Tuesday, September 26, 2017

படித்ததில் பிடித்தது.

*அண்ணாதுரை தமிழக முதல்வராக இருந்த போது அமெரிக்கா சென்று இருந்தார். அது சமயம் அமெரிக்க அதிபரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துக் காத்திருந்தார்.*
*அமெரிக்க அதிபர் "இந்தியாவின் குட்டி மாநில முதல்வர்களை எல்லாம் நான் பார்க்க மாட்டேன்" என்று அனுமதி மறுத்து விட்டார். அண்ணாதுரை அவரைப் பார்க்காமல் நாடு திரும்பினார்.*
*அமெரிக்க அதிபர் இந்தியா வந்தார். மூன்று பிரதமர்களை உருவாக்கிய 'கிங் மேக்கர்' காமராஜரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.*
*பத்திரிகையாளர்கள் காமராஜரிடம் "அமெரிக்க அதிபர் உங்களைக் காண விரும்புகிறார்" என்று கூறினர்.*
*அதற்கு காமராஜர் "நான் அவரை சந்திக்கப் போவதில்லை. அன்று அண்ணாதுரை அவரைச் சந்திக்க விரும்பியபோது அவர் சந்திக்க மறுத்து விட்டார். தமிழனைச் சந்திக்க மறுத்த அமெரிக்க அதிபரை தமிழனாகிய நானும் சந்திக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.*
*எதிர் எதிர் கட்சியில் இருந்தாலும் தமிழன் என்ற உணர்வோடு ஆளப்பட்ட தமிழகம் இன்று கைதிகளாலும் கயவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது தான் இன்றைய உச்ச கட்ட வேதனை...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...