Wednesday, July 6, 2022

இன்னும் கொஞ்சம் நல்ல வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தை மறைக்க முடியல!

 70 களின் இறுதியில் மற்றும் 80 களில் வளர்ந்தவர்கள் நிறைய நினைவுகளை சேமித்து வைத்திருப்பவர்கள். . எலக்ட்ரானிக் சாதனங்கள் மிதமாக இருந்த காலம். ரேடியோ, கருப்பு வெள்ளை டிவி, சினிமா, புத்தகம் இவைதான் அதிக பட்ச பொழுது போக்காக அவர்களுக்கு இருந்திருக்கும். இசையோடு குறிப்பாக இளையராஜாவோடு வாழ்க்கையை நகர்த்தியிருப்பார்கள். பெல்பாட்டம் , பெரிய பூக்கள் போட்ட ஜார்ஜட் சேலையுமாய் சாலைகளில் திரிந்திருப்பார்கள்.வேலை தட்டுப்பாடு இருந்திருக்கலாம். ஆனாலும் அவ்ர்களின் காலத்தில் ஒரு திருப்தி நிலவியிருக்கும். காதலை அதிலும் முதல் காதலை நிறைய பாடலோடு கொண்டாடியிருக்கலாம். இன்று மிதமிஞ்சிய காலம். திகட்டுமளவிற்கு நிறைய பொழுது போக்குகள்... சேனல்கள், டி. ஆர்.பி ரேட்டிங்க், , ஃபேஸ் புக், வாட்ஸ் அப். இன்ஸ்டா.. பல காதல்கள் , பல ப்ரேக் அப்.. பார்க்கும் வேலை, சம்பளம், என எதையும் துடைத்து போட்டுவிட்டு அதிருப்தியிலேயே அடுத்தது என்ன என்று எதிர் நோக்குகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...