ஒரு விவசாயி கடுமையான பஞ்சத்தில், சோற்றுக்கு வழி இல்லாமல் தனது நிலம் தரிசாக கிடப்பதை பார்த்து கண் கலங்கினான்... அப்போது அவன் கண் முன்னே ஒரு ரிஷி(சாமியார்) பாத யாத்திரை செல்வதை கண்டு வேகமாக அவரிடம் ஓடியவன் ரிஷியை விழுந்து கும்பிட்டு தாங்கள் எனக்கொரு உதவி வேண்டும் என்றான், "கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையப்பா" என்று ரிஷி கூற... சாமி நான் கேட்கும் உதவி... இப்போது நான் கடுமையான பஞ்சத்தில் இருக்கிறேன், எனது மனைவி மக்கள் எல்லாம் பசியால் தினம் அழும் சத்தம் என் சதரமே கூசுகிறது, "சரிப்பா அதற்கு நான் என்ன செய்ய முடியும்!" எனக்காக நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும், "என்ன? பிரார்த்தனை!" அதாவது என் ஆயுள் முழுவதும் எனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அத்தனையும் இப்போதே கொடுக்கும் படி நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும் "அட! அப்படி நான் பிரார்த்தனை செய்தால் உனது ஆயுள் சீக்கிரமாக முடிந்துவிடுமே!" பரவாயில்லை சாமி! என் மனைவி மக்கள் வயிறாற உணவு உண்டாலே போதும் என்றான்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, July 8, 2022
தருமம் தலைகாக்கும்.
அவன் கேட்ட வரத்தால் அதிர்ந்துபோன ரிஷி சரி உன் விருப்பமே... என்று கூறி அப்படியே அவன் நிலத்தில் அமர்ந்து ஈசனிடம் அவனுக்காக பூஜித்து பிரார்த்தனை செய்கிறார், சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த ரிஷி வீட்டிற்கு சென்று பார் உனக்கொரு அதிசயம் காத்திருக்கு வேகமாக வீட்டுக்கு வந்ததும் வீடு முழுவதும் அரிசி காய்கறிகள் பழங்கள் அவனுக்கும் அவன் மனைவி குழந்தைகளுக்கும் ஆனந்தம் தாங்கவில்லை ஈசன் கண்ணை திறந்து விட்டார் எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கிறதே ஆனந்தமாய் உண்டனர் மாதங்கள் பல செல்ல ...
மீண்டும் அதே வழியில் வருகிறார் இங்கே ஒரு விவசாயியை பார்தேனே பேர் ஆசையால் இறந்துவிட்டானா என ஆக்கம் பக்கம் பார்க்கிராகிறார்...
அப்போது மக்கள் அவன் குடிசையில் இருந்து கூட்டம் கூட்டமாக உணவு பொருள்கள் எடுத்து செல்வது பார்த்து வியந்து இன்னுமா இவன் விதி முடியவில்லை கிடைத்த உணவை தர்மம் அல்லவா செய்கிறான் ரீஷி மறுபடியும் ஈசனிடம் விளக்கம் கேட்கிறார் அதற்கு
ரீஷியே நீங்களோ என் நேசமிகு மனிதர் நிங்கள் கேட்டதால் அவனுக்கு அவன் ஆயுள் வரையான உணவை கொடுத்தேன் ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா அந்த உணவை தன்னை போல ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு தானம் செய்து கொண்டு இருக்கிறான் அவன் நிறுத்தும் வரை நாணும் நிறுத்தமுடியாது அவன் செய்யும் தானம் அதை பெற்றவர்கள் வாழ்துதான் அவனை வாழவைக்கிறது என்றார் ..
இறைக்கின்ற கேணிதான் சுரக்கும் ..
கொடுகின்ற கைகளே மனக்கும் ...
தானத்தில் சிறந்தது அன்னதானம் ..
தருமம் தலைகாக்கும் ..!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment