Tuesday, September 19, 2017

மாஸ் ராஜினாமாவால் பயனில்லை: திமுக முடிவு.

டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக நேற்று உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதற்கு எதிர்க் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை (இன்று) மாலை கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
உடனே சமூக வலைதளங்களிலும், வேறு சில கட்சியினரும், அரசியல் பார்வையாளர்களும் திமுகவினர் மொத்தமாக ராஜினாமா செய்ய திட்டமிடுகிறார்கள் எனவும், இதேபோல் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவு எடுப்பார்கள் என்றும் தகவல் பரவியது.
இந்த நிலையில் இன்று காலை மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்ன விவாதிக்கலாம், எத்தகைய தீர்மானம் கொண்டுவரலாம் என்று ஆலோசனை நடந்தது. இதில் ஒட்டுமொத்த ராஜினாமா செய்ய வேண்டாம். இந்த முடிவால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...