Friday, September 29, 2017

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே உள்ள செளந்தர்யபுரம் என்ற கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இங்கு சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீபத்ம சக்கரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளும் அஷ்டலஷ்மிகளும் ஸ்ரீஅம்புஜவல்லி தாயாருடன் இணைந்துநவசக்தியாக அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஸ்ரீபத்ம சக்கரம் மகாலஷ்மி அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவே இச்சக்கரத்தை வணங்கினால், இச்சக்கரத்தில் எட்டு இதழ்களாக உள்ள அஷ்ட லஷ்மிகள் வீற்றிருப்பதால், ஷேம, தைர்ய, வீர்ய, விஜய, ஆயுள், ஆரோக்கியங்கள் உட்பட அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளுவாள் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் பெளர்ணமி தோறும் அஷ்டலஷ்மி மகாயக்ஞம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...