Saturday, September 30, 2017

“ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.

கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான். அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவள் பெயர் "சிலம்பி" ஊரிலேயே புகழ்பெற்ற தாசி. அவள் எதுக்கு வெறும்பயல் நம்மை சந்திக்க விரும்புகிறாள் என்ற யோசனையோடே போகிறார் புலவர்.
”உங்க இராமாயணம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. அதுல நீங்க சீதைய புகழ்ந்தும் வர்ணித்தும் எழுதினீங்களே அது போல என்னையும் எழுத முடியுமானு கேட்டா”
”கண்டாரோ.. மு... என்ன வார்த்தை சொல்லிட்டா.. சீதைய பாடின வாயால இவளை பாடணுமாம்” என மனசில் நினைச்சுட்டு.. “அதெல்லாம் சும்மா பாட முடியாது காசு வேணும்” என்றாராம்.
“யோவ்! புலவரே பயங்கரமான ஆளுய்யா நீர்.. தாசிகிட்டயே காசை புடுங்கபார்கறீரே.. இங்க வந்து கொடுத்துட்டு போனவன்தான் இருக்கிறான். வாங்கிட்டு போனவன் யாருமில்ல. சரி.. சரி நீர் வேறு வாயை திறந்து கேட்டுட்டீர்.. ரெண்டு காசுதான் தருவேன் சம்மதமா” என்றாள்.
சரி வந்தவரை லாபம்னு நினைத்துக் கொண்டு “ கையில காசு வாயில பாட்டு கொடு” என்றாராம்.
அவள் கொடுக்கவும். கரி கட்டைய எடுத்து அவள் வீட்டு சுவற்றில் வேகமா எழுதினார்.
”தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே”
ரெண்டு வரி எழுதிட்டு ரெண்டு காசுக்கு அம்புட்டுதானுட்டு வேகமா கிளம்பி போயிட்டார்.
சிலம்பியும் என்னடி இது இப்படி ஆயிடுச்சேனு நினைச்சுட்டு. ஊருல நாட்டுல இருக்கிற கவிஞர்களை எல்லாம் அழைச்சு மிச்ச வரிய எழுதக் கேட்டாள். கம்பனோட வரிக்கு மறுவரி எழுதற தைரியம் எவனுக்கு இருக்கு. ஒரு பயலும் முடியாதுனுட்டான்.
இப்படியே வருசங்கள் போச்சு. சிலம்பிக்கும் வயசாயிட்டிருக்கு. ஒரு நாள் ஒரு கிழவி அவள் வீட்டு வாசலில் வந்து தண்ணி கேட்டாள். அவளைப் பார்த்ததுமே சிலம்பிக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு.
அம்மா! நீங்க ஒளவைதானேனு உள்ளே வாங்க.. இந்த கவிதையின் மிச்ச வரிகளை நீங்க எழுதிட்டா. தண்ணி என்ன கூழே ஊத்தறேன் என்றாள்.
ஒளவை அந்த சுவற்றைப் பார்த்தாள்.
""தண்ணீரும் காவிரியே
தார்வேந்தன் சோழனே
பெண்ணாவாள் பொன் சிலம்பி
அம்பொற் சிலம்பே சிலம்பு""
என மிச்ச வரிகளை எழுதி முடித்தாள். தண்ணீர் என்றால் காவிரிதான்.. ராஜா என்றால் சோழந்தான்.. பெண் என்றால் சிலம்பிதான் (கம்பன் பாடிய சீதையும் பெண்ணில்லை.. இளங்கோ பாடிய கண்ணகியும் பெண்ணில்லை) அது போல அவள் காலில் உள்ளது தான் சிலம்பு (கண்ணகி போட்டதும் சிலம்பில்லை, பாண்டிமாதேவியதும் சிலம்பில்லை, இளங்கோ எழுதினதும் சிலம்பில்லை)
கம்பன் வந்து பார்த்தான். யப்பா என்ன ஒரு அர்த்தம்.. ஒரே அடியில கம்பனையும் இளங்கோவையும் காலை வாரி நிலத்துல அடிச்சு போட்டாளே இந்த பொம்பளை. அதுவும் யாரு முன்னால் ஒரு "தாசி" முன்னால.
பிரச்சனை சோழனிடம் போச்சு.. ”ஏன்மா நீ இப்படி எழுதலாமா அதுவும் கொஞ்சம் கூழுக்காக” என்று சோழன் கேட்டானாம்.
அதுக்கும் ஒரு பாட்டு சொன்னா கிழவி
கூழைப்பலா தழைக்கப் பாட -- குலமகளும்
மூழ அழாக்குத் திணை தந்தாள். சோழா கேள்
கூழுக்கும் பாடி உப்புக்கும் பாடி
ஒப்பிக்கும் என் உள்ளம்.
என்றாள்.. நான் மன்னர் தரும் பரிசுக்காகக் கவிதைகளைத் தூக்கிக்கொண்டு அலைபவள் அல்லள் என்று சோழனுக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டு,கம்பனுக்கும் ஓரு ஊமைக்குத்து சேர்த்தே குத்தும்படி சொன்னால்,...
அன்னைக்கு ஒரு நாள் உன் வம்சம் தழைக்க கூழைப்பலா தழைக்கனும்னு பாடினேன்.. உன் பொண்டாட்டி முழா அழாக்கு திணை கொடுத்தா.. இன்னைக்கு கூழுக்கு பாடினேன்.பாட சொன்னா பாடுறதுதான் என் குணம் கூழா உப்பா திணையானு பார்த்து பாட மாட்டேன் என்றாளாம் ஓளவை கிழவி..
எப்பூடி....நம்ம தமிழ்....

அதிகாரம் விஜயகாந்துக்கு ..

நிரந்தர பொதுச் செயலாளர் விஜயகாந்த்..!
தேமுதிகவின் நிரந்தர பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைச் செயலாளர்களாக சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர். இளங்கோவன் உள்பட 4 பேர் நியமனம்,
அவைத்தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ்.
எத்தகைய முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்படுகிறது என தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனிதா தற்கொலையல்ல!!!

தி.மு.க. வின் திட்டமிட்ட கொலை!!!
அனிதாவை டெல்லிக்கு அழைத்துச்சென்று வழக்கு தொடுக்க தேவையான செலவுகளை செய்தவர் திமுகவின் எம்,எல்,ஏ சிவசங்கர் ...!
அனிதாவுக்கு எதிராக வழக்காடியவர் காங்கிரசின் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்...!
திமுக + காங்கிரஸ் கூட்டணி
நீட்ட எதிர்த்து போராடுறாங்களாமாம்..!
இது தான் அரசியல்... கூட்டணி .. தர்மம். !
மருத்துவ படிப்பை விட்டு.அக்ரி படித்து விவசாயிகளை காப்பற்ற போவதாக கூறிய அனித்தாவை தற்கொலைக்கு தூன்டியது யார் ?
கம்யுனிஸ்ட் ஆளும் கேரளாவில் #நீட்க்கு ஏதிராக அதன் மாணவர் அமைப்புகள் போராடாவில்லை..
ஆனால் தமிழர்களை மடையர்களாக்கி கம்யுனிஸ்ட் இங்கே அரசியல் செய்கிறது?

தொழில்/வேலை...

ஜாதக கட்டத்தில் பத்தாம் இடம் தொழில் பற்றியது. ஒருவரது ஜீவனஸ்தானத்தை சொல்வது.
இந்த பத்தாம் இடத்தை பார்க்கும் முன் இதை பிரித்து தஸாம்ஸம் என்று ஒரு சக்கரம் போடவேண்டும்.
ராசி கட்டம் போலவே தசாம்ஸ கட்டம் போட்டு கொள்ள வேண்டும். அதில் முயற்சியை குறிப்பது 3ம் பாவம் அதோடு 6,9,12 பாவங்களையும் பார்க்க வேண்டும் அதில் அமரும் கிரஹங்களும் தசாம்ஸ கட்டத்தில் பத்தாமிடத்தில் அமரும் கிரஹங்களும் அதிக நன்மை தரக்கூடியது.
உதாரணமாக ரிஷப லக்ன ஜாதகம் துலாம் ராசி லக்னத்துக்கு பத்தாம் அதிபதி சனி 6ல் சரராசிக்காரனான சந்திரனுடன் இவர் தஸாம்ஸ கட்டத்தில் 5ல் மேலும் லக்னத்துக்கு 12ம் இடம் என்பது அயனம் அதாவது நகருதலை குறிக்கும் இதன் அதிபதியான செவ்வாய் வாகனகாரகனான சுக்ரனுடன் 4ல் சுகஸ்தானத்தில் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழில் செய்ய இயலாது மேலும் தசாம்ஸ கட்டத்தில் முயற்சியை குறிக்கும் 3ம் இடத்தில் ஆன்மீக காரகனான குருவும் கேதுவும் இருக்கிறது
அதனால் ஜாதகர் ஆன்மீக சுற்றுலா வாகன ஏற்பாட்டாளராக தொழில் செய்வார். மேலும் பணவரவை குறிக்கும் சுக்ரன் தசாம்ஸ கட்டத்தில் துலாத்தில் ஆட்சியில் உள்ளது அதனால் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் மூலம் தொழில் நடத்தி சம்பாதிப்பார்.
இப்படி ஒவ்வொரு ஜாதகத்திலும் தஸாம்ஸ கட்டம் போட்டு பார்த்து அதன் தசை புக்தி இவற்றை ஆராய்ந்து பலன் அறிய வேண்டும்.

கடவுள் இருக்காங்கோ.........

கேரளாவில் முதல்வர் திரு.பினாரயி விஜயன் விஜயதசமிக்கு குழந்தைக்கு அரிசியில் அட்சரம் எழுதுகிறார்.
(படஉதவி: நண்பர் ரகுபதி. பழைய போட்டோவா என்று தெரியாது)
கம்யூனிஸ்ட்டுகள் அங்கே கிருஷ்ண ஜெயந்தியையே கொண்டாடுகிறார்கள். கேரளாவில் இது பிரச்சனையேயில்லை. யாருடைய மதநம்பிக்கையிலும் தலையிடுவதில்லை.
ஆனால் 1 சதவிகித ஓட்டுகளை வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் இங்கு தமிழகத்தில் பேசுகின்ற இந்துமத எதிர்ப்பும், திமுக போன்ற பிற கட்சிகளின் இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல மாட்டோம் என்று கூறுகிற போலி சிக்குலரிசமும்தான் வியப்பாக இருக்கிறது.Image may contain: 2 people, people sitting

அரசு கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் இலவசம்: யாரும் பணம் கொடுத்து வாங்க வேண்டாம்...

பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், சில உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் தாங்கள் வழங்குவதாகவும், அதற்காக ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் இணைப்புத் துண்டிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் கூறுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலவச டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமம் பெற்றுக்கொண்டு அரசு கேபிள் டிவி இணைப்பைத் துண்டித்தும், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.
அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் அவர்களின் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான புகாரை 1800 425 2911 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.Image may contain: 2 people

Friday, September 29, 2017

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே உள்ள செளந்தர்யபுரம் என்ற கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இங்கு சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீபத்ம சக்கரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளும் அஷ்டலஷ்மிகளும் ஸ்ரீஅம்புஜவல்லி தாயாருடன் இணைந்துநவசக்தியாக அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஸ்ரீபத்ம சக்கரம் மகாலஷ்மி அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவே இச்சக்கரத்தை வணங்கினால், இச்சக்கரத்தில் எட்டு இதழ்களாக உள்ள அஷ்ட லஷ்மிகள் வீற்றிருப்பதால், ஷேம, தைர்ய, வீர்ய, விஜய, ஆயுள், ஆரோக்கியங்கள் உட்பட அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளுவாள் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் பெளர்ணமி தோறும் அஷ்டலஷ்மி மகாயக்ஞம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.No automatic alt text available.

படித்ததில் பிடித்தது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான
பெண்கள் திரண்டிருந்தனர்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு
தரமான பால் இலவசமாக வழங்கபடும்,
இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.
பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் என
இன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது,
இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?'
''எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கத்துல
ஒரு சின்ன கிராமம்.
இப்ப பொன்மனியில குடும்பத்தோட வசிக்கிறேன். எனது தம்பியின் மனைவி சில ஆண்டுகளுக்கு
முன்பு தன் கைக்குழந்தையுடன் சென்னை
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்றிருக்கிறார்.
அப்போது குழந்தை பசியால் அழுதிருக்கிறது.
அந்த நள்ளிரவில் பேருந்து நிலையம் முழுவதும் அலைந்து ஒரு டீக்கடையில் பால் வாங்கி
கொடுத்திருக்கிறார். அதை குடித்த கொஞ்ச
நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம்
ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் எனக்கு
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இங்கும் சில டீக்கடைகளில் பாலில்
பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும்,
பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க.
அது பெரியவங்களுக்கே ஒத்துக்காது.
குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.
எனவே,
தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு
கலப்படம் இல்லாத தரமான பாலை
இலவசமாக வழங்கி வருகிறேன்.
இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்து
வருகிறார்'' என்றவர்,
''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்ட
மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட
மேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்க
மகளிரணி என பலரும் பாராட்டினாங்க.
இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும்
என சொல்றாங்க.
நான் இதை விளம்பரத்திற்காக செய்யல,
இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது.
நாம போனாலும், நம்ம பேரு நிக்கனும்” என்கிறார்.
Image may contain: 1 person, standing

செய்திகளை முந்தி தரும் ஒரே பத்திரிகை.. டுமீல்! ஒசியில் படியுங்கள்!

மத்திய மந்திரி சபை திடீர் மாற்றம்: யஷ்வந்த் சின்கா நிதி மந்திரியாகவும், அருண்ஷோரி வர்த்தக அமைச்சராகவும் ஜெய்ட்லி சட்ட அமைச்சராகவும் சத்ருகன் சின்கா ஒலி பரப்பு மந்திரியாக நியமனம். சுப்ரமண்யன் சுவாமி நிதி ஆலோசகராக நியமனம். ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ கவர்னராக நியமனம்!
காங்கிரஸ் அதிர்ச்சி.
பதவியேற்பை புறக்கணித்தது.
பதவி் ஏற்றபின் யஷ்வந்த அளித்த பேட்டியில் மோடி தலைமையில் நாடு கோடியில் உள்ள மனிதனை அடையும் வகையில் வேலை செய்வதாகவும் இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் போவதாகவும் கருத்து. இனிமேல் நல்லகாலம்தான் எனவும் பேட்டி.
அருண்ஷோரி நாட்டை மோடி காப்பாற்றி விட்டதாகவும் வர்த்தகம் நினைக்கவே முடியாத அளவுக்கு மோடி ஆட்சியில் விரிவடைத்துள்ளதாக கருத்து..
சு.சாமி...இனி இந்தியாவை யாரும் பொருளாதாரத்தில் அசைக்க முடியாது எனவும்..ஐ.நாவே இந்தியாவை கண்டு்பயப்படுவதாக பேட்டி.
ஆடிட்டர்குருமூர்த்தி...இந்தியாவின் ஜிடிபி ஆரோக்யமாக இருப்ப்தாகவும்.. இனிமேல் அச்சடிக்கும் நோட்டால் எந்த பிரச்சினையும் வராது..ஏனெனில் அந்தந்த குடும்பங்கள் எவ்வளவு வேண்டும் என மாதமொரு சொன்னால் அச்சடித்து தரும்படி செய்யப்போவதாகவும் தகவல்..
திமுக காட்டம்...ஆரியர்களுக்கு பதவியை தாரை வார்த்திட்ட மரம்ம் என்ன திமுக கேள்வி...யாரை பலி வாங்க இந்த பதவியேற்புகள் என டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை.
அறிக்கை வெளியான அரை மணிநேரத்தில்..திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்..டிகேஎஸ்.இளங்கோவன் அறிக்கை கழகத்தைத் சார்ந்த்து இல்லை..அவரின் தனிப்பட்ட கருத்து என தகவல்..
யாரும் இது போல அறிக்கை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தல்.
எதிரிகளின் வாயை முக்கிய பதவி கொடுத்து அடைத்திட்ட மோடி அமீத்ஷாவைக்கண்டு அரசியல் வல்லுநர்கள் திகைப்பு.. இதற்கிடையில் எதிர்கட்சியின் முக்கிய தமிழக பொருளாதார வல்லுநர் ஒருவரும் தன் சோர்ஸுகள் மூலமாக பாஜகவில் சேர தூது மற்றும் பதவியைப் பெற முயற்சி என ஜூவி ஆந்தையார் தகவல்..

இவர்கள் குடும்பத்து உரிமை தான்.

திருப்பூர் குமரன்.,
தன் மனைவியை நாட்டுக்காக நடுத் தெருவில் விட்டு சென்றார்.
வாஞ்சி நாதனும் அப்படித் தான். நாடு சுதந்திரம் அடைந்தும் இவர்களின் மனைவிகளுக்கு தியாகி பென்ஷன் கிடைக்கவில்லை.

கோடிஸ்வராக இருந்து கப்பலோட்டி கடனாளி ஆன. வ.உ.சிதம்பரம் பிள்ளை தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்காமலே சென்றார்.
சிறைக்கு சென்று குஷ்டரோகியாக வந்த தியாகி சுப்பிரமணியன் சிவாவை யாரும் கண்டுக்கலே.
இவர்களுக்கு சிலை வைத்தாலும்,
மணி.மண்டபம் கட்டுவதும் அரசின் கடன்.
ஆனால் காலம் முழுதும் திரைப்படத்தில் உச்ச நட்சத்திரம் ஆக ஜொலித்தவர். கோடிகளை குவித்த மகா நடிகர். தன் குடும்த்துக்கும் சொத்து சேர்த்து வைத்தவர். உண்மையில் இவருக்கு சிலை வைப்பதும் மணிமண்பம் கட்டுவதும் இவர்கள் குடும்பத்து உரிமை தான்.
ஆனால் அதை அரசாங்கம் செய்வது இவரின் திறமைக்காக இருக்கலாம்.
அதை முதல்வர் வந்து தான் திறக்க வேண்டும் என சொல்லுவது என்ன நியாயம்?
ஊரான் வீட்டு நெய்யே.,

‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன் என்பதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.
பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.
பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செவ்வனே செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர். மோட்சகதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.
கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக்களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.
எனக்குப் பிரியமான கத்தரிக்காயை காசியில் விட்டுவிட்டேன், இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று பெருமை பேசுவதால் மட்டும் எந்தப் பலனும் கிடைத்துவிடாது. அதன் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டு எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்பவனுக்கு ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். ‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ என்ற வைரமுத்துவின் வரிகளை அனுபவத்தில் உணர முடியும்.

நமது தொண்மையை யாரும் ஒரு காலத்தால் நிர்ணயிக்க முடியாது.

இந்திய இனங்களில் தமிழர்கள்தான் உலகில் அதிக நாடுகளில் வாழ்கிறார்கள். இந்திய மொழிகளில் தமிழதான் அதிக நாடுகளில் பேசப்படுகிறது. சில நாடுகளில் தமிழதான் ஆட்சி மொழியாக இருக்கிறது. கொரியா மொழியிலும் ஜப்பான் மொழியிலும் நம் தமிழ வார்த்தைகள் கலந்து இருக்கின்றன.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் போன்ற தமிழர்கள் கலியுகம் தோன்றிய நாடகளில் வாழ்ந்தவர்கள். நமது தொண்மையை யாரும் ஒரு காலத்தால் நிர்ணயிக்க முடியாது.
சிந்து சமவெளி நாகரீகம் தமிழனுடையது என்ற இடத்திற்கு நான் போகவில்லை. அது ஆங்கிலேயர்களால் சொல்லப் பட்டது. அதற்கு நமது இலக்கியங்களில் எந்தவிதமான் ஆதாரங்களும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட இனத்திற்கு இந்த உலகத்தில் தனிநாடு இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.
அதேநேரத்தில், இப்பொழுது எல்லாம் காலம் கடந்துப் போய்விட்டது. தமிழநாட்டில் எழும் தனிநாடு கோரிக்கை எந்த வழியிலும் ஏற்க முடியாது. உலகம் சுருங்கி விட்டது. ஒருவர் மற்றையவரை சார்ந்துதான் வாழ்ந்து ஆகவேண்டும். உணர்ச்சிவயப்பட்டு எந்த பயனும் இல்லை. இருப்பதை வைத்து திருப்திபடுவது மட்டுமே நமக்கு பயன் அளிக்கும்.

"இது எப்படி சாத்தியம்.?"

அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.
பத்து நாட்கள் முடிந்தது.
அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.
சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.
அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.
"இது எப்படி சாத்தியம்.?"
அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.
"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"
மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.
வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், இந்த முறை மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.
.
நீதி: நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா... அதுல மாற்றமே இருக்காது கண்ணு.!
😂😂😆😆😝😝😂😂

Thursday, September 28, 2017

ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து ....



நாட்டில் ஏழை மக்களும், விவசாயிகளும் ,நடுத்தர மக்களும் சாப்பாட்டுக்கு வழியின்றி வரி கட்டிக்கொண்டு நிற்கையில்.... மானம்கெட்ட மீடியாக்கள் மீண்டும் திசை திருப்புகின்றன அம்மையார் மரணத்தை பற்றி .....
சிபிஐ விசாரணை வைத்து, முடிக்க வேண்டிய விசயத்தை , மீண்டும் மீண்டும் மக்கள் பிரச்சனையின் கவனத்தை திசை திருப்ப உபயோகிக்கின்றன மீடியாக்கள் .
சூடு ,சொரணையற்ற அரசியல்வாதிகள்... அவர்களோடு போட்டி போடும் மீடியாக்கள்...
ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து ....
இவர்களின் தெருக்கூத்தைப் பார்த்து, பாரம்பரிய தெருக்கூத்தே மறைந்துவிட்டது....
எரிபொருள் ,அத்தியாவசியப் பொருள் போன்ற பொருட்களில் வரிகளைச் சுமத்தி, நாட்டு மக்கள் மீது வரியை திணித்துக் கொண்டிருக்கிறது...
மக்களை மதிக்காத மக்களாட்சி மீது, மாபெரும் புரட்சி வெடிக்கப் போகிறது...
அரசியல்வாதிகள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களெல்லாம் சூறையாடப்படும்.
நாட்டின் முக்கிய தூண்களில் ஊழலும், அதிகாரமும் ஆட்டிப்படைக்கிறது .
போதும் நிறுத்துங்கள்.....
உங்களால் அமைதிப்பூங்கா அழிவுப் பூங்காவாக மாற வேண்டாம்.....
இளைஞர்களை கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்த வழிகாட்டுங்கள் ...
உங்கள் அருவருப்பான செயல்களால், அவர்களை ரத்தம் தோய்ந்த கத்திகளை தூக்க வைத்துவிடாதீர்கள்...
இன்றைய ஜனநாயக படுகொலை...
நாளை வேறு பாதையை தேர்ந்தெடுக்க வைக்கும் ......
தயவு செய்து திருந்துங்கள்...உங்களை திருத்திக்கொள்ளுங்கள் நாட்டின் முக்கிய தூண்களே......
எங்கும் அமைதியை நாடும் எச்சரிக்கை உணர்வுடன்...

சிறுதொழில்கள் அழிஞ்சு, பொருளாதாரம் படுபாதளத்துக்கு போக காரணமானவங்கள பாராட்டவா முடியும்?

இந்தியா என் நாடுதான்.. அதை நேசிக்கிறேன்.. கண்ட கழுதைங்களும் ஆட்சிக்கு வந்து, அதை சூறையாடுதுங்க.. நாடுங்கறது, நிலம் இல்லை.. அதில் வாழும்
மக்கள்.. அவங்க வாழ்வாதாரத்த பறிச்சு, இயற்கையை அழிச்சு, புல்லட் ரயில் விடறேன், புண்ணாக்கு ரயில் விடப்போறேன்னு வெத்து விளம்பரம் தேடறவங்கள கண்டிச்சா, அது தேசவிரோதமா?
நல்லா வளர்ந்து வந்த பொருளாதாரத்த, முட்டாள்தனமான வேலையப்பாத்து, நாசமாக்கினவங்கள கண்டிச்சா அது தேசவிரோதமா?
ஏழைங்களையெல்லாம் கொன்னுட்டு, பத்துலட்ச ரூபாய்க்கு கோட்டு வாங்கிப்போட்டா, பணக்காரநாடா ஆயிடுவோம்னு நம்பமாட்டோம்னு சொன்னா, தேசவிரோதமா?
18000 கிராமங்களில் மின் வசதியில்லங்கறப்போ, டிஜிட்டல் பரிவர்த்தனை, வெங்காய பரிவர்த்தனைன்னு முட்டாள்கள் மாதிரி பேசறத கண்டிச்சா, தேசவிரோதமா?
இதைத்தான் சாப்பிடணும்னு ஜனநாயக நாட்ல பைத்தியம் மாதிரி சொல்றத கண்டிச்சா, தேசவிரோதமா?
மத்திய அரசு அதிகாரத்த, மாநிலங்கள்ல துஷ்பிரயோகம் பண்ணி, மறைமுகமா அதிகாரம் செலுத்தற அயோக்கியத்தனத்த கண்டிக்க கூடாதா?
ரெண்டு கோடி பேர் வேலையிழந்து, சிறுதொழில்கள் அழிஞ்சு, பொருளாதாரம் படுபாதளத்துக்கு போக காரணமானவங்கள பாராட்டவா முடியும்?
யாரைக்கேட்டாலும், கடந்த மூணு வருஷத்தில ஒண்ணுமே சரியில்லைன்னு சொல்ற அளவு மோசமா ஆட்சி பண்றவங்கள, முட்டுக்கொடுக்கறவங்கள பாத்தா பாவமா இருக்கு..
ஏழைங்கள்லாம், சாப்பாட்டுக்கு இல்லாம செத்தாலும் பரவால்ல.. சாகறப்போ "பாரத் மாத்தாக்கீ ஜே" சொன்னா போதும்...
ரயில் க்க்கூஸ்ல முதல்ல தண்ணிவிடுங்க.. அப்பறமா புல்லட் ரயில் விடலாம்...
கலர்,கலரா ட்ரெஸ் போட்டு, நாடு நாடா போயி, கையை ஆட்டி போஸ் கொடுத்துட்டா, நாடு வளர்ந்திடுச்சுன்னு நம்பணும்னா, நாங்களும் காவிதான் கட்டணும்...

*மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!*

👍👍👍👍👍👍
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்
கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
9. கஷ்டம் தான் … ஆனா முடியும்.
10. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு
வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு
ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,
அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி
இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே
போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே,
* வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்
முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.வெற்றி நமதே!!!!!!!!!!!!!! நன்றி அன்பர்களே!!
🖼👍🖼👍🖼🏓🖼

எங்களுக்கும் ஒரு கொள்கை உண்டு.

தில்லுமுல்லு படத்தில் ரஜினிக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் இன்டர்வியூ உரையாடல் வருமே, அதே பாணியில் மக்களுக்கும், ஓட்டுகேட்டு நடைபயணம் சென்றுள்ள ஸ்டாலினுக்குமான கற்பனை உரையாடல்.
'நீங்க தான் ஓட்டு கேக்க வந்ததா, உங்க பேரு'
'இளைஞரணி தலைவர் கழகத்தின் தளபதி ஸ்டாலின்'
'ஆமா உங்க பேர யாரு கேட்டாலும் இப்படி தான் முழுசா சொல்லுவீங்களா'
'ஆமா சார். நம்ம பேர சுருக்குற உரிமை நமக்கு இல்லை. நாம என்ன பெரியாரா, அண்ணாவா, கலைஞரா, அஞ்சா நெஞ்சனா. அதனால தான் என் பேர யாரு கேட்டாலும் 40 வருசத்துக்கு முன்னாடி எனக்கு கொடுக்கபட்ட பதவி இளைஞரணி தலைவர், நானே எனக்கு செல்லமா வச்சுகிட்ட பேரு கழகத்தின் தளபதி, எங்க அப்பா வச்ச பேரு ஸ்டாலின், எல்லாத்தையும் சேர்த்து சொல்லுவேன்'
'ஓட்டு கேட்டு வந்துருக்கீங்க வேஸ்டி கட்டாம பேண்டு போட்டு வந்துருக்கீங்க'
'நமக்கு எதிரி ஜாஸ்தி.கோவத்தில எவனாவது வேஸ்டியா அவுத்து விட்டுடானா இருக்குற கொஞ்சம் நிஞ்சம் மானமும் போய்டும் அதான் சார் பேண்ட் போட்டு வந்தேன்'.
'சினிமாவுல ஏதாவது இன்ட்ரெஸ்ட் உண்டா'
'அரசியல் பண்ற நேரம் போக அப்பப்ப டைம் கிடைச்சா, அப்பாவும் பெர்மிசன் கொடுத்தா சினிமா பார்ப்பேன் சார்'
'7G தெரியுமா'
'இல்ல சார், எனக்கு 2G(ஊழல்) தான் தெரியும்'
'நான் சொல்றது உலக புகழ் பெற்ற செல்வராகவன் எடுத்த 7G ரெயின்போ காலணி'
'மன்னிக்கனும் சார். நான் கேள்விபட்டது இல்லை'
'படிப்புக்கு நடுவுல பொழுதுபோக்கே தவிர, பொழுதுபோக்கே வாழ்க்கை இல்லனு எங்க அப்பா சொல்லிருக்காரு சார்'
'வேற என்னன்ன சொல்லிகொடுத்துருக்காரு உங்க அப்பா'
'எங்க அப்பா சொல்வாரு சார், முதல நீ ஒரு சுயநலவாதி, அப்புறம் தான் நீ ஒரு பொதுநலவாதினு'
'ஓஹோ அதான் இப்படி ஊழல் பண்றீங்களா'
'பொருளாதார அடிப்படையில பாத்தீங்க நாங்க பண்ண ஊழல்னால எங்க குடும்பமே ஒரு தலைமுறைக்கு உக்காந்து சாப்டும்'
'அதிகமா ஊழல் பண்ணிருந்தீங்கனா இரண்டு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாமே'
'எத்தனையோ இந்தியர்கள் சாப்ட வழி இல்லாம ரோட்ல இருக்காங்க. நாம சாப்டுற சாப்பாடுக்கு மேல சாப்டுற ஒவ்வொரு பருக்கையும் அடுத்தவனோடதுனு விஜய் சொல்லிருக்காரு சார்'
'யார் அந்த விஜய்'
'நீங்க கேள்விபட்டது இல்லையா. ரொம்ப ஆச்சிரியமா இருக்கே'
'ஆச்சிரிய படுற அளவு அப்படி யார் அவரு'
'கிபி 2015 வாழுற ஒரு பெரிய மகான். போதிதம்பர் எழுதுன ஓலை சுவடில அவர பத்தி படிச்சுருக்கேன் சார்'
'நாங்க ஓட்டு போடனுமா இரண்டு பெரிய மனுஷங்க (அழகிரி, கனிமொழி) ரெக்கமண்டேசன் வேணுமே. இருக்கா'
'நான் படிச்ச படிப்புக்கு போடாதா ஓட்டு, எங்க அப்பா பேருக்கு இல்லாத ஓட்டு, அந்த இரண்டு பேரு சொல்லிதான் போடுவீங்கனா அப்படி ஒரு ஓட்டு எனக்கு வேணாம் சார். நான் வரேன் சார்'
'கொஞ்சம் நில்லுபா, உனக்கென்ன விஜயகாந்த் மாதிரி பொசுக்கு பொசுக்கு கோவம் வருது. இவ்வளோ சின்ன வயசுல இப்படிபட்ட கொள்கைய வச்சுகிட்டு யாருக்கும் பயப்படாம டான் டான் னு பதில் சொல்றியே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குபா'
'உலகத்துல உன்னை விட திருட்டுபய யாரும் இல்லை, அதனால நீ யாருக்கும் பயபடாதே. அதே மாதிரி உன்னைவிட .......... யாரும் இல்லை, அதனால யாரை தாழ்வா நினைக்காதே. இதான் சார் எங்க அப்பா எனக்கு சொல்லி கொடுத்த பாடம். இதான் சார் எனக்கு வேதவாக்கு'
'பாருப்பா உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. யாரு உங்க அப்பா'
'தென்கோடி இலங்கையில ஈழதமிழர்கள் துன்புறுத்தபட்ட போது வடகோடி சென்னையில முதல் ஆளா ஏசி போட்டு படுத்துகிட்டு ஒரு மணிநேரம் உண்ணா விரதம் இருந்தாரே ஒரு மகான் அவர பத்தி கேள்வி பட்டுருக்கீங்களா'
'இல்லையே'
'அப்ப அவர் தான் எங்க அப்பா, தமிழ் இன மக்கள் காவலன் கலைஞர் கருணாநிதி'
'அந்த மகானை தெரிஞ்சுகாதது என்னோடய துரதிர்ஷ்டம்பா'
'அது என் அதிர்ஷ்டம் சார்'
'ஏன்'
'அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா எனக்கு ஓட்டு போட மாட்டீங்க சார்'
'என்னது'
'அதாவது அவர பத்தி உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா என் வாயால அவர பத்தி சொல்ற பாக்கியம் கிடைச்சுருக்காது சார்'
'உன்னை மாதிரி வீட்டுக்கு ஒரு விவேகாந்தர் இருந்தா நாடே சுபிக்ஷம் ஆயிடும் பா. எங்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. யாரு அதிகமா பணம் தருவாங்களோ, அவங்களுக்கு தான் ஓட்டு போடுவோம். ஒருவேளை நீ ஜெயிச்சா நீயாவது ஊழல் பண்ணாம ஆட்சி நடத்துபா..'

SBIல்_குறைந்த_பட்ச_இருப்புத்தொகை_இல்லா_கணக்கு....

EPF பென்ஷன் தாரர் ஆன எனது நண்பர் ஒருவரின் கணக்கில் இருந்து சமீப காலமாக குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லை என மாதாமாதம் 80 ரூபாய் வரை வங்கியில் இருந்து எடுத்து வந்தனர். மாதம் 825 ரூபாய் வரும் அவருக்கு 3000 ரூபாய் கணக்கில் வைப்பது என்பது இயலாத காரியம் .எனவே வங்கி கணக்கை முடித்து கொள்ளலாம் என மேலாளர் ஐ அணுகினோம் அவர் இதற்காக எல்லாம் கணக்கை முடித்து கொள்ள வேண்டியது இல்லை உங்கள் கணக்கை அடிப்படை கணக்காக மாற்றி கொள்ளுங்கள் என ஐந்து நிமிடத்தில் மாற்றி தந்து விட்டார். குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்க இயலாத EPF பென்ஷன்தாரர்கள், பள்ளி கல்லூரி குழந்தைகள் , காஸ் மானியம் பெற கணக்கு தொடங்கியவர்கள் ,100 நாள் வேலைக்காக கணக்கு தொடங்கியவர்கள் உட்பட அனைவரும் தங்கள் வங்கி கணக்கை அடிப்படை கனக்காக மாற்றி கொள்ளலாம் எனவும் கூடுதல் விவரம் தந்தார்.
இதற்கான அறிவிப்பு ஏனோ வெளிப்படையாக இல்லை.
எவர் வேண்டுமானாலும் அடிப்படை கனக்க்காக மாற்றி கொள்ளலாம் கணக்கை முடித்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெளிவு படுத்தினார். ஆனால் மோடி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்க முடிசெய்தே குறைந்பட்ச இருப்பு தொகை என கொண்டு வந்துள்ளார் என வானத்துக்கும் பூமிக்கும் மேல் தாவிகளைப் போல் குதிப்பவர்கள் இது போன்ற உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்பவர்கள் இத்த தகவல்களை வெளியே சொல்ல மாட்டார்கள்.
இதை முடிந்த வரை அனைவருக்கும் தெரிவியுங்கள்.
தேவை இல்லாத பண இழப்பினை தவிர்க்க உதவுங்கள்.

மாமியார்__மருமகள_்_சண்டைக்கு_ஜோதிடம்_காரணமா...???

நல்ல மாமனார்-மாமியார் அமைவது, மாமனார்-மாமியாரே இல்லாத வாழ்க்கைத்துணை அமைவது, இவர்கள் இருந்தும் உதவாமல் இருப்பது, குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்குமே அவரவர்களின் சொந்த ஜாதகம்தான் காரணமாகிறது.
ஒரு ஆணுக்கு திருமணம் செய்யும் போது விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களை காரணமின்றி சில குடும்பங்கள் தவிர்க்கின்றன. ஏனென்றால் விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது என்றும், ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்றும் கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை சோகமாக வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சு+ழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து. அந்த வீட்டில் ராகு- கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு. அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பது தான் நல்லது. வரப்போகும் மருமகளின் நட்சத்திரத்தை பார்க்க தேவையில்லை.
ஒருவர் பிறக்கும் போதே அவர்களுடைய பு+ர்வ ஜன்ம பாவ, புண்ணிய அடிப்படையில் நிகழ்கால பலன்கள், ஆயுள் தீர்மானிக்கப்படும். வீட்டுக்கு வரும் மருமகள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் ஆயுளை நிர்ணயிக்க முடியாது.
அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம். அந்த வீட்டில் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும். மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகம் ஆகும்.
சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திலிருந்து 3ம் இடம் மாமனாரைக் குறிப்பதாகவும், 10ம் இடம் மாமியாரை குறிப்பதாகவும், 9ம் இடம் வாழ்க்கைத்துணையின் இளைய சகோதர, சகோதரியை வெளிப்படுத்துவதாகவும், 5ம் இடம் வாழ்க்கைத்துணையின் மூத்த சகோதர, சகோதரியை நிர்ணயிப்பதாகவும் அமைகிறது.
உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்த ஒரு ஜோதிட நு}லிலும் குறிப்பிடப்படவில்லை. இதேபோல் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் மிகத் தவறானது. இதுபற்றி பண்டைய கால நு}ல்களில் கூறப்படவில்லை. இது விசாகம், மூலம், கேட்டை ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
எனவே, நட்சத்திரத்தை மட்டும் பார்த்து ஒரு பெண்ணின் ஜாதகத்தை மணமகன் வீட்டார் வேண்டாம் என்றும் கூறுவது தவறு. மாறாக, சம்பந்தப்பட்ட பெண் அல்லது ஆணின் ஜாதகத்தில் நட்சத்திரத்தை மட்டும் காரணம் காட்டி ஒரு வரனைத் தட்டிக் கழிக்காமல், மாமனார், மாமியார், இதர உறவுகளைக் குறிக்கும் கிரகங்களின் நிலை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்த பின்னர் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.

மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி பதிலளிக்க வேண்டும்

#ஜெயலலிதாவின்_மர்ம_மரணம்.??? #அப்பல்லோவின்_பதில்என்ன.???
****************************************
★ ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளதாகவும், சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி பதிலளிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
★ ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார். அவன் பாத்தான் இவன் பாத்தான் என்று சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதை நாங்கள் சொன்னோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.
★ இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். தினகரன் உள்ளிட்ட தனிநபர்களும் கூட சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரி வருகின்றனர்
★ கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
★ அவருக்கு, அங்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில் நுரையீரலில் நோய்த்தொற்று அதிகமாகி மூச்சுவிட சிரமப்படுவதாக தகவல் வெளியானது.
★ காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அதை அறிக்கையாக வெளியிட்டது.
★ அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையளிக்கவே, காய்ச்சல் குணமாகி, உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
★ தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 1ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி உடன் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.
★ 03-10-2016 வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
★ தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
★ ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது அப்பல்லோ மருத்துவமனை.
★ நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுகிறது என்றும் அதோடு ஊட்டச்சத்தும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அக்டோபர் 8ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது. நல்ல நினவோடு இருப்பவர்களுக்கு ..(காலை நீட்டுங்கள் மடக்குங்கள்..)என கொடுக்கப்படுவது பிசியோதெரபி.
ஆனால் ஜெயலலிதா அம்மையா ருக்கு கொடுக்கப்பட்டது சாதாரண பிசியோதெரபி அல்ல.. சிங்கப்பூரிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர்களால் கொடுக்க ப்பட்ட தாக சொல்லப்பட்ட அது பாசிவ் பிசியோதெரபி. இது நினவிழந்து போனவர்களுக்கு கொடுக்கப்படும் பிசியோதெரபி. அப்படியானால் இவர்கள் பிசியோதெரபி கொடுக்கப் பட்டதாக சொல்லப்பட்ட நாளில் அம்மா அவர்கள் சுய நினவிழந்து கிடந்துள்ளார்.
★ முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைந்து விட்டார் என்றும் அவர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறினார்.
★ மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தாலும், நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்ததும் அவர் குணமடைய காரணம் என்றார் பிரதாப் சி ரெட்டி
★ ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக ஒருமாதம் கழித்து டிசம்பர் 4ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. உயிர் காக்கும் எக்மோ சிசிக்சை அளிக்கப்பட்டது.
★ டிசம்பர் 5ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் போராடி வருகிறோம் என்று பதிவிட்டு அதை உடனே நீக்கினார் சங்கீதா ரெட்டி.
★ மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகி விட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தொண்டர்கள் கதறி அழுதனர். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஆனால், உடனடியாக இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாகவும், அறிக்கை ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக நள்ளிரவில் அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம்.
★ தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் மீளா துயரில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்தது போல பேசிய அமைச்சர்கள், நிர்வாகிகள், இன்றைக்கு ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டியது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ளத்தயார் என்று கூறியிருந்தார் பிரதாப் சி ரெட்டி.
அம்மா மரண மர்மம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட் டுள்ளது.
ஆனால் அம்மாவின் மீது பற்றுகொண்டுள்ள அதிமுகவின் தொண்டர்களும், தமிழக மக்களும் CBI விசாரணை மட்டுமே வேண்டும் என கோருகிறார்கள்.
தமிழக அரசின் முதல்வரும்..
துணை முதல்வரும் CBI விசாரணைக்கு நடுவண் அரசிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும்.

உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது…!

#கதறி_அழும்_தினகரன்...
#கையை_விரித்த_தேர்தல்_ஆணையம்
#கம்பி_நீட்டிய_MLAக்கள்.
#கனவுகள்_எல்லாம்_தகர்ந்தது ...!!!
************************************
அ.தி.மு.கவுக்குள் எழுந்த கோஷ்டி மோதலை அடுத்து தினகரன் கும்பல் கட்சியையும்,ஆட்சியையும் கபளீகரம் செய்யும் முயற்சியில் இறங்க இதை முறியடிக்க பன்னீர்செல்வம் எடுத்த சரியான முயற்சியால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடுத்து வைக்கப்பட்டது.
பன்னீர் மற்றும் சசிகலா அணியினர் தனித் தனியே இரட்டை இலையை மீட்க ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பன்னீர்ச்செல்வம் அணியோடு சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்தார்.
தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்த பிறகு, இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையை மீட்க நடவடிக்கைகள் எடுத்த நிலையில். தேர்தல் ஆணையம் ஆவணங்களை தாக்கல் செய்து முடிக்க நாளை செப்டம்பர் 29-ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்திருந்தது.
வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி இரட்டை இலை தொடர்பான விசாரணை நடக்கும் என்றும் அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், தனக்கு இனி இரட்டை இலை கிடைக்க வாய்பில்லை என்பதை புரிந்து கொண்ட தினகரன்... தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்கிற உணர்வோடு தனக்கு கிடைக்காத இரட்டை இலை சின்னம் தனது எதிரிகளான ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் இருக்கும் அதிமுக வுக்கும் கிடைக்க கூடாது என்கிற உணர்வோடு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார் தினகரன்.
ஆனால் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால் தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தினகரன் அணியில் இருந்து புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் பன்னீர் - பழனிசாமி அணிக்கு தாவியுள்ளனர்.இது தினகரனுக்கு பெரும் பின்னடைவாகவும், பேர் இடியாக வும் அமைந்துள்ளது. இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள மற்றவர்களும் தாக்குப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கூர்க்கில் முகாமிட்டிருந்த தினகரன் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த இலை மீட்பு போரில் தினகரன் வெல்வது கடிணம் என்கிற உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது…!

மல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்.


மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம். இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். Advertisement
வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது.
மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

Wednesday, September 27, 2017

மன முதிர்ச்சி என்றால் என்ன?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது
2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது
3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்
4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
*இந்த 12 ல் அட்லீஸ்ட் ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

லட்சக்கணக்கான குழந்தைகளை கொல்ல துணிந்த மோடி அரசு:

இந்தியாவில் நுரையீரலை தாக்கும் நிமோனியா தொற்றுநோயால் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் ’தடுப்பூசிகளை’ இந்தியாவிலேயே தயாரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இந்த இறப்பு விகிதத்தை குறைக்கவேண்டுமென்பதற்காக யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த நுரையீரல் நோய் தடுப்பூசியை (pneumococcal conjugate vaccine) (PCV) கொண்டு வந்தனர்.
இந்த தடுப்பூசி 13வகையான நோய் பரப்பும் பாக்டீரியங்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இதன்படி இந்த தடுப்பூசியின் விலை 500ரூபாய்க்கு இந்திய சந்தையில் கிடைக்கப்பெற்றது. இது வருங்காலங்களில் இன்னும் விலை குறையுமென்றும் அதனால் இந்த இறப்பு விகிதத்தை குறைக்கலாமென்றும் இந்திய நோய் தடுப்பு துறை
கடந்த மே மாதம் அறிவித்தது.
இதற்கிடையில் அமெரிக்காவானது உலக பொதுவர்த்தக கழகத்தின்(WTO) மூலம் முன்றாம் உலக நாடுகளின் மீது காப்புரிமை சம்பந்தமான சட்டத்தை திணிக்க முயன்றது. அப்போது சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கடந்த ஜீன் மாதம் 27ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடனான சந்திப்பிற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.
மே மாதம் அரசு நோய் தடுப்பு துறை இந்த தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்குமென்று சொன்ன மோடி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர். மூன்று மாதத்திற்கு பின்னர் அதாவது ஆகஸ்ட் 11’2017 அன்று இந்த ’தடுப்பூசியின்’ காப்புரிமையை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நாதா அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் (Pfizer) நிறுவனத்திற்கு 2026 வரைக்கும் கொடுத்து விட்டொமென்று அறிவித்து விட்டார்.
Image may contain: one or more people
இந்த பைசர் நிறுவனம் உலகமெங்கும் 2009-2017 காலகட்டங்களில் இந்த தடுப்பூசியால் கொள்ளை லாபத்திற்கு விற்று 35பில்லியன் டாலர் பணம் சம்பாதித்திருக்கீறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகளின் இறப்பை தடுக்கக்கூடிய காப்புரிமையை எந்தவித தயக்கமுமில்லாமல் இந்த மோடி அரசு கொடித்திருக்கிறது.
இதனால் 500ரூபாய்க்கு கிடைத்தவந்த அந்த தடுப்பூசியின் விலை தற்போது 21,000ருபாயாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏழை மக்களால் தடுப்பூசி வாங்க முடியுமா? அப்படியென்றால் இந்த இரண்டு இலட்சம் என்ற எண்ணிக்கை இனிவரும் காலங்களில் இது மேலும் பல மடங்கு உயரும். இந்தியாவில் குழந்தைகளின் எதிர்காலத்தை இந்த மோடி அரசு அமெரிக்க நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டது.
குறிப்புகள்:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...