Thursday, September 28, 2017

மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி பதிலளிக்க வேண்டும்

#ஜெயலலிதாவின்_மர்ம_மரணம்.??? #அப்பல்லோவின்_பதில்என்ன.???
****************************************
★ ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளதாகவும், சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி பதிலளிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
★ ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார். அவன் பாத்தான் இவன் பாத்தான் என்று சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதை நாங்கள் சொன்னோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி பரபரப்பு தீயை பற்ற வைத்தார்.
★ இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். தினகரன் உள்ளிட்ட தனிநபர்களும் கூட சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரி வருகின்றனர்
★ கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
★ அவருக்கு, அங்கு நடந்த பரிசோதனைகளின் முடிவில் நுரையீரலில் நோய்த்தொற்று அதிகமாகி மூச்சுவிட சிரமப்படுவதாக தகவல் வெளியானது.
★ காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், அதை அறிக்கையாக வெளியிட்டது.
★ அனுமதிக்கப்பட்ட நேரத்திலிருந்து சிறப்பு மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சையளிக்கவே, காய்ச்சல் குணமாகி, உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
★ தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 1ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி உடன் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.
★ 03-10-2016 வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
★ தொடர் சிகிச்சையால் முதல்வர் குணமடைந்து வருகிறார். கிருமி தொற்றுக்கான சிகிச்சையும், உரிய மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
★ ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றி தொடர் அறிக்கைகளை வெளியிட்டு வந்தது அப்பல்லோ மருத்துவமனை.
★ நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை நடைபெறுகிறது என்றும் அதோடு ஊட்டச்சத்தும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அக்டோபர் 8ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது. நல்ல நினவோடு இருப்பவர்களுக்கு ..(காலை நீட்டுங்கள் மடக்குங்கள்..)என கொடுக்கப்படுவது பிசியோதெரபி.
ஆனால் ஜெயலலிதா அம்மையா ருக்கு கொடுக்கப்பட்டது சாதாரண பிசியோதெரபி அல்ல.. சிங்கப்பூரிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர்களால் கொடுக்க ப்பட்ட தாக சொல்லப்பட்ட அது பாசிவ் பிசியோதெரபி. இது நினவிழந்து போனவர்களுக்கு கொடுக்கப்படும் பிசியோதெரபி. அப்படியானால் இவர்கள் பிசியோதெரபி கொடுக்கப் பட்டதாக சொல்லப்பட்ட நாளில் அம்மா அவர்கள் சுய நினவிழந்து கிடந்துள்ளார்.
★ முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைந்து விட்டார் என்றும் அவர், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிறார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறினார்.
★ மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தாலும், நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்ததும் அவர் குணமடைய காரணம் என்றார் பிரதாப் சி ரெட்டி
★ ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக ஒருமாதம் கழித்து டிசம்பர் 4ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. உயிர் காக்கும் எக்மோ சிசிக்சை அளிக்கப்பட்டது.
★ டிசம்பர் 5ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் போராடி வருகிறோம் என்று பதிவிட்டு அதை உடனே நீக்கினார் சங்கீதா ரெட்டி.
★ மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகி விட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக தொண்டர்கள் கதறி அழுதனர். அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஆனால், உடனடியாக இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாகவும், அறிக்கை ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக நள்ளிரவில் அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம்.
★ தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் மீளா துயரில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை பார்த்து விட்டு வந்தது போல பேசிய அமைச்சர்கள், நிர்வாகிகள், இன்றைக்கு ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விளக்க வேண்டியது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ளத்தயார் என்று கூறியிருந்தார் பிரதாப் சி ரெட்டி.
அம்மா மரண மர்மம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட் டுள்ளது.
ஆனால் அம்மாவின் மீது பற்றுகொண்டுள்ள அதிமுகவின் தொண்டர்களும், தமிழக மக்களும் CBI விசாரணை மட்டுமே வேண்டும் என கோருகிறார்கள்.
தமிழக அரசின் முதல்வரும்..
துணை முதல்வரும் CBI விசாரணைக்கு நடுவண் அரசிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...