Saturday, July 9, 2022

கலாம் அவர்களையே விமர்சித்த புத்தி இல்லாத தற்குறிகள் இதெல்லாம் கேவலம்.

 லதா மங்கேஸ்கருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி 1999ல் பாஜக அரசால் கொடுத்த போதும் சரி, 2012ல் சச்சினுக்கு காங்கிரசால் கொடுத்த ராஜ்ய சபா பதவியாலும் சரி... இருவரும் கடைசி வரை எந்த கட்சிக்கும் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவில்லை... யாரும் அவர்களை அடையாளப் படுத்தவும் இல்லை. வட நாட்டினரால் இருவரும் இந்த அளவு வன்மங்களுக்கு ஆளாகவும் இல்லை. நேற்று முதல் எங்க திரும்பினாலும் சரி கமெண்டுகள், பதிவுகள் முழுக்க ஜாதிய வன்ம வாந்திகளும் இசைஞானியை பற்றிய சர்காம்ஸ்களும் தான் அள்ளி தெளிச்சிட்டிருக்காய்ங்க...

மற்றவர்கள் யாரும் நம் மேல் எப்படி எந்த விருப்பையும் வெறுப்பையும் திணிக்க நாம் அனுமதிக்க மாட்டோமோ அதே போல தான் நம்மளும் மற்றவர்கள் மேல் எந்த விருப்பையும் வெறுப்பையும் திணிக்கும் தார்மீக உரிமை அற்றவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் தனக்கு கிடைக்கும் பதவியோ விருதோ ஏற்றுகொள்வதும் ஏற்று கொள்ளாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை... இதில நமக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கலைங்கிற ஒரே காரணத்தை வைத்து சாதிய வன்மத்தை ஓவரா கக்கறது தான் நம்முடைய கலாச்சாரமா போயிருச்சோன்னு மிகுந்த வேதனையுடன் தோண செய்கிறது.
ராஜ்யசபா நியமன உறுப்பினர் முழுக்க முழுக்க ஜனாதிபதியால் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் இசை, கலை, பண்பாடு, விளையாட்டு இது போன்ற பல துறைகளில் பெரும் சேவை செய்தவர்களுக்கு பாராட்டி மரியாதை செலுத்தும் வகையில் கொடுக்க படும் பதவி தானே தவிர மக்கள் பிரதிநிதிகளான MLA, மாநிலங்களவை MP அல்லது மக்களவை MP என அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களால் தேர்ந்தெடுத்து கொடுப்பது அல்ல என்பதே இந்த வம்ம பதிவர்களுக்கு மொதல்ல தெரியுமா இல்லையான்னு நமக்கு தெரியல.
இதே அரசாங்கம் இசைஞானிக்கு பத்ம விபூஷன் கொடுத்த போது இந்த பொங்கு பொங்காத ஜாதிய வன்மத்தை கக்காதவங்க இப்ப எதுக்கு புதுசா இப்படி பொங்கறாங்க அப்படீன்னு யோசிக்கும் போது கண்ணில ஒரு பதிவு பட்டுச்சு... பாசிச கட்சியின் மூலம் MP பதவி வழங்கபட்டதால இனி அவர் அந்த கட்சியில் இணைய போகிறார் என்பது தான் அந்த பதிவின் சாராம்சம்.. இவுங்கள எல்லாம் வெச்சிகிட்டு என்னத்த சொல்ல... நேத்து பத்ம விபூஷன், இன்று ராஜ்யசபா நியமன உறுப்பினர் (இசை), இனி நாளைக்கு இன்னொரு தரமான சம்பவம் திரும்ப நடக்க போகுது.. அதுக்கு என்ன பண்ண போறாங்கன்னு தெரியல. எதுக்கும் இப்பவேயே வம்மங்களை ரெடி பண்ணி வெச்சிக்குங்க. அடுத்த வருடம் அது உங்களுக்கு வாந்தி எடுக்க இன்னும் சுலபமா இருக்கும்.
விமர்சனம் என்பது நேர்மையுடன் நாகரிகமான முறையில் இருக்கனுமே தவிர இப்படி எடுத்ததுகெல்லாம் அவர் ஜாதிய வன்மத்தையும் குடும்ப உறவுகள் பற்றி அசிங்கமா பேசறதாகவும் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் விமர்சிப்பவர்கள் தான் தங்களை சுய பரிசோதனைக்கு ஆளாக்கி கொள்ள வேண்டுமே தவிர விமர்சிக்கபடுபவர் அல்ல என்பது தான் இசைஞானியின் விஷயங்களில் நாம் புரிந்து கொள்ளும் ஆகச்சிறந்த நிதர்சணம். அது மட்டுமல்லாமல் இத்தனை விஷ விமர்சனங்களையும் விடிய விடிய கக்கி வெச்சிகிட்டு போயி கடைசியில் அவர் பாட்ட தான் கேட்டு ரசிக்க போறாங்க இந்த ப்ளடி பக்காஸ்..
நமக்கு பாசிச கட்சியை பிடிக்காது அப்படீங்கிறதுக்காக மத்திய அரசாங்கம் கொடுக்கும் விருதை புறக்கணிக்க வேண்டும் என்பது ஏற்புடையதில்லை. நமக்கு பிடிக்கவில்லை என்றால் கடந்து போயிறலாம். பிடித்திருந்தால் வாழ்த்தலாம். மாறாக ஜாதி, குடும்ப உறவு முறையிலான வன்மத்தை கக்கீட்டு கடைசியில நாங்க இப்படி அப்படியெல்லாம் பகுத்தறிவு பாசறை தலைவர்களால் கலாச்சாரங்களால் வளர்க்கப்பட்ட பண்பானவர்கள்னு சொல்லிக்கிறதில எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. மாறாக இத்தைகைய செயல்களால் இசைஞானியோடு அல்லாமல் அப்படி பட்ட அற்புதமான தலைவர்களின் கோட்பாடுகளையும் புகழையும் சேர்த்து தான் அவமானப்படுத்துகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இசைஞானியால் புகழும் பெருமிதமும் அடையப் பெறும் ராஜ்யசபா நியமன உறுப்பினர் பதவிக்கு மனமார்ந்த நல்
வாழ்த்துகள்
.... 🌺❤️🙏
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...