Friday, September 22, 2017

கரூரில் 2வது நாளாக, 'ரெய்டு' 'மாஜி'யின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் கரூர் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நேற்று, இரண்டாவது நாளாக, சோதனை நடத்தினர்.
 ரெய்டு,Railways, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, former Minister Senthil Balaji,வருமான வரித்துறை, Income Tax Department,  தினகரன், Dinakaran, போக்குவரத்துத் துறை, Transport Department,  மத்திய குற்றப் பிரிவு போலீஸ்,Central Crime Branch Police,  நவ்ரங் டையிங்,  Navrong Dying, சுப்பிரமணி,Subramani,ஆசி டெக்ஸ்டைல்ஸ், Aisi Textiles, ஆர்த்தி ஏ டிரேடு, Aryti A Trade,  தியாகராஜன்,Thiagarajan,  கரூர் , Karur,

கரூரைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி, தற்போது, தினகரன் அணியில் உள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், இவரும் ஒருவர்.நேற்று முன்தினம் காலை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 

நேற்று இரண்டாவது நாளாக, 'நவ்ரங் டையிங்' உரிமையாளர் சுப்பிரமணி அலுவலகம், 'ஆசி டெக்ஸ்டைல்ஸ்' பங்குதாரர் தியாகராஜன் அலுவலகம், 'ஆர்த்தி ஏ டிரேடு' நிறுவனம் உள்ளிட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். 

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, அரசு மற்றும் நகராட்சிபணிகளை டெண்டர் எடுத்து செய்த சங்கர் ஆனந்த்.மருத்துவக் கல்லுாரிக்கு இடத்தை தானமாக வழங்கிய, நவ்ரங் டையிங் உரிமையாளர் சுப்பிரமணி, செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டி யிட்ட போது, கணக்குகளை கவனித்ததாக கூறப் படும் தியாகராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த, வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்துத் துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உட்பட, நான்கு பேர் மீது, மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில்,முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அவரது 
ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரூ.1.2 கோடி ரொக்கம் பறிமுதல்:

கரூரில், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும், 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில், நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்தது. இதுவரை, கணக்கில் வராத, 1.2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. 
'மூன்றாவது நாளாக இன்றும் சோதனை தொடரும்' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...