''எங்களின் நற்பெயரை கெடுக்கும் கருத்துக்களை கூற, பன்னீர்செல்வம் உறுதுணையாக இருக்கக்கூடாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: பன்னீர்செல்வம் வீட்டில், அவரது அனுமதியோடு, முன்னாள்எம்.எல்.ஏ., செல்வராஜ், என் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

'தி.மு.க., நிர்வாகிகளோடு தொடர்பு வைத்துள்ளேன்.'ஆவின் நிறுவனமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்தும் பெட்ரோல் பங்கை, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளேன். தி.மு.க., ஆட்சியில் கிடைத்தது' என, கூறியுள்ளார்.
20 ஆண்டுகள் ஒப்பந்தம்
அவர் அம்பு; எய்தவர் பன்னீர்செல்வம். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து, பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கப்பட்டது; கடந்த மாதம் 25ம் தேதி அமைச்சர் காந்தி திறந்து வைத்துள்ளார்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ஆவின் நிறுவனம் இணைந்து, ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2020ல் பங்க் ஆரம்பிக்கப்பட்டது; 20 ஆண்டுகள் ஒப்பந்தம். இது கூட தெரியாமல், பன்னீர்செல்வம் துாண்டுதலில் செல்வராஜ் கூறி உள்ளார்.
![]() |
ஏன் உங்களோடு பயணித்தோம் என வெட்கமாகவும் உள்ளது.செல்வராஜ் மீது வருத்தம் இல்லை. எங்களுடன் பயணித்த பன்னீர்செல்வம், இதுபோன்ற கருத்துக்களை கூற, எப்படி ஊக்கப்படுத்துகிறார் என்று தெரியவில்லை.
அன்பு கட்டளை
கட்சிக்குள் உள்ள கருத்து பரிமாற்றங்களை, மனக்கசப்பு வரும்போது காட்டிக் கொடுப்பவன் கேவலமான அரசியல்வாதி. ரகசியத்தை கட்டிக்காத்து வெல்பவன் தான் அப்பழுக்கற்றஅரசியல்வாதி.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றியபோது நடந்த சம்பவங்களை, நான் ஒன்று கூட வெளியில் கூற மாட்டேன். இதுபோன்ற கருத்துக்களை கூற, பன்னீர்செல்வம்உறுதுணையாக இருக்கக் கூடாது என, அன்பு கட்டளை இடுகிறேன்.
ஜெயலலிதா தயவால் மூன்று முறை முதல்வரான பன்னீர்செல்வம், ஆட்சியாளர்களுடன் இணைந்து, அவர்களை பாராட்டும்நிலை வந்தபோது, பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது.தொண்டர்களையும், மக்களையும் காக்கக்கூடிய தலைவராக பழனிசாமி வந்துள்ளார். அவரோடு பின்னால் இருந்து, கடுமையாக உழைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment