Thursday, September 28, 2017

மாமியார்__மருமகள_்_சண்டைக்கு_ஜோதிடம்_காரணமா...???

நல்ல மாமனார்-மாமியார் அமைவது, மாமனார்-மாமியாரே இல்லாத வாழ்க்கைத்துணை அமைவது, இவர்கள் இருந்தும் உதவாமல் இருப்பது, குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படுவது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்குமே அவரவர்களின் சொந்த ஜாதகம்தான் காரணமாகிறது.
ஒரு ஆணுக்கு திருமணம் செய்யும் போது விசாகம், கேட்டை, மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களை காரணமின்றி சில குடும்பங்கள் தவிர்க்கின்றன. ஏனென்றால் விசாகம் கொழுந்தனாருக்கு ஆகாது என்றும், ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்றும் கேட்டை, மூலம் போன்றவை மாமனாருக்கு ஆகாது என சில ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறுகின்றனர்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை சோகமாக வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சு+ழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து. அந்த வீட்டில் ராகு- கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு. அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பது தான் நல்லது. வரப்போகும் மருமகளின் நட்சத்திரத்தை பார்க்க தேவையில்லை.
ஒருவர் பிறக்கும் போதே அவர்களுடைய பு+ர்வ ஜன்ம பாவ, புண்ணிய அடிப்படையில் நிகழ்கால பலன்கள், ஆயுள் தீர்மானிக்கப்படும். வீட்டுக்கு வரும் மருமகள் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் ஆயுளை நிர்ணயிக்க முடியாது.
அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம். அந்த வீட்டில் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும். மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகம் ஆகும்.
சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திலிருந்து 3ம் இடம் மாமனாரைக் குறிப்பதாகவும், 10ம் இடம் மாமியாரை குறிப்பதாகவும், 9ம் இடம் வாழ்க்கைத்துணையின் இளைய சகோதர, சகோதரியை வெளிப்படுத்துவதாகவும், 5ம் இடம் வாழ்க்கைத்துணையின் மூத்த சகோதர, சகோதரியை நிர்ணயிப்பதாகவும் அமைகிறது.
உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பெண்ணால், புகுந்த வீட்டினருக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ எந்த ஒரு ஜோதிட நு}லிலும் குறிப்பிடப்படவில்லை. இதேபோல் ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணை மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மாமியாருக்கு ஆகாது என்று கூறுவதும் மிகத் தவறானது. இதுபற்றி பண்டைய கால நு}ல்களில் கூறப்படவில்லை. இது விசாகம், மூலம், கேட்டை ஆகியவற்றுக்கும் பொருந்தும்.
எனவே, நட்சத்திரத்தை மட்டும் பார்த்து ஒரு பெண்ணின் ஜாதகத்தை மணமகன் வீட்டார் வேண்டாம் என்றும் கூறுவது தவறு. மாறாக, சம்பந்தப்பட்ட பெண் அல்லது ஆணின் ஜாதகத்தில் நட்சத்திரத்தை மட்டும் காரணம் காட்டி ஒரு வரனைத் தட்டிக் கழிக்காமல், மாமனார், மாமியார், இதர உறவுகளைக் குறிக்கும் கிரகங்களின் நிலை எப்படி இருக்கிறது என ஜோதிடப்படி ஆராய்ந்த பின்னர் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் சிறப்பாக வாழ்வார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...