இதெல்லாம் ஜெயலலிதா இறந்த போதே நடந்திருக்க வேண்டியது.
அப்போது இவர்களை பிரியவிடாமல் தடுத்த சக்தி எது?
பணம்
பதவி
இது மட்டுமே.
என்றாலும் யார் தலைமையில் என குழப்பம் வந்த போது இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி 4.5 வருடம் ஆட்சி கவிழாமல் பல்வேறு நலத்திட்டங்களை தந்தது யாரென்று கேட்டால் நிச்சயமாக நரேந்திர மோடியின் மத்திய அரசு என நிச்சயமாக சொல்ல முடியும்.
பலமுறை அப்போதைய எதிர் கட்சி தலைவர் இவர்களை அடிமை அரசு என வர்ணித்தார் ஆனால் இதன் பின்னால் உள்ள அரசியல் என்னவென்றால் எவ்வளவு முயன்றும் கட்சியையும் உடைக்க முடியவில்லை ஆட்சியையும் கலைக்க முடியவில்லை.
இதன் வெளிப்பாடே பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட "ஆக ஆக ஆக எடப்பாடி பதவி விலகனும்" என்ற புலம்பல்.
ஆனால் இவர்கள் மோடிஜியின் செயலுக்கு நன்றியுணர்வுடன் நடந்து கொண்டார்களா என்றால் சர்வ நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம்.
2019 பாராளுமன்ற தேர்தலிலும் சரி 2021 சட்டமன்ற தேர்தலிலும் சரி, பாஜக அவ்வளவு எளிதாக வெல்ல முடியாத தொகுதிகளை ஒதுக்கினார்கள்.
கூட்டணி கட்சியான பாஜக வென்றுவிட கூடாது என பல தொகுதிகளில் மிக மெத்தனமாகவும், எதிர்கட்சி வென்றாலும் பரவாயில்லை ஆனால் தேசிய கட்சி உள்ளே வரக்கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது.
இரு கழகங்களும் பல்வேறு சமயங்களில் நாங்கள் பங்காளிகள் ஆகவே எங்களை தவிர வேறு யாரும் தமிழகத்தை ஆள முடியாது என்றும், திராவிட கட்சியை தவிர வேறு யாரும் இங்கு ஆட்சியை பிடிக்க முடியாது என ஒருவித இறுமாப்புடன் பேசியது உண்மையான தேசியவாதிகள் மனதில் எரிச்சலை உண்டாக்கியது என்னவோ நிஜம்.
2004 முதல் 2014 வரை மத்தியில் கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சியில் இருந்து அந்த கூட்டணி மந்திரி சபையில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தும் முக்கியமான திட்டங்கள் ஏதும் சொல்லும்படியாக தமிழ்நாட்டுக்கு ஏன் வரவில்லை என யோசித்தால் "நமக்கு நாமே" திட்டத்தை கடைபிடித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் முதல் பல்வேறு திட்டங்களை கடை பிடித்ததால் மட்டுமே.
ஒருமுறை ஒரே ஒரு முறை தேசிய கட்சியை தமிழ்நாட்டில் ஆளவிட்டால் காமராஜர் காலத்திற்கு பிறகு நேர்மையான ஊழலில்லாத ஆட்சி அமைய வாய்ப்புள்ளது
ஆனால்
தமிழன் க்வாட்டர், கோழி பிரியாணி, ஓட்டுக்கு பணம் , போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு இலவச அறிவிப்புகள் இதை தாண்டி வெளியே வராமல் இருக்க மூளைசலவை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.
மக்கள் இலவசத்துக்கு மயங்காமல் தன்னுடைய வாக்கை 500 அல்லது 1000 க்கு விற்காமல் தன்னுடைய சந்ததியினர் நல்ல சூழலில் வாழ விரும்பினால் மாற்றம் வரும்.
வருங்காலம் மிக பிரகாசமாக மாற மக்களுக்கு மனமாற்றம் வர வேண்டும்..
50 வருடங்களாக மாநில கட்சிகள் ஆண்டாயிற்று ஒரு முறை அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமைப்போமா!

No comments:
Post a Comment