அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு, ஒற்றை தலைமையாக பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்:l அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் வழியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்l ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்l பொதுச்செயலர் என்ற தலைமையை மீண்டும் உருவாக்கும் வகையில், இரட்டை தலைமையான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு பிப்.,1ல் கட்சி செயற்குழுவில், கட்சி சட்ட திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றுக்கு, கடந்த பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், அந்த திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டன. இந்த திருத்தங்கள் காலாவதியானாலும், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அவர்கள் தலைமையில் நடந்த, கட்சி அமைப்பு தேர்தல்கள் உட்பட அனைத்து செயல்களையும், பொதுக்குழு ஏற்றுக் கொள்கிறதுl ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய, வலிமையான ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும். எனவே, மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது
சட்ட திருத்தம்
l பொதுச் செயலர் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பொறுப்பு. பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், கட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமை கழக பொறுப்புகளில் குறைந்தது, ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுபவர் பெயரை, குறைந்தது 10 மாவட்ட செயலர்கள் முன்மொழிய வேண்டும்; 10 மாவட்ட செயலர்கள் வழி மொழிய வேண்டும். மாவட்ட செயலர் ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான் முன்மொழியவோ, வழி மொழியவோ வேண்டும். பொதுச் செயலர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார் என கட்சி சட்ட திட்ட விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன
துணை பொதுச் செயலர்
l கட்சி துணை பொதுச் செயலர்களை, பொதுச் செயலர் நியமனம் செய்வார். துணை பொதுச் செயலர், கட்சி விதிகளுக்கு உட்பட்டு தங்கள் பணிகளை நிறைவேற்றுவர். கட்சி பொதுச் செயலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதி மட்டும் நீக்கவோ, மாற்றவோ, திருத்தவோ உரியதல்லl
பொதுச் செயலர் பதவி காலியாகும் நிலை ஏற்பட்டால், கட்சியை வழிநடத்த, இடைக்கால பொதுச் செயலர் பதவி உருவாக்கப்பட வேண்டும். அதற்காக சட்ட திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படுகிறது. புதிய பொதுச் செயலர் தேர்வாகும் வரை, பொதுக்குழுவால் இடைக்கால பொதுச் செயலர் தேர்வு செய்யப்படுவார்
. அவர் பொதுச் செயலருக்கான பணிகளை செய்ய வேண்டும். இடைக்கால பொதுச் செயலரை தேர்வு செய்ய, முந்தைய பொதுச் செயலரால் நியமனம் செய்யப்பட்ட தலைமை கழக செயலர்களுக்கு, கட்சி பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் அளிக்கப்படுகிறது. கூட்டம் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும்
இரட்டை இலை
l
புதிய பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் வரை, கட்சியின் தலைமை நிலைய செயலர் பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்படுகிறார். அவர், கட்சி நிர்வாகத்தை நடத்த ஒரு மனதாக அங்கீகாரம் வழங்கப்படுகிறதுl பொதுச் செயலருக்கான தேர்தலை, நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்l
தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில், பொதுச் செயலர் கையொப்பம் இட வேண்டும்l முதல்வராக பழனிசாமி நிகழ்த்திய அளவற்ற சாதனைகளுக்கும், பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது
![]() |
கண்டனம்
l ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ரத்து செய்துள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அந்த திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படுகிறதுl கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை தடுக்க தவறியதோடு, மின் மிகை மாநிலத்தை, மின்வெட்டு மாநிலமாக மாற்றியதற்கும், சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கத் தவறி, அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, அமளிக்காடாக மாற்றியுள்ளதற்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுl
மேகதாதுவில் புதிய அணை கட்டும், கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவும், இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களின் மறுவாழ்வை மேம்படுத்தவும், மத்திய, மாநில அரசை வலியுறுத்தவும். நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தி.மு.க., அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டதுl
வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்l பஞ்சு நுால் விலையை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, ஜவுளித் தொழிலை பாதுகாக்க, மத்திய - மாநில அரசை வலியுறுத்தப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, கட்சியினர் மீது, பொய் வழக்குகளை புனைந்து பழிவாங்கி வரும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment