Thursday, September 28, 2017

SBIல்_குறைந்த_பட்ச_இருப்புத்தொகை_இல்லா_கணக்கு....

EPF பென்ஷன் தாரர் ஆன எனது நண்பர் ஒருவரின் கணக்கில் இருந்து சமீப காலமாக குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லை என மாதாமாதம் 80 ரூபாய் வரை வங்கியில் இருந்து எடுத்து வந்தனர். மாதம் 825 ரூபாய் வரும் அவருக்கு 3000 ரூபாய் கணக்கில் வைப்பது என்பது இயலாத காரியம் .எனவே வங்கி கணக்கை முடித்து கொள்ளலாம் என மேலாளர் ஐ அணுகினோம் அவர் இதற்காக எல்லாம் கணக்கை முடித்து கொள்ள வேண்டியது இல்லை உங்கள் கணக்கை அடிப்படை கணக்காக மாற்றி கொள்ளுங்கள் என ஐந்து நிமிடத்தில் மாற்றி தந்து விட்டார். குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்க இயலாத EPF பென்ஷன்தாரர்கள், பள்ளி கல்லூரி குழந்தைகள் , காஸ் மானியம் பெற கணக்கு தொடங்கியவர்கள் ,100 நாள் வேலைக்காக கணக்கு தொடங்கியவர்கள் உட்பட அனைவரும் தங்கள் வங்கி கணக்கை அடிப்படை கனக்காக மாற்றி கொள்ளலாம் எனவும் கூடுதல் விவரம் தந்தார்.
இதற்கான அறிவிப்பு ஏனோ வெளிப்படையாக இல்லை.
எவர் வேண்டுமானாலும் அடிப்படை கனக்க்காக மாற்றி கொள்ளலாம் கணக்கை முடித்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் தெளிவு படுத்தினார். ஆனால் மோடி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்க முடிசெய்தே குறைந்பட்ச இருப்பு தொகை என கொண்டு வந்துள்ளார் என வானத்துக்கும் பூமிக்கும் மேல் தாவிகளைப் போல் குதிப்பவர்கள் இது போன்ற உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்பவர்கள் இத்த தகவல்களை வெளியே சொல்ல மாட்டார்கள்.
இதை முடிந்த வரை அனைவருக்கும் தெரிவியுங்கள்.
தேவை இல்லாத பண இழப்பினை தவிர்க்க உதவுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...