பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றார். இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். பலர் காயமுற்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

இன்று காலை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் சென்னை வானகரத்தில் பொதுக்குழுவுக்கு எதிர்கட்சி தலைவரான பழனிசாமி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் தனது பிரசார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.இதற்கிடையே அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது.
தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் பின் வாங்கினார்.
No comments:
Post a Comment