Friday, September 29, 2017

படித்ததில் பிடித்தது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான
பெண்கள் திரண்டிருந்தனர்.
அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு
தரமான பால் இலவசமாக வழங்கபடும்,
இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.
பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் என
இன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது,
இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?'
''எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை பக்கத்துல
ஒரு சின்ன கிராமம்.
இப்ப பொன்மனியில குடும்பத்தோட வசிக்கிறேன். எனது தம்பியின் மனைவி சில ஆண்டுகளுக்கு
முன்பு தன் கைக்குழந்தையுடன் சென்னை
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு சென்றிருக்கிறார்.
அப்போது குழந்தை பசியால் அழுதிருக்கிறது.
அந்த நள்ளிரவில் பேருந்து நிலையம் முழுவதும் அலைந்து ஒரு டீக்கடையில் பால் வாங்கி
கொடுத்திருக்கிறார். அதை குடித்த கொஞ்ச
நேரத்தில் அந்த குழந்தைக்கு வாந்தி, மயக்கம்
ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் எனக்கு
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இங்கும் சில டீக்கடைகளில் பாலில்
பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும்,
பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க.
அது பெரியவங்களுக்கே ஒத்துக்காது.
குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.
எனவே,
தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு
கலப்படம் இல்லாத தரமான பாலை
இலவசமாக வழங்கி வருகிறேன்.
இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்து
வருகிறார்'' என்றவர்,
''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்ட
மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட
மேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்க
மகளிரணி என பலரும் பாராட்டினாங்க.
இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும்
என சொல்றாங்க.
நான் இதை விளம்பரத்திற்காக செய்யல,
இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது.
நாம போனாலும், நம்ம பேரு நிக்கனும்” என்கிறார்.
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...