வரலாற்றில் ‘இரண்டாமவர்’ என்பது முக்கியத்துவம் பெறாத இடம் என்றாலும், முக்கியமான இடம்.
‘முதலாமவர்’ எல்லாமுமாகத் திகழ ‘இரண்டாமவர்’ உறுதுணையாக இருக்க வேண்டும். முதலாம் இடத்தில் இருப்பவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
எல்லாத் தகுதிகளும் இருந்ததாலேயே அண்ணா அவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
அண்ணா மறைவிற்கு பின் முதல்வர் பதவியேற்கவும் தகுதியுடைவராக இருந்தார். ஆனால் காலம் கருணாநிதியை கைகாட்டியது எம்ஜிஆர் உருவில். அப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
திமுகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தாலும் எம்ஜிஆர் தனது ஆட்சிக்காலத்தில் இரண்டாம் இடத்தைக் கொடுத்து தனக்கு அடுத்த இருக்கையில் இரண்டாம் இடத்தில் அமர்த்திக் கொண்டார்.
செல்வி.ஜெ.ஜெயலலிதா காலத்திலும் தனக்கான இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
அவரும் முதல் இடத்திற்கு வர எவ்வளவோ முயன்றும் பார்த்தார். தனிக் கட்சியும் ஆரம்பித்துப் பார்த்தார் ஒன்றும் வேலைக்காகவில்லை.
இரண்டாம் இடம் அவர் விரும்பித் தேர்தெடுத்த இடம் அல்ல. ஆனாலும் காலம் பூராவும் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இரண்டாம் இடத்திலேயே இருந்து வாழ்ந்து மறைந்தார்.
அப்படி தன் நீண்ட அரசியல் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி வரை இரண்டாம் இடத்தில் இருந்தவர்தான் அண்ணாவால் "நடமாடும் பல்கலைக்கழகம்" என அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன்.
நெடுஞ்செழியனை விட எந்தவிதத்திலும் திறமையானவர் அல்ல ஓ.பன்னீர்செல்வம்.
அப்படிப்பட்ட நெடுஞ்செழியனே தன் சூழ்நிலை கருதி கடைசி வரை தன்னுடைய நிலை இதுதான் என்று உணர்ந்தார்.
ஆனால் பன்னீர்செல்வம் தனது நிலையை உணரவில்லை.
அதுதான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
___________________________
#நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்தநாள் இன்று 11 ஜுலை 1920.

No comments:
Post a Comment