தமிழகத்தில் வரும் 16-05-2016 அன்று பதினைந்தாவது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற மாபெரும் கருத்து கணிப்புகளை மழை வெள்ளத்திற்கு முன்பு, மழை வெள்ளத்திற்கு பின் என்று எங்கள் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. மழை வெள்ளத்திற்கு முன்பு 18 நிறுவனங்களுடன் இணைந்து கணிப்புகளை மேற்கொண்ட எங்கள் நிறுவனம், மழை வெள்ளத்திற்கு பிறகு 13 நிறுவனங்களுடன் இணைந்து கருத்து கணிப்புகளை மேற்கொண்டது. தொகுதிக்கு 17 வாகனங்கள் என்று எங்கள் நிறுவன முகநூல் பக்க செய்திகளை படிக்கும் மூன்று நண்பர்களின் உதவியுடன் மொத்தம் 3,978 வாகனங்களில் கருத்துக்கணிப்பை மேற்கொண்டோம்.
இந்த கணிப்புகளில் மொத்தம் 70,20,000 வாக்குகள் பதிவாகியிருந்தன. இவைகளில் ஆண் வாக்குகளை விட பெண் வாக்குகளே 1.4% கூடுதலாக இருந்தது. மொத்த வாக்குகளில் 34,60,860 ஆண் வாக்காளர்களும், 35,59,140 பெண் வாக்காளர்களும் கணிப்புகளில் வாக்களித்தனர்.
இந்த கருத்துக்கணிப்பில் நாங்கள் முதலில் வைத்த கேள்வியே, தொகுதி அடிப்படையை பார்க்காமல், பொது அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என்பது தான். இதற்கு கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள்,
அஇஅதிமுக - 43.6%
திமுக - 28.6%
மக்கள் நலக் கூட்டணி - 7.9%
தேமுதிக - 1.7%
நாம் தமிழர் கட்சி - 5.7%
காங்., - 2.6%
த.மா.கா - 2.4%
பாஜக - 2.4%
பாமக - 5.09%
நோட்டோ - 0.01%
என்று தெரிவித்திருந்தார்கள். அதாவது,
அஇஅதிமுக - 30,63,528 வாக்குகள்
திமுக - 20,11,230 வாக்குகள்
மக்கள் நலக் கூட்டணி - 5,53,176 வாக்குகள்
தேமுதிக - 1,18,638 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - 3,99,438 வாக்குகள்
காங்., - 1,84,006 வாக்குகள்
த.மா.கா - 1.64,888 வாக்குகள்
பாஜக - 1,65,672 வாக்குகள்
பாமக - 3,58,722 வாக்குகள்
நோட்டோ - 702 வாக்குகள்
என்று வாக்குகளை பெற்றுள்ளன. இதுபோன்று மேலும் பல கேள்விகள் கருத்து கணிப்புகளில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களை காண - பகுதி - 1,பகுதி - 2, பகுதி - 3, பகுதி - 4, பகுதி - 5
இதன் பிறகுமாவட்ட வாரியாக, யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பில் பங்கேற்ற வாக்காளர்கள் பதில் அளித்துள்ளனர். அவை பற்றி தெரிந்துக்கொள்ள - Click Here
இந்த முடிவுகளை வைத்து பார்த்தோமேயானால், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், அதிமுக 171 தொகுதிகளையும், திமுக 51 தொகுதிகளையும், பாமக 4 தொகுதிகளையும், தமாகா 3 தொகுதிகளையும், மக்கள் நலக் கூட்டணி 3 தொகுதிகளையும், காங்., 1 தொகுதியையும், தேமுதிக 1 தொகுதியையும் கைப்பற்றுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.
அதேவேளையில், கூட்டணி அடிப்படையில் பார்த்தோமேயானால் இது ஒரு கட்சிக்கு தலைகீழாக மாறுகிறது. ஆம், திமுக + காங்., கூட்டணி என்பது 5 தொகுதிகளை குறைத்து வெற்றி பெற வைக்கிறது. அதாவது 51 தொகுதிகளை தனித்து பெற முடியும் என்கிற நிலையில் உள்ள திமுக, காங்., வருகையால் 5 தொகுதிகளை இழக்கிறது. அந்த 5 தொகுதிகளை அதிமுக, தமாகா தயவினால் பெற முடியும். அதேவேளையில் தமாகாவுடனான கூட்டணியினால் மக்கள் நலக் கூட்டணி வெல்லக்கூடிய 1 தொகுதியையும் அதிமுக கைப்பற்றும்.
அதன் விபரம் கீழே.,
திமுக + காங்., + இதர கட்சிகள் கூட்டணி - திருத்தனி, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், (திருவள்ளூர் மாவட்டம்)வில்லிவாக்கம், துரைமுகம்,(சென்னை மாவட்டம்)திருப்போரூர்,(காஞ்சிபுரம் மாவட்டம்)வேப்பணஹல்லி,(கிருஷ்ணகிரி மாவட்டம்)பாப்பிரெட்டிப்பட்டி,(தர்மபுரி மாவட்டம்)ஓமலூர், வீரபாண்டி,(சேலம் மாவட்டம்)கூடலூர், (நீலகிரி மாவட்டம்)பழனி, (திண்டுக்கல் மாவட்டம்)திருவெரும்பூர், லால்குடி, மனச்சநல்லூர், துறையூர், (திருச்சி மாவட்டம்)பெரம்பலூர், குன்னம்,(பெரம்பலூர் மாவட்டம்)விருதாச்சலம், நெய்வேலி, பன்ரூட்டி, புவனகிரி, சிதம்பரம்,(கடலூர் மாவட்டம்)மயிலாடுதுறை, நாகை, கீழ்வேலூர், (நாகப்பட்டினம் மாவட்டம்)தஞ்சாவூர், (தஞ்சாவூர் மாவட்டம்)புதுக்கோட்டை, ஆலங்குடி,(புதுக்கோட்டை மாவட்டம்)பெரியகுளம், கம்பம், (தேனி மாவட்டம்)ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, (விருதுநகர் மாவட்டம்)பரமக்குடி, (ராமநாதபுரம் மாவட்டம்)திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, (தூத்துக்குடி மாவட்டம்)வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், (திருநெல்வேலி மாவட்டம்)நாகர்கோவில், பத்மநாபபுரம், கிள்ளியூர், (கன்னியாகுமரி மாவட்டம்).
அதிமுக + தமாகா + இதர கட்சிகள் கூட்டணி - கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, மதுரவாயல், திருவொட்டியூர், (திருவள்ளூர் மாவட்டம்)ஆர்.கே நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி , (சென்னை மாவட்டம்)சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரம்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் , (காஞ்சிபுரம் மாவட்டம்)சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரம்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், சோழிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆர்காடு, வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தினன் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பட்டூர், (வேலூர் மாவட்டம்)ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தல்லி, (கிருஷ்ணகிரி மாவட்டம்)பாலக்கோடு, பெண்ணாகரம், ஆரூர், (தர்மபுரி மாவட்டம்)செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போலூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, (திருவண்ணாமலை மாவட்டம்)திண்டிவணம், வாணூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உழுந்தூர்பேட்டை, ரிஷவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி,(விழுப்புரம் மாவட்டம்)கங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, எடப்பாடி, சங்கரி, சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, (சேலம் மாவட்டம்)ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம்,(நாமக்கல் மாவட்டம்)ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துரை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர், (ஈரோடு மாவட்டம்)தாராபுரம், அவினாசி, திருப்பூர், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மாடத்துக்குளம்,(திருப்பூர் மாவட்டம்)உதகை, குன்னூர்,(நீலகிரி மாவட்டம்) மேட்டுப்பாளையம், சூளூர், கவுண்டமப்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்கநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வாழ்ப்பாறை, (கோவை மாவட்டம்)ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடச்சந்தூர், (திண்டுக்கல் மாவட்டம்)அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, (கரூர் மாவட்டம்)மனப்பாரை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, முசிறி, (திருச்சி மாவட்டம்)அரியலூர், ஜெயம்கொண்டம்,(அரியலூர் மாவட்டம்)திட்டக்குடி, கடலூர், குறுஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில்,(கடலூர் மாவட்டம்)சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், (நாகப்பட்டினம் மாவட்டம்)
அதிமுக + தமாகா + இதர கட்சிகள் கூட்டணி தொடர்ச்சி - திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நான்னிலம்,(திருவாரூர் மாவட்டம்)திருவிடைமருதூர், கும்பகோனம், பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி,(தஞ்சாவூர் மாவட்டம்)கந்தர்வக்கோட்டை, விராலிமலை, திருமையம், அரந்தாங்கி,(புதுக்கோட்டை மாவட்டம்)காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை,(சிவகங்கை மாவட்டம்)மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, (மதுரை மாவட்டம்)ஆண்டிப்பட்டி, போடிநாயக்கணூர்,(தேனி மாவட்டம்)ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், (விருதுநகர் மாவட்டம்)திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், (ராமநாதபுரம் மாவட்டம்)விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், (தூத்துக்குடி மாவட்டம்)சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், பாளையம்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், (திருநெல்வேலி மாவட்டம்)குளச்சல், விளவன்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்).
பாட்டாளி மக்கள் கட்சி - தர்மபுரி, (தர்மபுரி மாவட்டம்) செஞ்சி,மைலம், (விழுப்புரம் மாவட்டம்) மேட்டூர் (சேலம் மாவட்டம்).
மக்கள் நலக் கூட்டணி - திருநெல்வேலி,(திருநெல்வேலி மாவட்டம்) கன்னியாகுமரி(கன்னியாகுமரி மாவட்டம்).
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - ஈரோடு கிழக்கு (ஈரோடு மாவட்டம்).
ஆக மொத்தம் கூட்டணி முறையில்,
திமுக + காங்., + உதிரிகள் கூட்டணி - 46 (-5)
அதிமுக + தமாக + உதிரிகள் கூட்டணி - 181(+10)
பாமக - 4
மக்கள் நலக் கூட்டணி - 2 (-1)
தேமுதிக - 1
ஆக அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், கணிப்புகளில் கிடைத்துள்ள வாக்குகள் படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் எத்தனை சதவிகித அளவிலான தொகுதிகளை கைப்பற்ற முடியும் ? என்ற கேள்விக்கான பதில்,
அஇஅதிமுக - 73%
திமுக - 21.8%
பாமக - 1.6%
த.மா.கா - 1.4%
மக்கள் நலக் கூட்டணி - 1.3%
தேமுதிக - 0.42%
காங்., - 0.42%
நாம் தமிழர் கட்சி - 0.04%
பாஜக - 0.02%
கூட்டணியாக போட்டியிட்டால்,
அஇஅதிமுக + தமாகா + இதர - 77.35%
திமுக + காங்., + இதர - 19.65%
பாமக - 1.6%
மக்கள் நலக் கூட்டணி - 1.3%
தேமுதிக - 0.05%
நாம் தமிழர் கட்சி - 0.04%
பாஜக - 0.01%
ஒருவேளை கடைசி நேர போராட்டத்திற்கு பின், திமுக + காங்., + தேமுதிக கூட்டணி ஏற்பட்டால், 19.65 + 0.05 = 19.7% என்ற சதவிகித அளவிலான வெற்றி தொகுதிகளே கிடைக்கும். அதாவது 47 தொகுதிகளில் வெல்ல முடியும். இக்கூட்டணி அமைந்தால், தேமுதிகவிற்கு கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறும். இது பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு செல்லும். இதனால் அதிமுக கூடுதலாக ஒன்றிரண்டு தொகுதிகளை பெற முடியும். நடுநிலை வாக்குகள் சிதறலால் தேமுதிக வெல்லக்கூடிய அந்த ஒரு தொகுதியிலும் வெல்ல இயலாத சூழலை பெறும். ஆனால் தேமுதிக தயவால் திமுக 1 தொகுதியை நிச்சயம் பெறும். இதுதான் எங்கள் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.
இந்த முடிவுகளை வைத்து ஒன்றை மட்டும் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம். அதாவது, வரும் தேர்தலில் 3 முனை அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளிலான போட்டி என்பது வாக்குகளை பிரிக்கும். அது இந்த கருத்துக்கணிப்பில் தெளிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பல்வேறு கட்சிகள் மூலம் சிதறியுள்ளன. அது மட்டும் அல்லாது மக்கள் நலக் கூட்டணி, பாமக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூலம் திமுகவின் வாக்கு வங்கி சூரையாடப்பட்டுள்ளது. இந்த சூழலில் காங்., உடனான கூட்டணி திமுகவுக்கு மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைதான் அதிமுகவிற்கு 171 - 181 தொகுதிகளை அள்ளிக்கொடுக்கிறது. இதுதான் இறுதியான கணிப்புகள் கூறும் முடிவு.
இந்த கருத்துக்கணிப்பை தவிற்த்து மக்களிடம் எழுத்துப்பூர்வமான கருத்துக்களும் கேட்கப்பட்டன. மொத்தம் 30,000 கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் போதுமான நேரம் இல்லாத காரணத்தால், அவைகளில் வெறும் 234 கருத்துக்களை (தொகுதிக்கு 1 கருத்து) மட்டுமே நாங்கள் வெளியிட உள்ளோம். அது அடுத்த தொகுப்பில் வெளியாகும்.
கணிப்புகளின் முடிவு - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் !
No comments:
Post a Comment