Friday, July 8, 2022

இது ஆண்களுக்கு மட்டுமல்ல.. அதிக ஆசை கொண்ட பெண்களுக்கும்...

 ஒரு பட்டினத்தில் ஒரு புதிய கடை திறக்கப்பட்டது. அங்கு எந்த இளைஞனும் சென்று தன் மனைவியாக ஒரு பெண்ணை

தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஒரு இளைஞன் அந்த கடையை அடைந்தான். உள்ளே சென்ற போது இரண்டு கதவுகள் இருந்தன. முதல்
கதவில் எழுதப்பட்டிருந்தது " "இளமையான மனைவி" இரண்டாம் கதவில் " கொஞ்சம் வயது அதிகமான மனைவி". முதல் கதவை தள்ளிக் கொண்டு சென்றான் அந்த இளைஞன்.
அங்கு யாரும் இருக்கவில்லை மீண்டும் இரண்டு கதவுகள் இருந்தன முதல் கதவில் " அழகான மனைவி " இரண்டாம் கதவில் " சாதாரணமான மனைவி".. மீண்டும் முதல் கதவை தள்ளிக் கொண்டு சென்று பார்த்தபோது அங்கும் அழகாகவோ சாதாரணமாகவோ யாரும் இருக்கவில்லை.
மீண்டும் இரண்டு கதவுகள் இருந்தன முதல் கதவில் " நன்றாக சமைக்க தெரிந்தவள்" இரண்டாம் கதவில் " சமைக்க தெரியாதவள்".
முதல் கதவை மீண்டும் தேர்வு செய்து உள்ளே சென்றான் இளைஞன். நீங்களும் இதையே தான் செய்திருப்பீர்கள் 😂😂😅...
மீண்டும் இரண்டு கதவுகள் இருந்தன " நன்றாக பாடுபவள்"
" பாடத் தெரியாதவள் " என்று.
முதல் கதவை மீண்டும் திறந்து சென்றான் இளைஞன்.. இன்னும் இரண்டு கதவுகள் இருந்தன..
" நிறைய வரதட்சிணை கொண்டு வருபவள்" , " வரதட்சிணை கொண்டு வராதவள்" என்று..
மீண்டும் முதல் கதவை தேர்ந்தெடுத்தான் இளைஞன்.. கணக்கு போட்டு, யோசித்து புத்திசாலி தனமாக தேர்வு செய்தான்.
ஆனால் இந்த முறை உள்ளே சென்ற போது ஒரு நிலைக் கண்ணாடி
தொங்கிக் கொண்டு இருந்தது.. 🙄🙄
அதில் எழுதப்பட்டு இருந்தது..
"நீங்கள் அதிகமான குணங்களின் எதிர்பார்ப்பில் இருப்பவராக தெரிகிறது.. நேரம் வந்துவிட்டது சற்று உங்கள். திருமுகத்தையும் ஒருமுறை பார்த்து கொள்ள" என்று
😅😅😂😂😂😂😂😂🤣🤣🤣...
இப்படி தான் போகின்றது வாழ்க்கை ஆசை ஆசை ஆசை... கதவுகள் திறந்து திறந்து... மறந்தே விட்டோம் நம் முகத்தை பார்த்து கொள்ள. யார் தன் முகத்தை பார்க்கின்றனரோ அவர்கள் ஆசைகள் முடிவு பெறுகிறது. யார் பார்க்கவில்லையோ கதவுகளை திறந்து கொண்டே வாழ்க்கை முடிந்துவிடும்.
*🌹ஓஷோ ❤*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...