Tuesday, September 19, 2017

திமுகவின் பித்தலாட்டம்....!

எதிர் கட்சிகள் இல்லாமல் இருந்தால் எப்படி சார் ஆட்சி கவிழும். ஒருவேளை பொது தேர்தலில் ஒரு கட்சி 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்றே வைத்து கொள்வோம், அப்போது எதிர் கட்சி இல்லாத சூழ்நிலை வரும், அப்படி என்றால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா. மேலும் எதிர் கட்சிகள் ராஜினாமா செய்வதால் ஆட்சி கவிழும் என்றால், இந்நேரம் எதிர் கட்சிகள் இந்தியா முழுவதும் உள்ள அணைத்து மாநிலத்திலும் ஏன் சும்மா இருக்கிறார்கள், ராஜினாமா செய்வதால் ஆட்சியை கவிழ்த்துவிடலாமே. இது என்ன சார் சட்டம். சரி திமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்வதால் எடப்பாடி ஆட்சி கவிழும் என்றே வைத்து கொள்வோம், அப்புறம் சுடலை மறு தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார், எடப்பாடி 60 தொகுதிகளிலும், பா.ஜ., 40, காங்கிரஸ் 10, மற்றவை 4 என்றே வைத்து கொள்வோம், எடப்பாடி அணைத்து எதிர்கட்சிகளையும் வளைத்து ராஜினாமா செய்தால் சுடலை ஆட்சி கவிழ்ந்துவிடுமா. இப்போது அது போன்று நடந்தால் அது முன்னுதாரணமாக அமைந்து நாளை இதே சுடலைக்கும் அந்த நிலைமை வராது என்று என்ன நிச்சயம். செத்து செத்து விளையாடும் விளையாட்டா இது. அப்புறம் மாதம் ஒரு தேர்தல் தான் வைக்க வேண்டும். இப்போது கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள், தேர்தல் நடத்தும் செலவாக 1500 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு கேட்டால் நன்றாக இருக்கும். இந்த 1500 கோடி யார் பணம், நம்முடைய வரி பணம்தான். சுடலையா கொடுப்பார். 2ஜி 1.76 லட்சம் கோடிகளில் ஒரு பைசா கூட கை வைக்கமாட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...