அவரை முயற்சி செய்யச் சொன்னேன் கீழ்க்கண்டவாறு.
நீங்க முயற்சி செய்யுங்களேன்.
6 வயதில் துறவறம் மேற் கொள்ள வேண்டும். 14 வருடங்கள் வேதம் முதலியன கற்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் உண்ண வேண்டும். இரு வேளை குளிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பூஜை செய்ய வேண்டும். பின் அங்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், குங்குமப் பிரசாதம் வழங்க வேண்டும்.
மழை காலங்களில் எங்கு தங்கினாலும் அந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உள்ளேயே பூஜை முதலியன செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அத்வைதத்தை உபன்யாசம் செய்ய வேண்டும்.
அந்த மடத்தில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கு படிக்கும் பிள்ளைகள், சிப்பந்திகளுக்கு உணவளிக்க வேண்டும். மாகா பெரியவர் இருந்த பொழுது ஒரு பல சரக்குக் கடையில் கடன் வாங்கி அவர்களுக்கு உணவிட்டிருக்கிறார்.பின் ஆஸ்ரம நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். கும்பாபிஷேகம் நடக்கும் கோவில்களில் அழைப்பு இருந்தால் அதிகாலை செல்ல வேண்டும்.
தரையில்தான் படுக்க வேண்டும்.
முக்கிய நபர்கள் வந்தால் அவர்களைச் சந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அதற்கு அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். முயற்சி செய்யுங்களேன்
No comments:
Post a Comment