Thursday, March 24, 2016

வாழ்க தமிழ்....................

"எதுக்கெடுத்தாலும் தமிழ்... தமிழ் என்று ஏன் இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் " என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏன் இந்த இனவெறி என்று கேட்கிறார்கள். இது வெறும் மொழி தானே? என்று சர்வச் சாதரணமாக நினைக்கிறிர்கள்.
தமிழ் வெறும் மொழியா?தமிழ் வெறும் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கருவியா?
அப்படி என்ன இருக்கு தமிழில்?
அகத்தியம், தொல்காப்பியம், ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றினை, பரிபாடல், பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம், மதுரைக் காஞ்சி, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்ற நூல்களை எல்லாம் படித்து அதிசயிக்கும் நாம். அவற்றை படைத்தவர்களை போற்றி பாடும் நாம், அப்பேற்பட்ட படைப்புகளை உருவாக்கிய அன்றைய தமிழ் சமூகத்தை பற்றி சிந்தித்து பார்த்தோமா?
சற்று சிந்தித்து பாருங்கள்
திருவள்ளுவன் என்றொருவனை ஈன்றெடுத்த தமிழ் சமூகம் எப்படி வாழ்ந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள் .
அந்த சமூகத்தின் வாழ்வியல், அறம், வீரம், கொடை என்று அனைத்தையும் சற்று சிந்தித்து பாருங்கள்.
வள்ளுவன் என்றொருவன் வாழ்ந்த காலத்தில் எமது முன்னோர் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்..
மதங்கள் தோன்ற முன், தோன்றிய எம் இலக்கணங்களின் சிறப்புகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சமூக ஏற்ற தாழ்வுக்கு வழி வகுக்காத நெறிகள்.
இன்றளவும் மெய்சிலிர்க்க வைக்கும் தத்துவங்கள்.
சமூக மேன்பாட்டை மனதில் கொண்டு இயற்றப்பட்ட மறைகள்.
வாழ்வியலை பகுத்து தொகுத்த நூல்கள்
தாம் வாழ்ந்த சூழலை அவதானித்து அதை வருங்காலத்திற்கு கடத்த பதிவு செய்ய வேண்டும் என்ற பக்குவம் கொண்ட அறிஞர் பெருமக்கள்.
என்று இத்தனை வியக்க வைக்கும் அம்சங்கள் கொண்ட நாகரிகத்தின் சொந்தக்காரர் நாம்.
இத்தகைய பெருமையும் சிறப்பும் கொண்ட மொழியை வேறெங்கும் காணோம்.
ஆனால் இன்றோ, எம் முன்னோர் கற்று தந்த வாழ்வியலை மறந்துவிட்டோம். அவர் கற்று தந்த அறத்தை மறந்துவிட்டோம். அவர்கள் போற்றிய வீரத்தை மறந்துவிட்டோம். கடைசியாக அவர்களின் விலாசமாக, அடையாளமாக எம்மிடம் இருக்கும் கடைசி நினைவு சின்னம் இந்த மொழி தான்.
இதையும் மறந்துவிட்டால், இழந்துவிட்டால்; நாளை எம் வரலாறையும் இழப்போம், நம் முன்னோரின் நினைவுகளை இழப்போம். நமது பெருமைகளை இழப்போம், எம் மண் மீது நாம் கொண்ட உரிமைகளை இழப்போம், எமது அடையாளத்தை இழப்போம், எமது அரசியல் அங்கீகாரத்தை இழப்போம், கடைசியாக நம்மையே நாம் இழப்போம்.
மதம் இல்லாமல் வாழலாம். பிற இனத்தவரால் தம் மொழியில்லாமல் கூட வாழலாம். ஆனால் தமிழர் ஒருபோதும் தமிழ் இல்லாமல் தமிழராய் வாழ முடியாது. தமிழ் எம் உயிரின் ஆதாரம். உன் நா தமிழ் மறந்தால்,உன் அடையாளத்தை நீ மறப்பாய். உன் எண்ணத்தில் இருந்து தமிழ் விலகினால், உன் எண்ணம் அதன் வேர்களை இழக்கும்.
நீ நீயாக இருக்க வேண்டும் என்றால், தமிழை படி, தமிழை போற்று, தமிழில் பேசு, தமிழில் எழுது, தமிழை கொண்டாடு, நாளைய தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்.
வாழ்க 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...