ஒரிஜனில் லைசன்ஸ் எடுத்து வர மறந்தவர்களுக்கு சிறை தண்டனை தேவையற்றது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மீறிபவர்களுக்கு அபராதத்துடன் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அரசின் உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாததையும், எடுத்து வர மறந்தவர்களையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, எடுத்து வர மறந்தவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை தேவையற்றது என்றும், அவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment