Sunday, December 17, 2017

அவர் சொல்வது சரி தான் லஞ்சம் ஊழல் செய்து செய்து...............

கருணாநிதி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி : ஆடம்பர மாளிகைகள், பங்களாக்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் பற்றி ஆதாரங்களுடன் பிரபல ஆங்கில நாளேடு தகவல்
மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறு பேசி வரும் கருணாநிதி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் எனக் குறிப்பிட்டு, அந்த ஊழல் சொத்துகளின் உண்மைப் பட்டியலை டெல்லியிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பணியாற்றி வரும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீது, தொடர்ந்து அவதூறு பேசி வரும் கருணாநிதி குடும்பத்தாரின் மலைக்க வைக்கும் சொத்துமதிப்பு குறித்த பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவைப் பார்த்து, ஊழலின் ஒட்டுமொத்த உருவமாம் கருணாநிதி ஓலமிட்டு வரும் நிலையில், கருணாநிதி குடும்பத்தாரின் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஊழல் சொத்துகளின் உண்மைப் பட்டியலை டெல்லியிலிருந்து வெளிவரும் "The other side" எனும் பிரபல ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸால் தொடங்கப்பட்ட இந்த ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியுள்ள ஊழல் சொத்துகளின் பட்டியல், கருணாநிதியின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்துள்ளது. கருணாநிதியின் குடும்பச் சொத்துகள் குறித்த பட்டியல் இதோ...
* 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய்
* முரசொலிமாறனின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய்
* 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீட்டின் மதிப்பு 4 கோடி ரூபாய்
* கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* கோபாலபுரம் அமிர்தத்தின் வீட்டின் மதிப்பு 5 கோடி ரூபாய்
* மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* சி.ஐ.டி. காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இடத்தில், 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு 12 கோடி ரூபாய்
* மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 45 கோடி ரூபாய்
* ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய்
* 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு 2 கோடி ரூபாய்
* நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய்
* சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு 100 கோடி ரூபாய்
* கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு 10 கோடி ரூபாய்
* போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம்.இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு 20 கோடி ரூபாய்
* மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு 5 கோடி ரூபாய்
* சன்.டி.வி.க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய்
* கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவீத பங்குகளின் மதிப்பு 50 கோடி ரூபாய்
* பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 4 கோடி ரூபாய்
* பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 80 கோடி ரூபாய்
* மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு 120 கோடி ரூபாய்
* பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு 108 கோடி ரூபாய்
* சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி ரூபாய்
* அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்
* புதுடெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி ரூபாய்
* ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதனை 13,384 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கலாநிதி மாறனே ஒப்புக்கொண்டுள்ளார்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு சொந்தமான 3.84 ஏக்கரின் மதிப்பு 1 கோடி ரூபாய்
* மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்
* மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் மு.க. அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* மதுரை வடக்கு தாலுக்கா கள்ளந்திரி கிராமத்தில், மு.க. அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய்
* மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்
* மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்
* மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய்
* மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* மதுரை சத்தியசாய் நகரில் 21 சென்ட் நிலப்பரப்பில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் மு.க. அழகிரியின் மனைவி காந்தி அழகிரிக்குச் சொந்தமான 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்
* மதுரை மாவட்டம் நாகமலைப் புதுக்கோட்டை உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்
* மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்
* மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்
* கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு 5 கோடி ரூபாய்
* மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு 50 லட்சம் ரூபாய்
* சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடி நிலத்தின் மதிப்பு 2.5 கோடி ரூபாய்
* சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு ரூ 3 கோடி ரூபாய்
* மதுரை சத்யசாய் நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய்
* சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு 1 கோடி ரூபாய்
* சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்
* மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய்
* சென்னை அண்ணா சாலையில் இருக்கும் கருணாநிதி மகள் கனிமொழிக்கு சொந்தமான வணிக வளாகம் கதவு இலக்க எண்: 271-ஏ மதிப்பு 5 கோடி ரூபாய்
* 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு 20 கோடி ரூபாய்
* கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 30 கோடி ரூபாய்
* ஊட்டியில், கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய்
* கலைஞர் டி.வி-யில் கருணாநிதி மனைவி தயாளுவுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு 90 கோடி ரூபாய்
மேலும், கருணாநிதி குடும்பத்திற்கு எக்ஸ்பிரஸ் எஸ்டேட், தினகரன் பப்ளிகேஷன்ஸ், சுமங்கலி பப்ளிகேஷன்ஸ், முரசொலி அறக்கட்டளை, மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள தயாளு அறக்கட்டளை, மதுரை சிவரக்கோட்டையில் மு.க. அழகிரிக்கு சொந்தமாக உள்ள தயா பொறியியல் கல்லூரி, தயா சைபர் பார்க் மற்றும் மாறனின் மகள் அன்புக்கரசிக்குச் சொந்தமான சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றின் மதிப்புகள் கணக்கிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள பிரபல ஆங்கில நாளேடான "The other side", கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என அம்பலப்படுத்தியுள்ளது.Image may contain: 2 people, people smiling, meme and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...