிறார்கள், அன்று ஏன் கோயிலுக்குப் போக வேண்டும் என்கிறார்கள் என்பது வரை உங்களோடு நிறை யப் பேசியிருக்கிறேன்.
ஆன்மிகத்தை விஞ்ஞான ரீதி யில் ஒவ்வொருமுறை விளக் கும் போதும் ‘ஓ… அதற்கு அர்த் தம் இது வா?’ என்று வியந்து எனக்கு பெண்களிடமிருந்து (ஆண்களிடமிருந்தும்) நிறைய ரெஸ்பான்ஸ் வரும்!
அரச மரத்தடியில் பிள்ளை யார் வைப்பதற்குக்கூட நம் முன்னோர், நம் நலன் விரும் பும் ஹெல்த் ரீதியிலான காரணங்களைத்தான் பின்னணியில் வைத் திருக்கிறார்கள்.
பல ஆயிரம் ஆயிரம் ஆண் டுகள் அவர்கள் தலைமுறை தலை முறையாக வாழ்ந்து கடைப்பிடித்த அரிய விஷய ங்களை வைத்து ‘இது செய் … உனக்கு நல்லது!’, ‘இதைச் செய்யாதே!… கெடுதல்!’ என் று சொன்னார்கள்.
பல ஆயிரம் ஆயிரம் ஆண் டுகள் அவர்கள் தலைமுறை தலை முறையாக வாழ்ந்து கடைப்பிடித்த அரிய விஷய ங்களை வைத்து ‘இது செய் … உனக்கு நல்லது!’, ‘இதைச் செய்யாதே!… கெடுதல்!’ என் று சொன்னார்கள்.
‘‘விடியற்காலையில் உடம்பு குளி. இத்தனை நாளைக்கு ஒரு முறை தலை குளி… இப்படி யாத்திரை போ… அப்படி பூஜை செய்!’’ என்று அவர்கள் சொன்னது எதிர்கால சந்ததிகளின் உடல்நலம் மற் றும் மனநலம் கருதித்தான்!
அந்த பழக்க வழக்கங்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரம்பரை பரம்ப ரையாக அனைவருமே கட்டாயம் கடை ப்பிடிக்க வேண்டுமே என்றுதான் அதை ‘சம்பிரதாயம்’ என்ற பெயரில் வாழ்க்கைச் சட் டமாக ஆக்கிவிட்டிருக் கிறார்கள்.
விஞ்ஞானம் வளர்ந்த பிற்காலத்தில் மக்கள், வாழ்க்கையை உடல் ரீதியாக சுலபமாகவும் வசதியாகவும் வாழ நினைத்து இந்த வாழ்க்கைச் சட்டங்களை மீறி நடந்து தங்கள் வாழ்க்கையை கஷ்டப்ப டுத்திக் கொள்ளக்கூடாது என்பத ற்காக இந்த சம்பிரதாயங்கள் ஆன்மிகத்துடன் இணைக்கப்ப ட்டுவிட்டது சிலரால்!
இப்படி விளக்கேற்றினால் இன்ன புண்ணியம், அப்படி கோயிலுக்கு ப் போனால் அது மாதிரி புண்ணி யம் என்று ஆசைகாட்டியோ, பயமுறுத்தியோ செய்ய வைக்கிறா ர்கள்.
‘எப்படியோ இவற்றை கடைப்பிடித்தால் போதும்’ என்ற பொதுநலஎண்ணம்தான் அப்படி ஆன்மிகத் துடன் இவற்றை இணைக்கக்கூட காரணம்! ஒரு விஷயத்தை ஒரு வர் கட்டாயமாக செய்ய வைக்க இப்படி ஆசையோ, பயமோ காட் டியோ செய்ய வைப்பது ஒரு மு றை. ஆனால் யோசிக்கத் தெரிந்த இன்றைய தலைமுறையினருக் கு இந்த முறை பொருந்தாது!
‘‘ஒருத்தர் கடைப்பிடிக்கிறாரே என்பதற்காக நானும் ஒன்றை கடை ப்பிடிக்க முடியாது..!’’ என்று இந்த சம்பிரதாயங்களையே மொத்த மாக புறந்தள்ளி விட்டு வாழ்க்கை யை புதிதாக தன் அறிவு சொல்கி றபடி அல்லது தன் வசதிப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் இன்று.
அப்புறம் தங்கள் வாழ்க்கையில் பல வருடங்களை செலவழித்து பல விஷயங்களை தானாகக் கற் றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு 35 வயதில் தலையில் முடியெ ல்லாம் உதிர்ந்த பின் புரிகிறது செவ்வாய், வெள்ளி என வாரத்தில்இரண்டு நாள் கட்டாயம் எண் ணெய் தேய்த்து குளிக்கச் சொ ன்ன தன் சம்பிரதாயம்.
அப்சர்வேஷன் குறைவாக இருக்கும் சிலருக்கோ, அது வாழ்நாள் முழுக்கக்கூட புரிவதில்லை… வாழ்நாள் முழுக்க பிரச்னைகளுட னும் வியாதிகளுடனும் போராடுகிறார்கள்.
சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவை வாழ்க் கையை பிரச்னைக ள் இன்றி ஹெல்த்தியா கவும் மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்ள உத வும் ‘சிம்பிள் டெக்னிக்ஸ்’ என்ற விஞ்ஞான உண் மை புரிந்தால் தான் இந்த நிம்மதியை, இந்த மகி ழ்ச்சியை அனைவரும் பெற முடியும்.
சடங்கு, சம்பிரதாயங்கள் போன்றவை வாழ்க் கையை பிரச்னைக ள் இன்றி ஹெல்த்தியா கவும் மகிழ்ச்சியாகவும் எதிர்கொள்ள உத வும் ‘சிம்பிள் டெக்னிக்ஸ்’ என்ற விஞ்ஞான உண் மை புரிந்தால் தான் இந்த நிம்மதியை, இந்த மகி ழ்ச்சியை அனைவரும் பெற முடியும்.
No comments:
Post a Comment