Saturday, September 30, 2017

தொழில்/வேலை...

ஜாதக கட்டத்தில் பத்தாம் இடம் தொழில் பற்றியது. ஒருவரது ஜீவனஸ்தானத்தை சொல்வது.
இந்த பத்தாம் இடத்தை பார்க்கும் முன் இதை பிரித்து தஸாம்ஸம் என்று ஒரு சக்கரம் போடவேண்டும்.
ராசி கட்டம் போலவே தசாம்ஸ கட்டம் போட்டு கொள்ள வேண்டும். அதில் முயற்சியை குறிப்பது 3ம் பாவம் அதோடு 6,9,12 பாவங்களையும் பார்க்க வேண்டும் அதில் அமரும் கிரஹங்களும் தசாம்ஸ கட்டத்தில் பத்தாமிடத்தில் அமரும் கிரஹங்களும் அதிக நன்மை தரக்கூடியது.
உதாரணமாக ரிஷப லக்ன ஜாதகம் துலாம் ராசி லக்னத்துக்கு பத்தாம் அதிபதி சனி 6ல் சரராசிக்காரனான சந்திரனுடன் இவர் தஸாம்ஸ கட்டத்தில் 5ல் மேலும் லக்னத்துக்கு 12ம் இடம் என்பது அயனம் அதாவது நகருதலை குறிக்கும் இதன் அதிபதியான செவ்வாய் வாகனகாரகனான சுக்ரனுடன் 4ல் சுகஸ்தானத்தில் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழில் செய்ய இயலாது மேலும் தசாம்ஸ கட்டத்தில் முயற்சியை குறிக்கும் 3ம் இடத்தில் ஆன்மீக காரகனான குருவும் கேதுவும் இருக்கிறது
அதனால் ஜாதகர் ஆன்மீக சுற்றுலா வாகன ஏற்பாட்டாளராக தொழில் செய்வார். மேலும் பணவரவை குறிக்கும் சுக்ரன் தசாம்ஸ கட்டத்தில் துலாத்தில் ஆட்சியில் உள்ளது அதனால் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் மூலம் தொழில் நடத்தி சம்பாதிப்பார்.
இப்படி ஒவ்வொரு ஜாதகத்திலும் தஸாம்ஸ கட்டம் போட்டு பார்த்து அதன் தசை புக்தி இவற்றை ஆராய்ந்து பலன் அறிய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...