'நதிகளை வழிபடுவதே சனாதனம்' என்ற கவர்னர் ரவியின் உரையை படித்தேன். 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். பண்டைய மனித இனம், ஆற்றங்கரைகளில் தோன்றியதாக, தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், கவர்னர் என்ன சொன்னாலும், அதை மறுத்துச் சொல்ல, ஒரு கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. யானையை பார்த்த குருடர்களை போல, அந்த விதண்டாவாத கும்பல்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேசுகின்றனர்.'சனாதனம் என்பது ஒரு மதமல்ல' என்றும் கவர்னர் கூறியுள்ளார். அது உண்மையே... அன்பு, பண்பு, மரியாதை, வழிபாடு போன்ற மென்மையான செயல்களே சனாதனம் என்பதை, ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். திராவிட மாடல்களுக்கு இதுவெல்லாம் விளங்கவில்லை. தாங்கள் அறிவிலிகளாக இருப்பதோடு, சமுதாயத்தையும் அறிவிலிகளாக மாற்றத் துடிக்கின்றனர். இது, தமிழகம் செய்த பாவம்.
No comments:
Post a Comment