அ.தி.மு.க.,வில் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் புட்டுபுட்டு வைக்கும் 'ஆடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அ.தி.மு.க., கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் செயலர் நாஞ்சில் கோலப்பனிடம், முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில், பொன்னையன் கூறியிருப்பதாவது: கட்சி, ஒரு கோடீஸ்வரனிடம் இருந்து மற்றொரு கோடீஸ்வரன் கையில் செல்கிறது. தொண்டர்களுக்கு ஒரு பாதிப்பும் வராது. அவர்கள் இரட்டை இலை பின்னால் உள்ளனர்; தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாக்க, டில்லியை பிடித்துக் கொண்டு ஆடுகின்றனர்.
தடுமாறும் தொண்டர்கள்
தங்கமணியும், இப்போது ஸ்டாலினை சந்திக்க ஓடுகிறார். கே.பி.முனுசாமி, ஸ்டாலினை திட்டுவதை நிறுத்தி விட்டார்.பெட்ரோல் பங்க் வாங்கியது எல்லாம் சாதாரணமப்பா. அவர், துரைமுருகனை பிடித்து கிரானைட் குவாரி உரிமம் வாங்கியுள்ளார். மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். பணத்தை பாதுகாக்க இப்படி ஆடுகின்றனர்; தொண்டன் தடுமாறுகிறான்.
முனுசாமி நக்சலைட்டாக இருந்தார். அப்போதைய டி.ஜி.பி., தேவாரம் கூறியதால், ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். அவர் ஸ்டாலின் தயவுக்காக, தி.மு.க.,வை திட்டுவதில்லை. அண்ணாமலை திட்டுகிறார்.நம்ம ஆட்கள் கோடி கோடியாக சம்பாதித்ததால், தி.மு.க.,வை திட்டுவதில்லை. பழனிசாமி மட்டும் ஸ்டாலினை கொஞ்சம் திட்டுகிறார். மாவட்ட செயலர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை.
ஒவ்வொருவரும் 100 கோடி, 200 கோடி ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளர். ஜெயலலிதா இருந்தபோது, மாவட்ட செயலர்களுக்கு 1.5 சதவீதம் கமிஷன். தற்போது மாவட்டச் செயலர்கள், 14 சதவீதம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பிரித்து கொடுக்கின்றனர். தலைமை கழகத்திற்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
![]() |
பழனிசாமி பக்கம் சென்றால் தான் சம்பாதித்ததை பாதுகாக்க முடியும். தளவாய்சுந்தரம் தான் இந்தியாவிலேயே பெரிய புரோக்கர்; பழனிசாமியை கெடுப்பதே அவர் தான். பொதுக்குழுவில் நான் தீர்மானங்களை படிக்கும் முன், சண்முகம் நாய் கத்துவது போல் ரத்து, ரத்து என கத்தினார்; முனுசாமியும் கத்தினார்.கொள்ளையடிக்க அனுமதித்ததால் தான், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் அவர் பக்கம் உள்ளனர்.
அவர்கள் கூறுவதற்கு எல்லாம் பழனிசாமி தலையாட்டுகிறார். சி.வி.சண்முகம் பகலிலேயே குடித்துக் கொண்டிருப்பார். அவர் கையில், 19 வன்னியர் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜாதி அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அவர்கள் பின்னால் பழனிசாமி தொங்குகிறார்.
வேறு வழியில்லை
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 42 எம்.எல்.ஏ.,க்களில், ஒன்பது பேர் மட்டும் பழனிசாமி கையில் உள்ளனர். மீதி பேரை வேலுமணி, தங்கமணி கையில் வைத்துள்ளனர். இருவரும் திருட்டு பசங்கள். ஆனால், பழனிசாமிக்கு வேறு வழியே இல்லை.முதல்வர் பதவி வேண்டும் என்பதற்காக, வேலுமணி, தங்கமணி, முனுசாமி, சி.வி.சண்முகம் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
நாளை முனுசாமியே ஒற்றைத் தலைமைக்கு வரலாம்.எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை வைத்து தான் எதிர்காலம். முன்பு எம்.எல்.ஏ.,வுக்கு 1 சதவீதத்திற்கு மேல் கமிஷன் போகாது. தற்போது 6 சதவீதம் வரை போகிறது.ஜாதி அடிப்படையில் வேலை செய்கின்றனர். கொள்கையை காற்றில் பறக்க விட்டு, பதவியை காப்பாற்றினால் போதும் என நினைத்து முட்டாள்தனமாக பழனிசாமி ஓடுகிறார்.
யாரும் கட்சிக்கோ, எம்.ஜி.ஆருக்கோ, ஜெயலலிதாவுக்கோ விசுவாசமாக இல்லை. தொண்டர்களுக்கு ஒன்றும் ஆகாது; எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாஆவி எல்லாரையும் காப்பாற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment