Thursday, September 28, 2017

ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து ....



நாட்டில் ஏழை மக்களும், விவசாயிகளும் ,நடுத்தர மக்களும் சாப்பாட்டுக்கு வழியின்றி வரி கட்டிக்கொண்டு நிற்கையில்.... மானம்கெட்ட மீடியாக்கள் மீண்டும் திசை திருப்புகின்றன அம்மையார் மரணத்தை பற்றி .....
சிபிஐ விசாரணை வைத்து, முடிக்க வேண்டிய விசயத்தை , மீண்டும் மீண்டும் மக்கள் பிரச்சனையின் கவனத்தை திசை திருப்ப உபயோகிக்கின்றன மீடியாக்கள் .
சூடு ,சொரணையற்ற அரசியல்வாதிகள்... அவர்களோடு போட்டி போடும் மீடியாக்கள்...
ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து ....
இவர்களின் தெருக்கூத்தைப் பார்த்து, பாரம்பரிய தெருக்கூத்தே மறைந்துவிட்டது....
எரிபொருள் ,அத்தியாவசியப் பொருள் போன்ற பொருட்களில் வரிகளைச் சுமத்தி, நாட்டு மக்கள் மீது வரியை திணித்துக் கொண்டிருக்கிறது...
மக்களை மதிக்காத மக்களாட்சி மீது, மாபெரும் புரட்சி வெடிக்கப் போகிறது...
அரசியல்வாதிகள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களெல்லாம் சூறையாடப்படும்.
நாட்டின் முக்கிய தூண்களில் ஊழலும், அதிகாரமும் ஆட்டிப்படைக்கிறது .
போதும் நிறுத்துங்கள்.....
உங்களால் அமைதிப்பூங்கா அழிவுப் பூங்காவாக மாற வேண்டாம்.....
இளைஞர்களை கல்வியிலும், வேலையிலும் கவனம் செலுத்த வழிகாட்டுங்கள் ...
உங்கள் அருவருப்பான செயல்களால், அவர்களை ரத்தம் தோய்ந்த கத்திகளை தூக்க வைத்துவிடாதீர்கள்...
இன்றைய ஜனநாயக படுகொலை...
நாளை வேறு பாதையை தேர்ந்தெடுக்க வைக்கும் ......
தயவு செய்து திருந்துங்கள்...உங்களை திருத்திக்கொள்ளுங்கள் நாட்டின் முக்கிய தூண்களே......
எங்கும் அமைதியை நாடும் எச்சரிக்கை உணர்வுடன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...